Wednesday, August 16, 2023

யாவும் கற்பனையல்ல-

 யாவும் கற்பனையல்ல- 

சிறுகதைத்தொகுப்பு-

செங்கதிரோன். த.கோபாலகிருஷ்ணன்


மனங்களில் உச்சரிக்கும் எழுத்து மந்திரம்,


  என் அபிமானத்துக்குரிய எழுத்தாளரும், நாடறிந்த இலக்கியகர்த்தாவும் , இதழியலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் திரு. த. கோபாலகிருஷ்ணன் அவர்களின் இந்த சிறுகதைத்தொகுப்பை வாசித்த பின், என் மனதில் பொங்கிய அருட்டுணர்வின் சில கூறுகளை ஒரு வாசகனாக இங்கு பதிவு செய்து கொள்கிறேன். 

இத்தொகுப்பில் உள்ள 13 கதைகளையும் சிறுகதைகளுக்குரிய பண்புகள் மாறாமல், தனக்குரிய இயல்பான எழுத்து நடையில் ஒரு தவ நிலையில் இருந்து படைத்து தந்திருக்கிறார் இந்த எழுத்து வித்தைக்காரர். 

சிறுகதை என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் போல, 13 சிறுசிறு, கதைகளை தந்துள்ள இந்தப் படைப்பாளியின் எழுத்தில்,ஆங்காங்கே தூவப்பட்டுள்ள ஏதோ ஒரு மந்திரப் பொடி நம்மை அவரின் எழுத்தின் மீது வசியம் செய்து இடையறாது வாசிக்கவும்,  இவருடனே வசிக்கவும் செய்து விடுகிறது.. 

தேர்ந்த கதைக் கருக்களை நேர்த்தியான முறையில் வடிவமைத்து, தன் நிர்மாணங்களை தகுந்த முறையில் கட்டமைத்து வாசகர்முன் வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்த எழுத்து எந்திரி.

எழுத்துத் தொழிலில் நீண்டகால  அனுபவச் செழுமை காரணமாக தன் கதைகளை மிகவும் இலாவகமாக சொல்லிச் செல்லும் இந்தக் கதைசொல்லியின் வாழ்வியலின் பல்வேறுபட்ட அனுபவக் கூறுகளும், ஆழமான வாசிப்பின் அறிவுக் கூர்மையும், இத் தொகுப்பில் விரவிக் கிடப்பதை நம்மால் உணரக்கூடியதாக உள்ளது . 

இந்தக்கதைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து ஆராய்ந்து அவற்றின், வார்ப்புத் திறன், சொல்முறைமை, கையாண்ட உத்திகள் எனப் பேசிச் செல்ல  எத்தனையோ விடயங்கள் உள்ளன.அகண்ட தமிழிலக்கியப் பரப்பில் அவைபற்றிப் பேசப்படவேண்டிய அவசியமும் உள்ளது.  

தவிரவும், இவருக்குள் இயங்கும் ஒரு சமூகப் போராளியின்,ஆக்ரோஷ வெளிப்பாடு, சில கதைகளில் முனைப்புக் காட்டுகிறது. அதே சமயம்  அவர்  அக்கதைகளை ஒரு, தீவிரப் போக்கில் சொல்லுகிற தன்மை, செங்கதிரோனின் சமுக அக்கறையை வெளிக்காட்டுகிறது. மட்டுமன்றி, சமூகக் கொடுமைகளுக்கெதிராகவும்,தனிமனித சிறுமைத் தனத்துக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுக்கும் தன்மைகளும் வெளிப்பட்டு நிற்கின்றது.  ‘துரோகி’, ‘சகோதரத்துவம்’, போன்ற கதைகளில் இந்த பண்பினை காணக் கூடியதாக உள்ளது.

அதே போல, அவர் சில  கதைகளைச்  சொல்லிச் செல்லும் போக்கிலேயே தன், இயல்பான  நகைச்சுவையையும், குறும்புத் தனத்தையும் அளவோடு கலந்து தெளித்து விடுகிற பாங்கினை,  நன்றாக இரசிக்கவும் முடிகிறது.  ‘குடை கவனம்’ என்ற கதையில் மனைவிக்கு கொடுக்கின்ற ‘குறும்புக்கல்தா’வும், ‘ஒரு குழந்தையின் அழுகை’ கதையின் முடிவில் வாசகருக்குத் தரும் அதிரடி முடிவிலும் நம்மை புன்னகைக்க வைத்துவிடுகிறார் இந்த எழுத்துக் குறும்பர். 

மேலும், “அந்த ஏவறை சத்தம்’, ‘கூடு விட்டு’, ‘யாவும் கற்பனையல்ல”,போன்ற கதைகள்,  அமானுஷ்யத் தன்மையின எனலாம். இந்தவகையான கதைக் கருக்களை தமிழ்ச் சிறுகதை தளத்தில் பரிசோதித்துப் பார்த்தவர்கள் சொற்பளவினரே. இதில், செங்கதிரோன் தன் மாயத் தமிழ் நடையையும்,  கைவால்யமான எழுத்தனுபவத்தையும் கொண்டு மிக இலாவகமாக இக்கதைகளை நகர்த்தி, தன்  அனுபவ உணர்வை வாசகருக்குள் தொற்றிவிடச் செய்வதில் வெற்றி பெற்று விடுகிறார். இக்கதைகள் தரும் விசித்திர நுகர்வை வாசகரால் இலகுவில் கடந்து விட முடிவதில்லை.

சமுக அழுக்குகள் மீது வெஞ்சினம் கொண்டு வாழுகிற, இந்த எழுத்துப்போராளி,  ‘ஊர்மானம்’ என்ற கதையில், வேலாப்போடியின் உருவகத்தில் தானே வந்து, சமூகத்திடம் உரத்துக் கேட்கிற கேள்விகளுக்கு தமிழ்-முஸ்லிம் சமுகத்தில் யாரிடமும் பதில் இல்லை. 

‘அங்கிருந்து வந்தவர்கள்’ என்ற கதை, விடுதலைப்போராளிகளின் கட்டுப்பாடு சிலபோதில் கைமீறிச் சென்று பரிதாபத்துக்குரிய ஓர் இளைஞனைப் படுகொலை செய்வதில் வந்து முடிகிற துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்றை பதைபதைக்க வைக்கும் மொழியில் விபரிக்கிறது. விறுவிறுப்பான எழுத்தில் அதே சமயம் நிதானமான முறையில் இக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர்..

