அதிபர் அப்துல் பஷீர் அவர்களின் சேவையும் எமது கல்லூரியின் வளர்ச்சியும்.
ஒரு திருப்தியான ஒப்படைப்பு.----
அல்ஹாஜ். எம்.ஸீ.ஏ. ஹமீத்.
(ஸ்தாபக அதிபர். கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி).
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி அதிபர் அல்ஹாஜ். ஏ.எச். அப்துல் பஷீர் அவர்களின்
25வருட அதிபர் சேவையினை கௌரவித்துப் பாராட்டி வெளியிடும் ~சாதனைநாயகன் அதிபர் பஷீர்.| எனும் மலருக்கு ~~அதிபர் அப்துல் பஷீர் அவர்களின் சேவையும் எமது கல்லூரியின் வளர்ச்சியும்.|| என்ற தலைப்பிற்கமைவாக கட்டுரை ஒன்றை எழுத எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக
எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்... அப்துல்பஷீர் அவர்களை கல்லூரிக்குள்
ஒரு உதவி ஆசிரியராகக் கண்ட நான் கல்லூரிக்;கு வெளியே நின்று அவரை ஒரு
அதிபராகவும் காணுகின்ற இரு வேறுபட்ட தன்மை கொண்டதான பார்வையை இச்சிறிய
கட்டுரைக்குள் உரைக்க முயன்றுள்ளேன்.
1970க்கு முன் இப்பிரதேச முஸ்லிம் பெண்களின் உயர் கல்விவளர்ச்சியில்; இருந்த பெரும் இடைவெளியை நிரப்ப
இப்பகுதிக்கல்விமான்கள்..தனவந்தர்கள்..பொதுமக்கள்..அடங்கிய குழுவினர் மிக
அக்கறையுடன் செயல்பட்டதன் விளைவாக இவ்வமைவிடத்தில் சிறு நிலப்பரப்பில் இருந்த
சாய்ந்தமருது அல்.அமான் வித்தியாலயமானது முன்னாள் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற
உறுப்பினர் மர்ஹ_ம். அல்ஹாஜ். எம்.சீ. அகமது அவர்களின் உறுதுணையுடனும் முன்னாள் கல்வி அமைச்சர்
மர்ஹ_ம். அல்ஹாஜ். கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இன்றியமையாத
ஒத்துழைப்புடனும் 01.01.1971 தொடக்கம் பெண்களுக்கான ஒரு தனிப்பாடசாலையாக கல்முனை மஹ்மூத் மகளிர் மகா
வித்தியாலயம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது நாமறிந்ததே..
இதன் ஸ்தாபக அதிபராக நான் கடமையேற்றேன். அச்சமயம் எதிர்நோக்கப்பட்ட பற்பல
நடைமுறைப் பிரச்சினைகளில் தலையாய கல்விப்பிரச்சினையாக இனம்காணப்பட்டது ஆரம்பத்தில்
கல்லூரியில்; சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகளில் உயர்தர வகுப்பில் கற்பவர்களுக்கு
உரிய முறையில் கற்பிக்க விசேட பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இன்மையே.
ஓர் உதவி ஆசிரியராக....
இக்காலகட்டத்தில் 01.03.1975ல் விசேட பயிற்சி பெற்ற கணித ஆசிரியரான ஜனாப். ஏ.எச்.அப்துல் பஷீர் அவர்கள்
இங்கு மாற்றம் பெற்று வந்தது இம்மாணவிகளின் கல்விக்கு ஒரு பேருதவியாக அமைந்தது.
கணிதபாடம் கசக்கும் என்ற சில மாணவிகளின் பொதுவான மனநிலையை முதல் வருடத்திலேயே
மாற்றி கணித பாடத்தில் நவீன உத்திகளைக் கடைப்பிடித்துப் பயிற்சியளித்தார். அதே
வருடத்தில் மாணவிகள் கணித பாடத்தை விருப்புடன் கற்றுப் பொதுப்பரீட்சையில் சிறந்த
பெறுபேறுகளை .h.ட்டக் காரணமாய் அமைந்தார்.
சாய்ந்தமருதின் புகழ்பூத்த பெருமைக்குரிய குடும்பத்தில் உதித்த ஜனாப்.
