நுனிப்புல்லரிப்பு.
ஆர்.எம்.நௌஷாத்
நீங்களும் எழுதலாம் 9ம் இதழில் ~வானம்பாடி| எழுதிய பத்தியில்ää
~....இப்படியேää பளீல் காரியப்பர்ää ஜின்னா ஷெரிப்புத்தீன்ää
காத்தான்குடி அஸ்ரப்கான் போன்றோரும் மரபோடு நீற்கும்
கவிஞர்களாவர்...| என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு புல்லரித்துப் போனேன்.
00 தமிழ்கூறும் நல்லலகிலேயே ஆறு தமிழ்க் காப்பியங்களை எழுதி சாதனை புரிந்தமைக்காக உலகத் தமிழிலக்கிய மாநாட்டில் தமிழ்நாட்டுப் புலவர்களாலேயே கௌரவம் பெற்ற தமிழ்ப்பெருந்தகையாளரான ஜின்னாஷெரீப்தீன் ஐயா அவர்களை ஒரு சாதாரண மரபுக் கவிஞர் வரிசையில் வைத்ததும்ää
00 புலவர்மணி பெரியதம்;பிப் பிள்ளை ஐயா அவர்களால்ää ~பாவலர்| என்று பட்டமளிக்கப்பட்ட பாவலர் பஸீல் காரியப்பர் (கவனிக்க.. பளீல் காரியப்பர் அல்ல.. பஸீல் காரியப்பர்) அவர்களை மரபுக் கவிஞர் என்ற தர வரிசையில் குறிப்பிட்டிருந்ததும்ää
00 தமிழ்க் கவிதையுலகில் பேர் குறிப்பிட்டறியமுடியாத அஸ்ரப்கான் என்னும் மின்மினியை மேற்படி சூரியசந்திரர்கள் வரிசையில் சேர்;த்திருந்ததும் கண்டு இந்த ஆய்வுக் கட்டுரையை(?) எழுதிய வானம்பாடியின் அறிவுத்திறனை எண்ணித்தான் இப்படிப் புல்லரித்துப் போனேன். காத்தான்குடியில் ஆயிரம் புலவர்களும்ää மரபுக் கவிஞர்களுமிருக்கää அஸ்ரப்கான் என்பவரை மட்டும் இவ்வரிசையில் பட்டியவிடக் காரணம் என்னவோ.. இவர் யார்..? இவர் தமிழ்யாப்பிலக்கணம் பயின்ற ஒரு மரபுக் கவிஞரா..?
00 மேற்படி மூன்று வித்தியாசமான வார்ப்புக்களையும்ää ஒரே பாத்திரத்திலிட்டு இவர்கள் மூவரும் மரபோடு நின்றவர்கள் என்றால்... இதன் அர்த்தம்தான் என்ன..? எவ்வளவு பெரிய அறியாமை இது...! ஆக்கங்களை செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு என இதழில் குறிப்பிட்டிருக்கும்ää ஆசிரியர்ää ஆர். தனபாலசிங்கம் இதனைச் செவ்வைப்படுத்தவில்லையே ஏன்..?
00 ~வானம்பாடி| ஏதாகிலும்ää கட்டுரைகள் எழுதும் முன்னர் தனது பார்வையை மேலும்ää கூர்மையாக்கிக் கொள்ளுதல் வேண்டும்;.
00 தமிழறிஞர் திரு அருளையா அவர்களால்;ää ~எழுக புலவனே..!| என விளிக்கப்பட்டவரும்ää கலாநிதி எம்.ஏ. நு..;மான் அவர்களால்ää ~அரும்பு மீசைத் தத்துவஞானி..! என சிலாகிக்கப்பட்டவரும்ää கல்முனை அபாபீல்களினால்ää ~தென்கிழக்கின் உமர்கையாம்!| என வர்ணிக்கப்பட்டவருமான பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின்ää இனநல்லுறவுக் கவிதை ஒன்றினை ~நீங்களும் எழுதலாம்| வாசகர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.
துளசி.
துறைநீலாவணையிலிருந்து ஒரு
துளசிச் செடி கொண்டு வந்தேன்.
வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து
ஓரமாய்க் கெல்லி ஈர மண்ணோடு
உசுப்பாமல் கொண்டு வந்து
எங்கள் இல்லம் இருக்கும்
கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி
அதன் உள் வைத்தேன்.
அம்மண்கள் கலந்தன
மனிதரைப் பழித்தன.
துளசியின் இலைகள் என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன.
-பாவலர் பஸீல் காரியப்பர்.
(நன்றி: ஆத்மாவின் அலைகள்.(1994.)
No comments:
Post a Comment