இத்தொகுதியில்,உள்ள, ‘கரப்பத்தான் பூச்சி’  என்ற கதை, இந்நூலின் தலைப்பாக போடக் கூடிய அளவு முக்கியமான ஒரு நட்சத்திரக் கதையாகும்.  இரு கரப்பத்தான் பூச்சிகளின் புணர்வில், மகாபாரதப் புராணத்தின் ஒரு சம்பவத்தைக் கொண்டு வந்து கச்சிதமாகப் பொருத்தி, கடைசியில், //இரு உயிர்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டிருக்கையில், அதனைக் குழப்புவது அல்லது கெடுப்பது சாபத்துக்குரிய பாவம்.// என்று கதாசிரியர் அவற்றைத் தப்பிக்க வைப்பதுவும், பாண்டு மன்னனை மறுவாசிப்பு செய்துள்ள வகையிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்தப் படைப்பாளியின் உயர்ந்த, இளகிய  மனோபாவத்தின் போற்றுதலுக்குரிய பண்பும் இக்கதையில் இழையோடி நிற்கிறது. .. 

பொதுவாக, இத்தொகுப்பிலுள்ள கதைகள், சொல்நேர்த்தியிலும், எடுத்தாண்ட கருப் பொருள்களாலும் வெற்றி பெற்று விடுகின்றன. வாசகர் மனதிலும் தங்கி விடுகின்றன..ஆசிரியர் தன் கதைகளை,  தான் வாழும் சூழலை ஒட்டியே நகர்த்துவதால் கதைகள் மிக யதார்த்தமான தன்மையை பெற்று, வாசகரை கதையோடு ஒன்றிக்க வைத்து விடுகின்றன. இது ஆசிரியருக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்,  தவிரவும், சிறுகதைகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான பார்வையையும் இது வெளிக்காட்டி நிற்கிறது.  இத்தொகுப்பில் உள்ள பலகதைகள்  பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளமை அதற்குச் சான்றாகவும் அமைகின்றன. 

கற்பனைப் புனைவுகளுக்கு ஒப்பனைப் பூச்சு தீற்றி தமிழ் வெளியில் சஞ்சரிப்போர்  மத்தியில், இவை யாவும் கற்பனையல்ல என்று யதார்த்தச் சிறகுகளைப் பொருத்தி தன் படைப்புலகில் தனித்துவமாகப் பறக்கின்ற செங்கதிரோன் என்ற எழுத்து விஞ்ஞானியை மனமுவந்து பாராட்டுகின்றேன். வாழ்க அவர் எழுத்துப் பணி..

தீரன். ஆர்.எம். நௌஷாத்.

2023.07.15


  



Monday, March 21, 2022

தாஸிம் அஹமத் -கதீர்

 

கவிதைச் சிறகு. தாஸிம் அஹமத் 

மானுடத்தின் பால் கொண்டுள்ள ஆழ்ந்த கரிசனையும்ஆன்மிகத்தின் மீதான அவாவுகையும், மட்டுமன்றி, சமூக அழுக்குகள் மீதான ஆக்ரோஷ வெளிப்படுகைகளும்தாம் இக்கவிஞனின் ஆதர்ஷம் எனலாம்...

கவிதைச் சிறகு கட்டித் தீராவெளியில் பறந்து, தகிக்கின்ற சொற்களைக் காவிக் கொண்டு வந்து, காகிதத்தின் மீது எறியும் எழுத்து அபாபீல் இவர்..

 இன்னும், தன் மென்னுணர்வுப் புள்ளிகளிட்ட கவிதைச் சிறகால், மானுடர் மீது இதமாய் வீசுகின்ற எண்ணத்துப் பூச்சியும் இவரே..

லண்டன் தமிழ் இலக்கிய  நிறுவகமும், இலங்கை தமிழ் இலக்கிய  நிறுவகமும், இணைந்து வழங்கிய 2019 இரா.உதயணன் விருது பெற்ற இக்கவிதை சிறகை முழுவதுமாக வாசித்த பின், இக்கவிஞனை விட்டு வெகுநேரம் பிரிய முடியாதிருந்தது..

வகவம் தலைவருக்கு வாழ்த்துக்கள்..

 

 

காக்கை நிற சேலை. இது,    கதைகளின் நூதனசாலை..


கதீரை ஒரு கவிஞனாகவே கருதியிருந்தேன். காக்கை நிற சேலை வாசிக்கும்வரை.

ஆன்மாவின் இலாவண்யத்துள் தன் கதைகளை இழைத்துள்ள கதீர், இந்த 8 கதைகளிலும் காலத்தை ஒரு மெல்லுணர்வாக சித்தரித்துப் பார்த்துள்ளார்.

கதீர், இயக்கியுள்ள இக் கதைகள், நுகர்வோரின் மனதில் , ஒரு, கதிரியக்க வீச்சின் அதிர்வுகளைத் தவறாமல் தருகிறது.

அதிலும் பூனைக்குடில், ஆக்கா, மெல்லுணர்வு என்ற கதைகள் அவன் எழுத்தின் உச்ச வீச்செல்லை எனலாம்.

கதீரின் கதைகள் ஒவ்வொன்றையும் பற்றி, விரிவாக பேசலாம்தான்..பார்ப்போம் ஒரு சந்தர்ப்பத்தில்...

வாழ்த்துக்கள்

கதீர்.

 

Monday, March 14, 2022

வெளியான - கட்டுரைகள்;-பத்தி எழுத்துக்கள்..

 

வெளியான - கட்டுரைகள்;-பத்தி எழுத்துக்கள்..

 

 26 நஸ்ருல் என்றொரு எரிநட்சத்திரம்.

(ஞானம். 128 - ஜனவரி 2011)

 25 ஆங்கிலேயர் காலத்தில் வளர்ச்சிபெற்ற அஞ்சல்துறை.

(தினகரன். 09.10.2010)

 24 34 ஆண்டுகள் தெடர்ச்சியான நாடாளுமன்ற உறுப்பினர் பணி. நாளை 85 அகவை காணும் அப்துல் மஜீதின் சாதனை.

