Monday, March 14, 2022

ஷாமிலா செரீப்/ நாகூர் ஆரிப்-

 மறைக்கப்பட்ட சொற்களின் அழகு--- ஷாமிலா செரீப்

  \\எழுத்தில் உடல் விதைத்து \\அதைக் கொண்டாடியபடி\\கவிதை அறுவடை நடக்கிறதெனில்\\என்னுடைய இலக்கிய நிலம்\\தரிசாய்க் கிடக்கட்டும்\\\\ என்று ‘’விட்டேத்தியாகச்’’ சொல்லியபடி நடக்கும் ஷாமிலாவின் கவிதைகளில் நேற்று முழுவதும் தோய்ந்து போயிருந்தேன்..

 தன பல கவிதைகளிலும்....காலம் விதைத்த ஆண்-பெண் முரண் அச்சுகளை ஒரு புரிந்துணர்வுக் கோட்டில் ஒன்றிணைக்க முடிகிறதா என பரிசோதிக்கிறார் ஷாமிலா...

 ‘’வாசிக்கப்படாத கவிதையிடம் வாசிக்கப்படாத புத்தகங்கள் அதிகரித்து விட்டன///// என்று நம்மை ஒருகணம் அசத்தி விடுகிறார்...\\என் குழந்தை தூங்குகிறது...ஒன லைன் கசீதாக்கள் ஒழித்துக் கொண்டிருக்கின்றன//// என்று நம்மை நகம்கடிக்க வைக்கிறார்...

 ///பெண்ணுடலையும் மூடியிருக்கும் முலைகளையும்..யோனியையும் அதன் உணர்ச்சியையும்... வெளிபடுத்துதல் கவிதை வியாபாரம் எனில் என் கடையை சீல் வைத்து மூடவே விரும்புகிறேன்...... என்று மேற்படி ‘’தோல் வியாபாரிகளுக்குதன்னிலைப் பிரகடனம் செய்கின்ற இந்த துணிச்சலை வியக்காமலிருக்க முடியாது...

 பனிக்குளம்பில் கொஞ்சமும்..தீப்பிழம்பில் கொஞ்சமுமாக மறைக்கப்பட்ட சொற்கள் சேர்த்து ஒரு ‘’பனித்தீ’’ செய்து தமிழுக்கு சார்த்தியிருக்கிறார் ஷாமிலா... வாழ்த்துக்கள் அவருக்கு....

 

 முகநூலில் நான்....(Dr. நாகூர் ஆரிப்--Nagoor Ariff)

  தற்போது முகநூல் இலக்கியம் ஒரு பேசு பொருளாகிவிட்ட நிலையில் சாய்ந்தமருதின் DNA என வர்ணிக்கப்படும் டாக்டர் நாகூர் ஆரிப் தன் முகநூல் பதிவுகளை தொகுத்து ஒரு நூலாக்கியிருக்கிறார்... ஏறக்குறைய ஒரு வருடகாலப் பதிவுகளை உள்ளடக்கியுள்ளது இந்நூல்...

 சமுகத்தின் துடிக்கின்ற இதயத்தில் வைத்து அதன் துடிப்பை கேட்கும் ஒரு ''ஸ்டெத்ஸ்கோப்'' இந்நூல் .

 வைத்தியக் குறிப்புகள்-ஊர்ப் பிரச்சினைகள்-சமூகப் பிரக்ஞையான அறிவுறுத்தல்கள்-தனி மனித உணர்ச்சிக் கூறுகள்- முதலான பல்வேறு வகையிலான தொகுப்பாக, இதனை ஆக்கியுள்ளார் ..

 ‘’அசடு கசடு’’ இல்லாத நேர்த்தியான பொறுப்புணர்வுமிக்க பதிவுகளின் சொந்தக்காரரான நாகூர் ஆரிப் தன் எழுத்துக் கத்தியை கவனமாகப் பாவித்து நேர்த்தியான முறையில் ''சமூகத்துக்கான சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார் இந்நூலில்...

 டாக்டர் அல்லவா...? சில இடங்களில் சிலருக்கு ''ஊசி'' போட்டிருப்பார் என நூல் நெடுகிலும் பார்த்து வந்தேன்...இல்லை....இனிமையான பதிவு மாத்திரைகளை மட்டுமே சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் கொடுத்து ஆரோக்கிய மருந்தும் கட்டியுள்ளார்...

 ‘’சாய்ந்தமருது நவம்பர் புரட்சி’’யின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து முகநூலில் பலத்த சர்ச்சைகள் விவாதங்களை சந்தித்த நாகூர் ஆரிப் இந்நூலில் அந்த சர்ச்சைகளை கூடியவரை கவனமாக தவிர்த்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது..இதற்காக நூலாசிரியரை மிகவுமே பாராட்டலாம்... இது இந்நூலின் மையப் பொருளை சிதைக்காமல் நூலுக்கு ஒரு நுகர்ச்சிப் பெறுமானத்தைஅதிகரிக்கச் செய்கிறது..

 அழகான தளக் கோலம்...நேர்த்தியான அச்சு...கொண்ட இந்நூலை BRIGHT FUTURE FOUNDATION வெளியிட்டிருக்கிறது...

 சாய்ந்தமருது உள்ளூராட்சிக்கான விவாதப் பொருள்கள்..அது சம்பந்தமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்தாடல்கள் தர்க்கங்கள் பற்றி தனியாக ஒரு நூலை வெளியிடுதல் சாய்ந்தமருதின் DNA ஆன நாகூர் ஆரிபின் முன் நிற்கும் இன்னொரு முக்கிய கடமைப்பாடு ஆகும்..

நூலாசிரியருக்கு நம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்....

 முகநூலில் நான்டாக்டர் நாகூர் ஆரிப்-398A. அல்-ஹிலால் வீதி-சாய்ந்தமருது-11---0773680190

 

No comments:

Post a Comment