எம்.வை.ஏ. ஹமீது உடையார் அவர்களின் புத்திரராகப் பிறந்த பஷீர் அவர்கள் அன்று ஒரு
உதவி ஆசிரியராகச் சேர்ந்ததிலிருந்து அதிபராகிய என்னுடன் இணைந்து அவர் பணியாற்றிய 6 வருட காலங்களிலும் கல்லூரியின் ஸ்திரத்தன்மைக்காக கடுமையாக உழைத்தார். தனது
கடமைக்கப்பாலுள்ள நேரங்களிலும் விடுமுறை காலங்களிலும் பாடங்களைக் கற்பித்தலுடன்
நின்று விடாது கல்லூரியை வடிவமைத்தல்.. புறக்கிருத்தியச் செயற்பாடுகள் என்பவற்றில்
அவர் வழங்கிய ஒத்துழைப்புகள்.. ஆலோசனைகள்....என்பன இக்கல்லூரியின் வளர்ச்சியில்
வரலாறுகளாகப் பதிவுசெய்யத்தக்கன. தவிரவும் இக்கல்லூரியை பசுமைவளம் கொழிக்கச்
செய்வதிலும் இவருடைய பங்களிப்பும் ஆலோசனைகளும் இன்றியமையாதவையாயிருந்தன..
மஹ்முத்மகளிர் கல்லூரி எட்டுவருடகாலம் துரிதமாக வளர்ச்சிகண்டு வரும் போது
ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தினால் பாடசாலை சின்னாபின்னமாகிப் பெரும்
அழிவுக்குள்ளானது. அச்சமயம் அழிவுற்ற கட்டிடங்கள்.. கொட்டில்கள்.. அனைத்தையும்
வெகுதுரிதமாகச் சீர்செய்து கல்விப்பணி தொடர என்னுடன் இணைந்து இராப்பகலாகப்
பாடுபட்ட ஆசிரியர்கள் சிலரில் அப்துல்பஷீரின் பெயர் முக்கியமாக இடம்பெறுகிறது.
தவிரவும் அவருக்கிருந்த பன்முகத்தன்மையான திறமைகள் காரணமாகப் பாடசாலை
விளையாட்டுப் போட்டிகள்.. விழாக்கள்..வைபவங்கள்.. சிறப்புடன் நிகழ தக்க
ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் எப்போதும் வழங்கிச் செயற்பட்டவர். பாடசாலையின்
சகலதுறைகளிலும் இவரது பங்களிப்பு ஒன்று நிச்சயமாகப் பின்னணியிலிருக்கும்.
தான் ஒரு எழுத்தாளனாக இருந்து ~~அவள் செத்துக் கொண்டு வாழ்கிறாள்..|| என்ற குறுநாவலை எழுதியதோடு நின்றுவிடாது மாணவிகளையும் எழுத்துத்துறையில்
ஊக்கப்படுத்துவதற்காக ~கொடி| என்ற காலாண்டுச் சஞ்சிகையை ஆரம்பித்தவர் அவர். மேலும் கல்லூரியின் பருவகால
வெளியீடுகள் கல்லூரியின் பத்தாண்டு நினைவுமலர் ஏனைய விஷேட வெளியீடுகள் பலவற்றிலும்
அவரது எழுத்தாற்றல் விரவிக் காணப்பட்டது;. அப்துல்பஷீரின் பல்வேறுபட்ட
ஆற்றல்களையும்; திறமைகளையும் அறிந்த அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இவரது சேவையை இரு
வருட காலத்திற்கு கேட்டுப் பெற்றுப் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹ்முத்மகளிர் கல்லூரியின் அதிபர்; சேவையிலிருந்து நான் ஓய்வுபெறத்
தீர்மானித்த சமயம் எனக்குப் பின்னர் இக்கல்லூரி அதிபர்பதவியை வகிப்பவர்
கல்லூரியின் வளர்ச்pயுடன் தொடர்புடைய அனைவரினதும் பூரண ஒத்துழைப்பைப் பெறக்கூடியவராகவும்
தியாகசிந்தையும் கடின உழைப்பும் கொண்டு செயலாற்றக்கூடியவருமான ஒருவரிடமே
இக்கல்லூரியை ஒப்படைத்தால்தான் புதிதாக உருவாகிய இம்மகளிர் கல்லூரியின்
துரிதவளர்ச்சி தங்குதடையின்றி;ச் செல்லும் என பலரும் எண்ணிணோம்.. அதற்காக
விசேடமாகக் கூட்டப்பட்ட ஆசிரியர் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்ட போது
இக்கல்லூரியில் சேவைமூப்பில் கூடிய பலர் இருந்தபோதிலும் அல்ஹாஜ். ஏ.எச்.அப்துல்
பஷீர் அவர்களிடமே அதிபர் பதவியை ஒப்படைக்க வேண்டுமென்ற கருத்தாடலை ஏகமனதாக
எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் அப்துல்பஷீர் அவர்கள் இன்னும் சில நாட்களில் தான்; வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புப் பெற்றுச்; செல்லவிருப்பதாகக் கூறிக் கல்லூரி
அதிபர் பொறுப்பை ஏற்கத் தயங்கினார். ஆசிரியர் குழுக்கூட்டத்தில் இருந்தவர்களில்
பலர் அப்துல்பஷீரிடம்.. ~~நீங்கள்தான் வளர்ந்துவரும் பாடசாலையின் பொறுப்பை எற்கவேண்டும்|| என்றும் ~~இது நீங்கள் எங்கள் சமுதாயத்திற்குச் செய்யும் ஒரு பெரும்பொதுச்சேவை|| என்றும் ~~முடிவை மாற்றிக் கொள்ளு||மாறும் அன்பாய் வேண்;டி நின்றனர். .h.ற்றில் அவர்களின் அன்பான வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் தனது சொந்த நலனைக்
கைவிடும் அளவுக்கு அவரது மனம் நெகிழ்ந்தது. தான் இதுபற்றி யோசித்து முடிவு செய்;வதாகக் கூறி பின் சில நாட்களில் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.
ஆசிh.pயர் குழுக்கூட்ட முடிவை அப்போதைய கல்முனை பிரதம கல்விஅதிகாரியான ஜனாப். எம.;ஐ.எம். சரிபு (ஊh.நு.ழு) அவர்களிடமும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி
அல்ஹாஜ். ஏ.ஆர். மன்சூர் அவர்களிடமும் தெரிவித்தேன். அவர்களும் முழுமனதுடன்
இம்முடிவை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு இக்கல்லுர்ரி அதிபர் பதவி இவர்மீது
திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அதனை மிகத்துணிவுடன் அவர் பொறுப்பேற்று 26 வருட காலமாக ஒரு சிறப்பான ~அதிபர்மணி|யாக இதுவரைக்கும் சேவையாற்றி
வருகிறார்.
ஓர் அதிபராக....
அதிபர் அப்துல்பஷீர் அவர்கள் ஒரு கலைப்பட்டதாரியாக இருந்தாலும் உள்நாட்டிலும்
அரசாங்க அனுமதியுடன்; இந்தியா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றும் முகாமைத்துவப் பயிற்சிகள்
பெற்றுச் சிறந்த ஒரு நிர்வாகியாகத்; தனது தகைமையை அதிகரித்துக்
கொண்டார்.
தவிரவும் இவரின் இனிமையான சுபாவத்தினாலும் சிறந்த அணுகுமுறையினாலும் அரசியற்
தலைவர்கள் உயர் அதிகாரிகள்.. அனைவரினதும் பூரண ஆதரவைப் பெற்று கல்லூரியின் பௌதீக
வளத்தினை அதிகரித்தார். அவற்றுள் பலமாடிக்கட்டிடங்கள்.. உயர்தர வகுப்புகளுக்கான
உயிரியல் இரசாயன பௌதீக விஞ்ஞான கூடங்கள்.. மனையியல்கூடம்.. மாணவியர் விடுதி மாடிக்கட்டிடங்களாக
விஸ்தரிப்பு.. நுழைவாயில் அலங்கார அமைப்பு கல்முனை மாவட்டத்திலேயே முதலாவது
நிர்வாகக் கட்டிடம்.. பள்ளிவாயிலும் கலாச்சார நிலையமும்.. திறப்பு விழாவுக்கு
ஆயத்தமாகவிருக்கும் மேலும் இரண்டுமாடிக்கட்டிடங்கள்.. விளையாட்டு மைதானப்
புனரமைப்பு என்பன அதிபர் அப்துல்பஷீரின் சாதனைகளைக்; கூறும் வரலாற்று
நிர்மானங்கள்pல் சில.
அவை தவிர கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சகலதுறைகளிலும் மாணவிகளிடம்
ஏற்பட்ட கல்வி மேம்பாடு இம்மாணவிகள் க.பொ.த. சாதாரண உயர்தரங்களில்; தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருவதிலும்...மற்றும் விளையாட்டுப்; போட்டிகள்.. தமிழ்த்தினப் போட்டிகள்.. ஆங்கிலமொழிதினப்போட்டிகள்..