(2009. ஒக்டோபர்16 (சுடர் ஒளி)

 23 சம்மாந்துறையில் ஒரு வாழும் சரித்திரம். சமுகமாமதி. அல்ஹாஜ். அப்தல்மஜீத். பீ.ஏ (தினக்குரல். 2009.10.16. நவமணி 24.10.2009 )

 22 உலக தபால்தினம் இன்று. (இலங்கை தபால்துறையின் வரலாறு) (2010.ஒக்டோபர்.09 தினகரன்)

 21 கல்முனை மாநகரின் நிர்மானச் சிற்பி.கேற்முதலியார் எம்எஸ். காரியப்பர். (2009.03.13. தினகரன். 2009.03.13.தினக்குரல்.)

 20 நுனிப்புல்லரிப்பு (நீங்களும் எழுதலாம்- கவியிதழ்.

2010. ஜனவரி- பெப்ரவரி)

 19 காலத்தால்; அழியாத ஈழத்துக் கீதம். அழகான ஒருசோடிக் கண்கள்.

(ஞானம் மே 2008.)

 18 மடிந்து விழுந்த வெள்ளி

(யாத்ரா. மார்ச். 2005)

 17 சயனைட் அடைக்கப்பட்ட குப்பி

(நியதி- மார்ச். 2004.)

 16 ஒரு உருவப்பட்ட வாள்.

(நியதி மார்ச். 2004.)

 15 நேருக்கு நேராய் வரட்டும்.! வாலைவாருதியின் நேர்காணல்.

(யாத்ரா. நவ-டிஸ. 2002)

 14 கவிதை வன்முறையில் பயன்படுத்தப்படும் சில கனரக ஆயுதங்கள்.

(யாத்ரா. ஜன- மார்ச்.2002)

 13 பாமரப்-பா

(யாத்ரா. செப்டம்பர். 2000)

 12. ஹைக்கூ.- நகப்பொட்டில் நவபிரபஞ்சம்.

(புள்ளி. 1993.)

 11. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் எழுந்து வருகிறது. (அல்ஹ_தா-1986 நவம்பர்.

 10 ;மேமன்கவியின் இயந்திர சூரியன்.- விமர்சனம்.

(அல்.ஹ_தா. இதழ் 3. ஓகஸ்ட் 1985)

 09 மெஹ்ருன் நிஸாவின் ~விடியலை நோக்கி அவனுக்காக..|- அறிமுகம்.

(தினகரன் 1984. மார்ச்.)

 08 கொக்கூர்கிழான் கவிதைகள்.

(தினகரன். 1982.05.23)

 07 நாட்டார் பாடல்களில்; நகைச்சுவை.

(தினகரன். 1982.04.18.)

 06 எம். ஐ. அஸீஸ் சேர் அவர்களின் முன்மாதிரி.

(1980 கல்முனை ஸாஹிறா.)

 05 கடற்கரை மினாரா..காண வாரீர்.!

(தினபதி. 1981.04.18.)

 04 நடடா ராஜா நடடா.

(தினகரன் 1981. மார்ச்.)

 03 ஹிஜ்ரி விழாவில் முஸ்லிம் பெண்களுக்கும் சைக்கிளோட்டப் போட்டி.

(தினபதி. 1981.03.18.)

 02 கண்களும் பெண்களும்.

(தினபதி. 1980.10.18.)

 01 முத்திரை சேகரித்தல்.- ஓர் இலாபமிக்க பொழுதுபோக்கு.

(தினகரன். 30.12.1978)

 

அல்ஹாஜ். எம்.எஸ்.புகாரி--ஆசிரியர்---- எம்.எம். ஆதம்பாவா.

 

அல்ஹாஜ். எம்.எஸ்.புகாரி--ஆசிரியர்

இம்மை- 19.03.1948.............இன்மை- 31.07.2010

 

எம்.எம். ஆதம்பாவா.

 

35வருடங்கள் நல்லாசிரியராக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி மாணவர்கள் பெற்றோர்கள் சக ஆசிரியர்களின் மனங்களில் அழியா இடம்பெற்ற கடமையுணர்வுää நேர்மைää தியாக உணர்வுää அடுத்தவரை மதிக்கும் பண்பு ஆகிய அருங்குணங்களை அணிகலனாகக் கொண்ட அல்ஹாஜ். எம்.எஸ்.புகாரி தனது 62வது வயதில் காலமானார்.

 பரந்த அறிவு தெளிந்த சிந்தனை முன்மாதிரியான நடத்தை ஆற்றல்ää துணிச்சல்ää புத்திக் கூர்மைää நேரமுகாமைத்துவம்ää கவர்ச்சியான கற்பித்தல் அழகுபடுத்தல்ää கற்பனா சக்திää கலையுள்ளம்ää மனஉறுதிää எப்போதும் தனக்குச் சரியெனப்பட்டதை தயக்கமின்றிக் கூறுதல்ää ஆகிய ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருந்தார்.

 சாய்ந்தமருது சேக்குனாலெவ்வை முகம்மது சதக் ஆதம்பாவா சபியா உம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராக 19.03.1948ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அன்றைய அல்ஜலால் வித்தியாலயம் (ஆலமரத்தடிப்பள்ளி) யிலும்ää இடைநிலைக்கல்வியை கல்முனை பாத்திமாக் கல்லூரிää உவெஸ்லி உயர்தரப் பாடசாலைää சாகிராக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார். 11.12.1978ல் கணிதவிஞ்ஞான ஆசிரியராக மஹ்முத்மகளிர் கல்லூரிக்கு நியமனம் பெற்றார். அஸ்ஸிறாஜ் வித்தியாலயம்ää (சாளம்பைக்கேணி)ää சம்ஜஸ்இல்ம் மகாவித்தியாலயம் (மருதமுனை) ஆகியவற்றிலும் ஆசிரிய சேவையை ஆற்றி உள்ளார்.

 1978ல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கணிதநெறிப்பயிற்சியை முடிப்பதற்காகச் சென்றிருந்த போது சம்பளத்துடனான கற்கை விடுமுறையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறைக்குத் தோந்தெடுக்கப்பட்டு 1982ல் கலைப்பட்டதாரியானார். 1992ல் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை நிறைவு செய்து ஆங்கிலத்திலும் டிப்ளோமா சான்றிதழை பெற்றிருந்தார். 26.06.1996 தொடக்கம் 23.03.1998 வரை முறைசாராக் கல்வி இணைப்பாளராகக் கடமையாற்றினார்.

