Monday, March 14, 2022

செல்லிடம் பேசேல். ஆர்.எம்.நௌஷாத்

 

செல்லிடம் பேசேல்.

ஆர்.எம்.நௌஷாத்

 

கையடக்கத் தொலைபேசி புழக்கத்தில் வந்த பிறகு மனிதனின் நிம்மதி விடைபெற்றுப் போய் விட்டது. மலிந்து பொய் விட்ட விரசங்கள் காரணமாகப் பெற்றோர் பதைபதைக்கிறார்கள். வணக்கத்தலங்க்ள் மயானங்கள் அரச தனியார் நிறுவனங்கள் வீதிகள்...வாகனங்கள்.. எங்கெங்க காண்கினும் செல்போன்களின் விதவிதமான அலறல்கள் செவிப்பறைகை மேததுகின்றன. காயப்படுத்துகின்றன. பார்க்கப்போனால் நாம் ~~ஹலோ|| என்று உச்சரிக்காத ஒரு நாள் கூட இல்லை.

 குக்கிராமத்தில் வசிக்கம் வாலிபனும் மன்செஸ்டர் மாநிலத்தில் வதியும் யுவதியும் பக்கத்து வீட்டார் போல அரட்டையடிக்கின்றனர். எல்லா வீடுகளிலும் இல்லத்தரசிகள் புடவை நகை வியாபாரம் பேசுகிறார்கள்.. மாணவர்கள் சர்வ சாதாரணமாக ஆபாசம் பார்க்கிறார்கள்.. அரச அதிகாரிகள் வீட்டிலிருந்தபடியே அலுவலக நிருவாகம் செய்கிறார்கள்.. நர்சரி படிக்கும் ~பொடி| கூடப்படிக்;கும் இன்னொரு குஞ்சுடன்; மழலை கதைக்கிறது... பாட்டனும். பாட்டியும் பல்லுப் போனாலும் ~செல்லு|ப் போகவில்லை என்று பொக்கைமொழியில் பழங்கதைபேசி மகிழ்கிறார்கள்...

 எல்லாம் இருக்கட்டும்.. பாமரர் மத்தியில் செல்போன் திடுமெனப் பிரவேசித்ததில் ஏற்பட்ட ~அல்லோ..|~ஹல்லோ|லம்.. தாங்க முடியவில்லை.. ஒரு பாமரத் தந்தை தூரத்து விடுதியில் தங்கியிருந்த தன் மகளுக்கு ~செல்|பேச பல தடவைகள் முயன்றார்.. நீண்ட நேரமாக இணைப்பு இல்லை. அழைக்கும் போதெலல்லாம் ஒலிப்பதிவுக் குரலில் ~~கருணாகரண்ட பஸ_வ அமத்தண்ன...| என்று சிங்கள மொழிஒலி கேட்ட போதெல்;லாம் பயத்தில் கிறீச்சிட்டுக் கத்திய அவர் நீண்ட நேரத்தின் பின்னர் இணைப்புக் கிடைத்ததும் ~~அலோ.. மகளே..ய்.. மகளே.. கருணாகரண்ட பஸ்ஸ அமத்திப் போட்டாங்களாம்.. பஸ்ஸில வாராதடி புள்ளே..ய்.. இறங்கடி.. இறங்கடி..|| என்று அலறிய அலறலில் ஒரு கிராமமே இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறது.

 இப்படித்தான் செல்பேசியில் பொய்;பேசிய என் அவலக நண்பர் பெரியவரிடம் அகப்பட்ட கதை சுவாரஸ்யமானது. பெரியவரிடம் கொழும்புக்குச் செல்வதாகப் பொய் சொல்லி விட்டு வீட்டில் ஹாயாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவருக்கு பெரியவர் செல்N;பசியில் ~~ஹலோ எங்கேயிருக்கிறீர்;கள்..?|| எனறு கேட்டதும் ~நான்; இப்ப ~பெற்றா|வில் இருக்கிறேன் ஸேர்.!| என்று சொல்லிவிட்டார். பெரியவரும் மகிழ்ந்து போய் ~~மிகவும் நல்லதாகப் போயிற்று. நானும் ~பெற்றா|வில் இன்ன இடத்தில் நிற்கிறேன்.. இப்போதே இவ்;விடத்திற்கு வா.. காத்திருக்கிறேன்.!|| என்றார். இது கேட்டதும் வியர்த்து விறுவிறுத்துப்; போனார் நண்பர். பின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கெட்டு தான் ஊரிலிருப்பதாக தடுமாறிச் சொல்லி முடித்தார். பெரியவரும் அசராமல் தானும் ஊரிலேயே இருப்பதாகவும் உண்மையை அறியவே போல் எடுத்ததாகவும் சொன்னார். நண்பர் அதிhசச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பட்டபாடு...

 தவிரவும் ஐந்து வருடங்கள் முன் சவுதிஅரேபியா போய் வந்த ஒரு இளைஞன் வீட்டில் தனது ~செல்|லை பெருமையுடன் காட்டிய போது பாட்டி சர்வசாதாரணமகப் பாவித்த ~~மிஸ்கோல்.. மெஸேஜ்.. இன்பொக்ஸ்... சர்ஜர்.. கவரேஜ்.. ரிங்டோன்..|| போன்ற சொற்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தே போனான்..

 ~ரிங்டோன்| என்றதும்தான் ஞாபகம் வருகிறது. இந்த அழைப்பு மணியின் விதவிதமான ஒலிகளினால் எற்படுகிற ~சூழல் மாசடைவை|த் தடுக்க ஒரு சட்டமும் இல்லையா என்றால் இல்லை.. இது எந்தளவிற்குப் போயிற்றென்றால் பாருங்கள் சும்மா ஒரு அப்பாவியாக எனது சம்பளப் பணத்தைப் பெற வங்கியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். என்; முன்னால் நின்று கொணடிருந்த ஒரு வாலிபனுக்குத் திடீரென்று எதிர்பாராதவிதமாக நீண்ட ஒலியுடன் ~~... ப்ப்ப்ர்ர்hhரென்று|| பின்பக்கமாகக் காற்றுப் பிரிந்து வி;ட்டது. திடீரென்று குசுப் பறிந்ததில் வெட்கப்பட்டுப் போவான் பாவம் என்றெண்ணிய நான் லேஞ்சியால் மூக்கைப் பொத்துவதை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்ட அதே கணத்தில் மேலும் இரண்டு தரம் ~~..புர்ர்ர்;க்... ;புர்ர்ர்;க்...||கென்று இரண்டு தரம் பறிந்துவிட்டது. ஆனால் அவ்வாலிபனோ சற்றும் கவலைப்படாமல் தன் காற்சட்டையின் பின்புறத்திலிருந்து தனது செல்போனை எடுத்து ~புர்ர்hக்க்க்... புர்ர்hக்க்க்|கென்ற தனது ~பேவரிட் ரிங்டோ|னை அமர்த்திவிட்டு ~ஹலோ..|என்றான். அவனது செல்பேசியின் அழைப்புமணியோசைதான் அந்தக் குசுப்பறிந்த சத்தம்... என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..! என்ன செய்வது எல்லோருடனும்தான் வாழவேண்டியிருக்கிறது.00

000

 

No comments:

Post a Comment