கலைநிகழ்ச்சிகள் என்பவற்றில் பங்குபற்றி கோட்ட பிராந்திய மாவட்ட மாகாண அகிலஇலங்கை
மட்டங்களில் பல சாதனைகளை நிலைநாட்டுவதிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. இன்னும்
உயர்தர விஞ்ஞான வகுப்பில் மாவட்டத்திலேயே முதலாம் இடத்தினை பலமுறை இக்கல்லூரி
மாணவிகள் பெற்றுள்ளதானது இதனைக் கட்டியம் கூறுகிறது. 1983ம் வருடம் ஆறுமாணவி;களே சர்வகலா சாலைக்குச் சென்றனர். ஆனால் 2008ம் வருடம் 84 பேர் சர்வகலாசாலைப் பிரவேசம் செய்துள்ளமை அதிபர் அப்துல்பஷீர் அவர்;களின் அயராத உழைப்பின் மூலமாகப் பெறப்பட்ட அறுவடை எனலாம்..
மேலும் ஆங்கிலம்.. தகவல்தொழில்நுட்பம்.. மற்றும் கணிணித்துறைகளில்; விசேட ஆர்வம் காட்டி வரும் அதிபர் அப்துல்பஷீர் அவர்களின் காலத்தில்
ஆங்கிலமொழிமூலமான உயர்தர வகுப்பில் மாணவிகள் கற்பதிலும்.. கல்லூரிக்கான இணையத்தளம்
ஒன்றை உருவாக்கி அதனை உலகளாவிய வலைப்பின்னலில் இணைத்ததிலும்… கணிணி வளநிலைய உருவாக்கத்திலும் அதிபரின் தூரநோக்கான நவீனசிந்தனை மேலும்
வெளிப்பட்டு நிற்கின்றது.
பிரித்தானிய அரசினால் இலங்கையிலுள்ள முன்னணிப் பாடசாலைகளின் கல்வித்தரம்
மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு
நடத்தப்பட்ட ஆய்வில் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டு 2006-2009 ஆண்டுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டதும் கிழக்கிலங்கையில் இக்கல்லுர்ரி
மாத்திரமே இவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டதும் அதிபர் அப்துல்பஷீர் அவர்களின்
பன்முகத்தன்மையான நிர்வாகத் திறமை காரணமாகவே!. இதை யாராலும் மறுக்க முடியாது..
இக்கல்லுர்ரியில் கல்விகற்ற மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இலங்கையில்
நாலாபக்கமும் வைத்தியர்களாக பொறியியலாளர்களாக.. பேராசிரியைகளாக.. சட்டத்தரணிகளாக..
கணக்காளர்களாக.. நிர்வாகஸ்தர்களாக.. பட்டதாரிகளாக ஆசிரியையகளாக இலிகிதர்களாக
பரந்துபட்ட துறைகளிலும் சேவையாற்றி வருவதை நாமறிவோம். இதுவே முஸ்லிம் மகளிரின்
கல்வியியல் மீதான அதிபர் அப்துல்பஷீரின் திட்டமான ஒரு சமுதாயச் சாட்சியம் ஆகும்.
இதுவே அவரது நிர்வாக ஆளுமையையும் கல்வியியல் பங்களிப்பையும் எடுத்துக்காட்டப்
போதுமானது.
எனது நிர்வாகக் காலத்தின் பின் மிகப் பொருத்தமான ஒருவரிடம்தான்
இக்கல்விக்கூடத்தை ஒப்படைத்த்pருக்கிறேன் என்பது பற்றி என்னளவில் மிகத்திருப்தி
அடையக் கூடிய நிறையக் காரணங்கள் இருக்கின்றன. இப்பெருஞ்சேவைகளை ஆர்ப்பரிப்பின்றி
அமைதியான முறையில் ஆற்றிவரும் அதிபர் பஷீர் அவர்களின் இந்த ~ஒப்படை| மலரில் ~மிகநன்று| என்றெழுதி ஒப்பமிட்டு அவருக்குத் திருப்புவதில்; உவகையடைகின்றேன்.
அவரும் அவரது குடும்பத்தினரும் ஏகனின் இன்னருள் பெற்று இனிதே வாழ்ந்திட
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.. நன்றி.. வஸ்ஸலாம்.!...00 (2010.02.10)
No comments:
Post a Comment