 சிறந்த முகாமையாளர் அழகியல் கலையில் ஆர்வமுடையவர். மேடை அலங்காரம் தோரணம் சித்திரக் கண்காட்சிää பொருட்காட்சிää பூந்தோட்டம்ää கிறீன்ஹவுஸ்ää விலங்கியல் பூங்காää நிர்வாகக் கட்டடத்தின் நுழைவாயில்ää வடிவமைப்புää புகைப்படமெடுத்தல்ää போன்ற அனைத்து அம்சங்களிலும்ää மஹ்முத் மகளிர் கல்லூரியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு தடம் பதித்தார்.

 தனது நகைச்சுவைப் பேச்சுக்களால்ää எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் வல்லவர். அபாரமான ஆற்றல் ஆக்கபூர்வமான சிந்தனைää வினைத்திறனுடன் செயலாற்றுவதில் திறமைää ஆகிய பண்புகள் அவரிடம் சிறப்பாகக் காணப்பட்டன.

 மஹ்முத் மகளிர் கல்லூரியில் 18.03.2008ல்ஓய்வு பெற்றபோது கொடி சஞ்சிகைää பிரியாவிடை வைபவச் சிறப்பு மலர் வெளியிட்டுக் கௌரவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

 கல்லூரியின் கொடிää கல்லூரி இலச்சினை என்பவற்றை வடிவமைத்த பெருமை இவரையே சாரும். பாடசாலை ஒழுக்கக் கோவை தயாரிப்பும் இவருடையதே.. ஆசிரியர் நலன்புரிக் குழு யாப்பு உருவாக்கியது ஒரு வரலாற்றுச் சான்றாகும். ஆசிரியர் நலன்புரிச்சங்கத் தலைவராக விளையாட்டுக்குழுத் தலைவராக பகுதித் தலைவராக முகாமைத்துவக் குழு உறுப்பினராக சஞ்சிகைக்குழு அங்கத்தவராக பல்வேறு பணிகளில் அயராது பாடுபட்டுழைத்தார்.

 தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த குடும்பஸ்தராக மிளிர்ந்தார். 28.07.1978ல் ஐ.எல். ஹபீபாவை திருமணம் செய்தார். இவர்களின் இல்லறச் சோலையில் பூத்த இனிய மலர்கள் ஐந்து ஆண்மக்களாவர். இவர்கள் கல்வியில் முன்னேறி நன்னிலையில் உள்ளனர். . வல்லநாயன் இவரின் சேவைகளைப் பொருந்தி ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக….00

 நவமணி-

இலங்கை தபால் துறையின் வரலாறு. ----- முகம்மது நௌஸாத் காரியப்பர்

 

உலக அஞ்சல் தினம். அக்டோபர் 09. 2010

 

இலங்கை தபால் துறையின் வரலாறு.

முகம்மது நௌஸாத் காரியப்பர்

(அஞ்சல் அதிபர். சாய்ந்தமருது.

பத்திராதிபர்- அஞ்சல் உத்தியோகத்தர்கள் சங்கம்.)

 

ஆதிமனிதன் இடம்பெயராமல் இருந்ததால் அவனுக்கு செய்திப் பரிமாற்றம் அவசியப்படவில்லை. பின்னர் ஏற்பப்ட பல்வகையான காரணிகளின் நிமித்தம் மனிதன் இடம் பெயர ஆரம்பித்தான். அச்சமயம்தான் முதல்முதலாக செய்திப் பரிமாற்றத்தின் அவசியம் உணரப்பட்டது. செய்தியை தூர இடங்களுக்கு எடுத்துச் செ(h)ல்வதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. இதற்காக ஆதிமனிதன் முதலில் தன் குரலையே அதி வேகத்துடன் ஒலி பரப்பினான்.

 பின்வந்த காலத்தில் பல்வகையான பொருட்களினால் விதவிதமான ஒலிகளை ஒழுப்பி தன் வேறுபட்ட செய்திகளை அறிவித்தான். அம்புவில் கண்டுபிடிக்கப்ப்ட பின்னர் அம்பில் தனது செய்தியை அனுப்பி வைத்தான். அதேசமயம் இரகசியமான செய்திகளை அடிமைகள் வாயிலாகச் சொல்லியனுப்ப ஆரம்பித்தான். எழுதப்படிக்க ஆரம்பித்த காலங்களில் செய்தி அனுப்பும் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்ட்டன. இக்காலத்தில் புறாக்களும் வல்லூறுகளும் மற்றும் மிருகங்களும் கூட செய்தியை எடுத்துச் செல்லப்பயன்பட்டன. நீர்நிலைகள்ää கானகங்கள் கடந்து செல்வதற்குப் புறாக்;கள் மிகவும் உதவியாக இருந்தன. பின்னர் போக்குவரத்திற்கான பாதைகள் ஏற்பட்ட காலத்தில் மனிதனே செய்தியை எடுத்துச் செல்ல ஆரம்பித்தான். ஒருஅடிமையின் தலையை மொட்டையடித்து தலையில்; செய்தியை எழுதி மயிர் வளர்ந்த பின் அவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி அங்கு மீண்டும் மொட்டையடிக்கப்பட்டு செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தூதுவனிடம் கொடுத்தனுப்;பப்பட்டது. கிரேக்கர்களின் இராச்சியத்தில் வாழ்ந்த மரத்தான் எனும் செய்திப்பிரிவு வீரன் ஒருத்தன் அவசரமான ஒரு யுத்தச் செய்தியை அறிவிப்பதற்காக இடைவிடாது 26 மைல்கள் தூரம் ஓடிச்சென்று செய்தியை அறிவித்த பின் முச்சிரைத்து இறந்து போனான். இவனது தியாகம் காரணமாகவே சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இன்றும் ~மரதன் ஒட்டம்| நடத்தப்படுகிறது.

 தொடர்ந்து ஒரு மனிதனை ஓடச் செய்யாமல் குறிப்பிட்ட தூரத்திற்கொரு வீரனை நிறுத்தி செய்திகள் எழுதப்பட்ட குழலைப் பரிமாறும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் தகவல் பரிமாற்றம் எளிதாயிற்று. ~அஞ்சல் ஒட்டத்தின்| வரலாறு இதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இந்த அஞ்சல் வீரர்கள் காடுää மலைää நீர்நிலைகள் கடந்து ஓடியே அஞ்சல் பரிமாற்றம் செய்தனர். பின்னர் தூர இடங்களுக்கு குதிரை வீரர்கள் அஞ்சல் செய்தனர். பொதுவாக உலக அஞ்சல் வரலாறு மேற்கண்டவாறு ஆரம்பித்தது.

 இலங்கை அஞ்சல்துறை

 எமது நாட்;டைப் பொறுத்தவரையில் 1500களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும் 1600களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும்ää அஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700களில் ஆஙகிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அஞ்சல்துறையில் துரித வளர்ச்சியும் அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன. குறிப்பாக இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியாரின் தகவல் பரிமாற்ற வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத தபால்சேவை கெப்டன் ஏ. கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்ப்ட்டது. அதன்பின்னர் 1804 தொக்கம் 1817ம் ஆண்டுவரை அஞ்சல்துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்த திரு. ஈ. பிளாட்டமன் அவர்கள் 1815ல் நமது நாட்டில் கொழும்பு காலி மாத்தறை திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய ஆறு இடங்களில அஞ்சல் அலுவலகங்களை ஆரம்பித்தார். 1832ல் ஆசியாவிலேயே முதல்தடவையாக கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரைவண்டித் தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1838ல் இச்சேவை கொழும்புக்கும் காலிக்ககுமிடையில் விஸ்தரிக்கப்பட்டது.1850ல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் அவசர தபால்சேவை பழக்கப்பட்ட தபால்புறாக்கள் மூலம் அனுப்பப்;பட்டது. 1857.ஏப்ரல் முதலாம் திகதி 6பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரைவெளியிடப்பட்டது. (உலகின் முதல்முத்திரை இங்கிலாந்தில் 1840ல் ஒருபென்ஸ் பெறுமதியில் வெளியானது)

 இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல்தடவையாக 1865ல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸக்கும் இடையிலான தபால்புகையிரத சேவை உருவாக்கப்ப்ட்து. 1867ல் தனியாருக்கான தபால்பைää தபால்பெட்டிää சேவைகள் கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்ன. 1872 ஓகஸ்ட் 22ல்தான் முதன்முறையாக தபால்அட்டை வெளியானது. 1873ல் கொழும்புக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான காசுக்கட்டளை சேவை ஆரம்பிக்கப்படடது. 1877ல் உள்நாட்டு காசுக்கட்ட்ளைச் சேவை ஆரம்பிக்கப்ப்டதிலிருந்தும்ää 1877 ஏப்ரல் 1ம் திகதி இலங்கை அகிலதேச அஞ்சல் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டதிலிருந்தும்ää தபால்துறை துரித அபிவிருத்தி காணத் தொடங்கியது. 1880ல் இலங்கை இந்திய காசுக்கட்டளை சேவை தொடங்கியது. 1885.மே 1ல் அஞ்சல்அலுவலக சேமிப்பு வங்கியும் ஆரம்பமானது.1893ல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது. 1895.ஓகஸ்ட் 19ம் திகதி கொழும்பு பிரதம அஞ்சல்அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 பின்னர் 1913 தொடக்கம் 1923 வரை இலங்கையில் அஞ்சலதிபதியாக இருந்த திரு. எப்.ஜே. ஸ்மித் அவர்கள் முதல்முறையாக 6 உப தபால் அலுவலகங்களை அக்மீமனää திவுலப்பிடடியää ஆனமடுவää கிரியெல்லää மூதூர்ää சிலாபத்துறை ஆகிய ஆறு இடங்களில் அமைத்தார். 1928ல் இங்கையின் முதலாவது வான்கடிதம் மாஸெல்ஸ் நகரத்திற்கு விமானத் தபால் வாயிலாகப் பறந்தது. 1936ல் அஞ்சல்அறிமுக அட்டை விநியோகம் செய்யப்பட்டதும்ää இங்கிலாந்திலிருந்து நத்தார் தபால்கள் விமானம் மூலம் இலங்கையை அடைந்ததும்; குறிப்பிடத்தக்கன.

 947 இலேயே இலங்கை நாட்டவர் ஒருவர் (திரு. ஏ.இ. பெரேரா) அஞ்சல்அதிபதியாக நியமனம் பெற்றார்.இதனைத் தொடர்ந்து 1949ல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வான் தபால்சேவை ஆரமபித்தது. 1958ல் இலங்கை போக்குவரத்துச்சேவையுடன் இணைந்து தபால் பஸ் சேவை தினமும் ஓடத் தொடங்கின. இதனால் இலங்கை மக்கள் அனைவருக்கும் தபால்சேவை தங்குதடையின்றிக் கிடைத்தன.

 1967சனவரி1ல் இலங்கை முத்திரைப்பணியகம் ஸ்தாபிக்கப்பட்டது. செப்டமபர் மாதம் முதல் முத்திரைக் கண்காட்சி மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. 1972ல் முத்திரைகளை வெளியிடும் பணி முத்திரைப் பணியகத்திற்கு வழங்கப்பட்டது. 1975ல் அஞ்சல்அதிபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக வெள்ளவத்தையில் அஞ்சல்பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்ப்டது. 1979ல் பிராந்தியங்கள் ரீதியாகத் தபால்தரம் பிரிக்கும் நிலையம் இரத்தினபுரியில் முதலாவதாக ஆரம்பிக்கப்படதும் தபால்கள் விரைவாக மக்களைச் சென்றடைந்தன.

 

இதுவரை காலமும் ஒன்றாகவே கையாளப்பட்டு வந்த தபால்துறையானது 1980 ஓகஸ்;ட் 15ம் திகதி தபால் மற்றும் தந்திச் சேவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தந்திக்கு துரிதவசதிகள் செய்யப்பட்டன. 1981ல் அஞ்சல்முகவர் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ன. மேலும்ää 1989. ஒக்டேபர் 1ல் ஈஎம்எஸ். என்னும் விரைவுத்தபாற்சேவை ஆரம்பிக்கப்பட்டதுää 1990 ஜூலை 2ல் ஸ்பீற் போஸ்ற் எனப்படும்; அதிவிரைவுத் தபாற்சேவை பரீ;ட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. 1992ல் தபால்திணைக்களத்தில் மாகாண ரீதியிலாக நிர்வாகப்பரவலாக்கம் ஏற்ப்டுத்தப்பட்டதும் ; பிராந்திய ரீதியில் அஞ்சல்அறிமுகஅட்டை வழங்கப்பட்டது. மேலும்ää இதே ஆண்டுää தொலைநகல் (பெக்ஸ்) சேவைப் பரிமாற்றமும்ää தொடங்கியது. 1992ல் இதுவரை காலமும் அஞ்சலதிபர்களாக ஆண்கள் மட்டுமே கடமையர்றறிய நிலையிலிருந்து மாறி பெண்களும் அஞ்சல்அதிபர் சேவையில் நியமிக்கப்பட்டனர். 1994ல் கொழும்புக்கு வெளியே அஞ்சல் பொதி ஒப்படைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 1996ல் தபால்தரம்பிரிப்பை மேலும் இலகுவாக்கும் பொருட்டு; ஒவ்வோர் ஊருக்கும் தபால்குறியீட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. (உதாரணம்: சாய்ந்தமருது அஞ்சல் குறியீ;டு இலக்கம் 32280) 1999ல் தபால்திணைக்களம் கணிணிமயமாகத் தொடங்கியது.

 2000ம் ஆண்டில் இலங்கையின் பலபாகங்களிலும் தபால்துறை கணிணியைப்பயன்படுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து 2001ல் இணையத் தளம்ää மின்னஞ்சல்ää ஒன்லைன் சேவை என தபால்திணைக்களத்தின் சகல செற்பாடுகளும்;; அதிநவீன மின்னியல் உலகத்தினுள் பிரவேசித்தன. தற்போது அநேகமாக அனைத்து தபால்நிலையங்களிலும் ஒன்லைன் வாயிலாக மின்பட்டியல் கொடுப்பனவுää வெளிநர்டுக்கடிதங்களுக்கான ஒப்படைப்பு அறிவிப்பு இலத்திரனியல் காசுக்கட்டளைச் சேவை (ஈமணிஓடர்) தபால் பணப்பரிமாற்றச் சேவை (பீஎம்.ரீ) என்பன புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு துரிதகதியில் சேவையாற்றப்பட்டு வருகின்றன. ரெலிகொம் நிறுவனத்தின் முற்கொடுப்பனவு அட்டைகளும் விற்பனைக்குள்ளன.

 அத்துடன் தற்போது இலங்கை முழுவதும்ää 609 அஞ்சல் அலுவலகங்களும்ää 3440 உப தபால் நிலையங்களும்ää 536 முகவர் தபால் நிலையங்களும்ää 46 தபால்கடைகளும் இயங்கிவருகின்றன. இவற்றில் திணைக்களத்தின்ää வழமையான சேவைகளானää அஞ்சல் முத்திரைää முத்திரையிடப்பட்ட பொருட்கள்ää எழுதுகருவிகள்ää தொலைபேசி அழைப்புக்கள்ää பிரித்தானிய தபாற் கட்டளைää தொகை அஞ்சல் பொருட்கள் பாரமெடுத்தல்ää சமுகசேவைக் கொடுப்பனவுகள்ää (சயரோகம்ää தொழுநோய்ää புற்றுநோய்ää வறியவர்களுக்கான ஆதாரப் பணக் கொப்பனவுகள்)ää விவசாய மீன்பிடியாளர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுää பரி;ட்சைக்கட்டணம் வாகனத்தண்டப்பணம் செலுத்துதல்ää விரைவுத் தபாற்சேவைää தபால் தேசிய சேமிப்பு வங்கிச் சேவைகள்ää தபால்பெட்டி மற்றம் தபால்பை சேவைகள்ää தந்திச் சேவைகள்ää தொலைநகல்ää போட்டோ பிரதிகள்ää பதிவஞ்சல் மற்றும் சாதாரண கடிதச் சேவைகள்ää உண்ணாட்டு வெளிநாட்டு பொதிச் சேவைகள்ää காப்புறுதிக்கடித சேவைகள்ää அஞ்சல் அறிமுக அட்டைää புதினப்பத்திரிகைகள் பதிவு செய்தல்ää என்பவற்றுடன் மேலும் பல நவீன காலத்திற்கு வேண்டிய புதிய பல சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன.

 புராதன காலத்திலிருந்து அதிநவீன காலம் வரை அனைத்துலக மக்களுக்கும் தனது ஈடினையற்றதும்ää அர்ப்பணிப்புமிக்கதுமான புனித சேவையை எவ்விதப்பாகுபாடுமின்றி ஆற்றிவரும் தபால்துறையினருக்காக ~உலகதபால்தினம் பிரதி வருடமும் ஒக்டோபர். 9ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.0

பாவலர் பஸீல் காரியப்பரின் அழகான ஒரு சோடிக் கண்கள். தீரன். ஆர்.எம். நௌஸாத்.

 காலத்தால் அழியாத ஈழத்துக் கீதம்.

 பாவலர் பஸீல் காரியப்பரின் அழகான ஒரு சோடிக் கண்கள்.

தீரன். ஆர்.எம். நௌஸாத்.


~~அழகான ஒரு சோடிக் கண்கள்.- அவை

அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்.

  புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஐயா அவர்களால்ää ~பாவலர்| பட்டம் பெற்றவர்ää கலாநிதி எம். ஏ. நு..;மான் அவர்களால்ää ~அரும்பு மீசைத் தத்துவஞானி..!| என புகழ்ந்துரைக்கப்பட்டவர்...தமிழறிஞர் திரு வே. அருளையா அவர்களால்ää ~எழுக புலவனே..!| என வாழ்த்தப்பட்டவர்ää தமிழ்த்துறைத் தலைவர்.ää றமீஸ் அப்துல்லா அவர்களால்ää ~~காணாமற்;போன ஒரு தங்கக் காசு..!|| என வர்ணிக்கப்பட்டவர்....பாவலர் பஸீல்காரியப்பர்!

 இத்தகைய பாவலர் எழுதியää ‘அழகான ஒரு சோடிக் கண்கள்கவிதை பற்றி அறியார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போதுää அதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின்ää இசையமைப்பில்ää மெல்லிசை வித்தகர்ää திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின்ää மதுரமான குரலில்ää ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.

 இக்கவிதையின் முழுமூலத் தலைப்பு ஒரு சோடிக் கண்கள்என்பதாகும். இது 1956ம் ஆண்டுää பாவலரதுää மாணவப் பருவத்தில்ää முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புக்குப் பாடம் எடுத்தää ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில்ää சக மாணவர்களினதும்ää மற்றும்ää சில ஆசிரியர்களினதும்ää ;குறும்புத்தனமான இரசனைக்குள்ளானார். 

இதன் பிறகுää 1966ல்ää பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போதுää தன்னுடன்ää மட்டக்களப்பு தொடக்கம்ää கொழும்பு வரைää பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண்ää இறங்க எத்தனிக்கும் போது. தடுமாறியதையும்ää அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போதுää கண்களிரண்டும்ää இல்லாதிருப்பதையம் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம்ää அவருக்கு இந்த ஒரு சோடிக்கண்கள்கவிதை ஞாபகத்தில் வரää ரயிலில் அமர்ந்தபடியேää பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்துää மறுபடியும்ää அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்துää அதற்கு கண்ணூறுஎன்ற தலைப்பிட்டுää தினகரன் பத்திரிகைக்கு அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது. சில நாட்களின் பின்னர் பாவலரின் இலக்கிய அன்பர் ஒருவரே இப்பத்திரிகை நறுக்கை பாவலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

 பல காலங்கள் கடந்த பின் பாவலர் ஒருநாள் தன் கிராமத்து வயல்வெளிகளில் உலவிவிட்டுää பக்கத்திலுள்ள தேநீர் கடையொன்றுக்குச் சென்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதுää இக்கவிதை ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கான மெல்லிசைப் பாடலாகää ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் முடிவில்ää அறிவிப்;பாளர்ää ~~பாடலைப் பாடியவர். எஸ்.கே. பரராஜசிங்கம். இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை.|| என்று அறிவிப்புச் செய்தார். இதனைக் கேட்ட பாவலர்ää புன்முறுவலுடன் வாளாவிருந்து விட்டார். தன்னிடம்ää தினகரன் பத்திரிகை நறுக்கு முதலான ஆதாரங்கள் இருந்தும்ää அதனை இலங்கை வானொலிக்கு அறிவிக்கவுமில்லை. அப்பாடல்ää இயற்றியவர் பெயர் தெரியாமலேயேää மேலும்ää பன்னிரெண்டு வருடங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

பின்னர் இதன் படைப்பாளி யாரெனத் தெரிய வந்த சந்தர்ப்பம் மிக்க சுவாரஸ்யமானது. அச்சம்பவத்தை சிரேஸ்ட அறிவிப்பாளர்ää பீ.எச். அப்துல்ஹமீது அவர்களின் சொற்களில் காண்போம்.

 பஸீல் காரியப்பர் அவர்கள் பாவலர் பட்டம் பெற்ற காலகட்டம். ஒரு நாள் இவர் வானொலி நிலையம் வந்திருந்தார். அவ்வேளையிலேயே இவரைப் பேட்டி காண ஏற்பாடாகியிருந்தது. நிரலில் இருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பதிலாகää பாவலரின் பேட்டி நேரடி ஒலிபரப்பாக இடம் பெற்றது. நானேää அவரைப் பேட்டி காண வேண்டும் என்றும் வேண்டப்பட்டேன். சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி. இவ்வளவு ஆற்றலுள்ள தாங்கள் ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை.? நான் கேட்டேன். புன் சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார். எழுதியிருக்கிறேனே.. பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிறதே.. எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு சோடிக் கண்கள்..!அவர் சொல்லக் கேட்டதும்ää என்னையறியாமலேயே இருக்கையை விட்டும் எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.

 பாடல் பதிவாகி ஒலிபரப்பு நடந்தது 1966ல். பேட்டி நடந்தது 1978ல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யாரென்று அறியப்படாமலேää இலங்கையிலும்ää இந்தியாவிலும் இப்பாடல் பிரபலமானது. எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே..ஏன் செய்யவில்லை..?” என்று கேட்ட போதுää “நேயர்கள் இரசிக்கிறார்கள். நிலையம் ஒலிபரப்புகிறது. சந்தோஷம்.. கவிஞன் காணாமல் போய்ää கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய்ää இருப்பது ஒரு சுவையான அனுபவம்.என்றுää புன்சிரிப்புடன் கூறினார். தனக்குக் கிடைக்க வேண்டியää நியாயமான புகழைக் கூடää இலட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது..? பேட்டி முடிந்ததும்ää பாவலரை நேரே இசைத்தட்டுக்கள் வைப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன். அழகான ஒரு சோடிக் கண்கள்.இசைத் தட்டை எடுத்து டுலசiஉள என்ற இடத்தில்ää பாடல் இயற்றியவர் பாவலர் பஸீல்காரியபபர் என்ற அவரது நாமத்தை நானே எழுதும் நல் விதி பெற்றேன்…”

 புவியியல் கற்றிடும் வேளை- அவை

புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை

தவித்துத் துடிப்பதென் வேலை

தங்குவதெங்கே மனமொரு பாலை.

 இச்சம்பவத்தின் பின்னர்ää ~அழகான ஒரு சோடிக் கண்கள|; மேலும் பிரபல்யமாகி இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் பிரபல்யம் பெற்றது. இப்பாடலையிட்டுää மூத்த அறிவிவிப்பாளர்ää திருமதி. கமலினி செல்வராசன்ää பின்வருமாறு ஞாபகம் கொள்கிறார்..

 எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். என் இள மனதைக் கவர்ந்த மெல்லிசைப் பாடல்களில்ää ஒன்று அழகான ஒரு சோடிக் கண்கள்.

 தத்துவப் பாடம் நடக்கும்- அவை

தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்.

வித்தையில் பித்துப் பிடிக்கும்.. நம்ää

வீட்டார் அறிந்தால் கன்னந் தடிக்கும்.

 என்ற அடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதிருந்தே அந்தப் பாடலின் மெட்டும் வரிகளும்ää அவ்வப்போது என் மனதில் ஒலிக்கும். எனக்குத் திருமணமான பின் ஒருநாள்ää எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு மெல்லிய மனிதரை சில்லையூரார் எனக்கு அறிமுகம் செய்தார். இவர்தான் பாவலர் பஸீல் காரியப்பர்!என்று. ஓ!. அழகான ஒரு சோடிக் கண்கள்..?” என்றேன். அன்றைய அறிமுகத்தின் பின் அவர் எனக்கு அண்ணா ஆனார். ஒரு பாசமான அண்ணணாக எப்போதும் கதைப்பார். சில்லiயூராரும்ää பஸீல்காரியப்பரும் கதைக்கத் தொடங்கினால்ää இரவு முழுவதும்ää கவிதையும்ää இலக்கியமும்தான்.. கேட்கக்கேட்க அலுக்காதவை. பாவலர் பட்டமளிப்புக்குää சம்மாந்துறைக்கு சில்லையூராருடன் வந்திருந்தேன். புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை போன்ற மாமேதைகளுடன் என்னையும் பேசச் சொன்னார்கள். பாவலர் என் கணவர் மீது கொண்ட பாசத்தை அவர்ää தன் கவிதைத் தொகுதியைச் சில்லையூராருக்கு சமர்ப்பனம் செய்ததிலிருந்து உணர்கிறேன்.. பஸீல்ää அண்ணா.. இந்த மரிக்கும் உலகுக்கு உயிரையும்ää உணர்ச்சியையும் தாருங்கள்…!”

 உண்மைதான்.. பாவலர் மரித்த பின்னர் கூட இப்பாடல் உலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருமையான பாடல்ää எத்தனையோ இதயங்களை அக்காலத்தில் இணைத்திருக்கின்றது. இப்பாடலில்ää மெய்மறந்தää பிரபல எழுத்தாளரும்ää பிரதேசச் செயலாளருமானää ஏ.எல்.எம். பளீல்ää (நற்பிட்டிமுனை பளீல்.) சொல்வதுää

 “1966ம்ää ஆண்டுக்குப் பின்னரான காலங்களில்ää க.பொ.த. சாதா. தரத்தைப் படித்துக் கொண்டு சென்ற சகலருமேää பாவலர் பஸீல் காரியப்பர் என்ற நாமத்தை உச்சரிக்காமல் விட்டிருக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் தெரிய வந்தது. முதன் முதலாக பஸீல்காரியப்பர் அவர்களின்ää பெயர் எனக்குத் தெரிய வந்தது அவரது இந்தப் பாடல்pன் மூலமே.! இப்பாடலின் கருத்துச் செறிவை இரசித்த முதலாவது கணத்தில்ää இது ஒரு தென்னிந்தியப் பாடலோ என்று எண்ண முடிந்;தது. இப்பாடல்ää ஒலிபரப்படும் போதெல்லாம்ää அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டுää காதுகூர்ந்து கேட்டு இரசிக்கும் நிலைக்கு ஆளோனேன். ஒவ்வொரு வரியையும்ää அணுவணுவாக இரசிக்கும் நிலையும் ஏற்பட்டது.

 இதனை யாராவது தட்டச்சு செய்தால்ää அவரும் இப்பாடலை இசையுடன் முணுமுணுத்திருப்பார். இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மனமும்ää அப்படியே ஒரு கணம் முணுமுணுக்கும். இப்படிப்பட்ட பாடலை என் இலக்கிய இரசனையோடுää அக்குவேறுää ஆணிவேறாகப் பிரித்துப் படித்து இரசிக்கும் நிலை ஏற்பட்டது.…”

 ஆட்சியியல் மறு பாடம்.-நான்

அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்.

ஆட்சி செய்யுமுனைச் சாடும்- நான்

ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்.

 கலாநிதி. எம்.ஏ. நுஃமான்ää அவர்கள்ää இப்பாடல் பற்றிக் கூறுகையில்ää “……அதன் கற்பனையும்ää உணர்வும் வாலிபத்திற்கே உரியன. நான் ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்அழகான படிமம்……..” என்கிறார்.

 கல்முனைக்குடி கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்ää ஏ.எல்.எம். முஸ்தபா தண்டயல் அவர்கள் இப்பாடல் பற்றிக் குறிப்பிடுவது: “…….பாவலரு சேருää ந்தப் பாட்ட அவர்ர சொந்தக் கொரலில கடக்கரயில இரிந்து ஒரத்த சத்தமாப் பாடுவாரு பாருங்க.. அந்த ராகத்தää அந்த வடிவää அந்தக் கருத்த நெனச்சி நெனச்சி கேட்டுட்டேயிருப்பம்..ங்கா வாப்பா..! ச்சாää மனிசன் என்னமாக் கட்டி என்னமாப் பாடினாhரு.. பெரிய பாவலரு ல்லோ..?”

 1966ம் ஆண்டைய அதுவும்ää ஒருää இலங்கை மெல்லிசைப் பாடலைப் பற்றி 2001ம் ஆண்டுää முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்..? ஆனால்ää 2001.04.03.ல்ää தினமுரசு. வாரஇதழில் சிந்தியா பதில்கள்’. பகுதியில்ää வெளிவந்த ஒரு கேள்வி பதில் இது:-;.

சிந்தியா காயப்பட்டதுண்டா..?

-சுறையா ஸஹீட். மாவனல்லை.

 அழகான ஒரு சோடிக் கண்கள்..அவை அம்புகள் தாக்கி என் உடலெல்லாம் புண்கள்-

பஸீல் காரியப்பரின் பாடல்..எஸ்.கே. பராவின் குரலில்.. அந்த மாதிரியான நம்நாட்டுப் பாடல்கள்

இப்போது வருவதில்லையே என்பது மனதிலுள்ள காயம்.

 தவிரவும்ää இப்பாடல் இயற்றப்பட்டுää 43 வருடங்களுக்குப் பின்னரும்ää நினைவு கூரப்படுகிறது என்றால் இதன் ~பெறுமதி| என்னே... அதாவதுää 2008 மே மாத ஞானம் இதழில்ää விசுவமடு இந்திரசித்தன் எழுதியுள்ள ஒரு குறிப்பில்ää பின்வருமாறு உள்ளது. ~~.......திரு. அன்புமணி அவர்கள் பாண்டிருப்புக்கு அப்பாலும் சற்று நகர்ந்து இருக்கலாம். இடையிடையே வானொலியில்ää வந்து போகும்ää ~அழகான ஒருசோடிக் கண்கள்..|| என்ற பாடலின் கவிஞர் பஸீல்காரியப்பரையும் மறந்து போனார் போல் தெரிகிறது.....||

 கடற்தொழிலாளி முதல்ää கலாநிதிகள் வரை சென்றடைந்த இந்தப் பாடலை; எழுதிய பாவலரின் அழகான ஒரு சோடிக் கண்கள்;ää கடந்த 2006ல் நிரந்தரமாக மூடிக் கொண்டன. ஆயினும்ää இன்னும் ஐம்;பது வருடங்கள் சென்றாலும்ää அவரின் ~அழகான ஒரு சோடிக் கண்கள்| வாழும்..

 

தாய்மொழிப் பாடம் நடக்கும்- நறை

தாங்கிய கண்களோ மின்னலடிக்கும்

ஏய்..!என்றென்னைப் பிடிக்கும்- மனம்

எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்..?(1966)