காகிதங்களுக்குள் ஓடித்திரியும் ‘கனரக’க்கதைகள்...
சாத்திரியின் எழுத்துக்களால் ஏற்பட்ட சில சர்ச்சைகள் பற்றி ஓரளவு தெரிந்து
கொண்டிருந்த நமக்கு அவரது புனைவுகளை முழுமையாக அடைய முடியாதிருந்தது. நண்பர்
ஏறாவூர் சப்ரி அன்பளித்த ‘’அவலங்கள்’’ சிறுகதை தொகுப்பில்தான் சாத்திரி யாரென பகுதியளவில் உணர
முடிகிறது...கருணாகரனின் முன்னுரையை முதலில் வாசிக்காமல் கவனமாக கடந்து
சாத்திரியின் கதைக் கணனி நிலத்தில் ‘’உழக்கிவிட்டு’’ கடைசியில்தான் கருணாகரனிடம் வந்தோம்..அது நல்ல அனுபவம்தான்... ..
சாத்திரி கதை மட்டுமே சொல்கிறார்..கதைகளின் கட்டுமானம் அதன் அழகியல் தளவமைப்பு
பற்றியெல்லாம் அக்கறை செலுத்துவதில்லை என்று சிலர் கூறும் கருத்தில் பகுதியளவில்
உடன்பட முடிகிறது. எனினும் சாத்திரியின் கதைகளே தம்மை தன்னியக்கமாக கட்டமைத்துக்
கொள்கின்றன என்று சொல்வேன். அவரது கதைகளின் மையவிசையானது நுகர்ச்சியாளனை நோக்கி
வீறாய் தாக்கும்போது வேறு அம்சங்கள் புறந்தள்ளப் படுவது சகஜமே.. கதைகளின் மீதான
ஈர்ப்புணர்வில் ஏனைய அம்சங்கள் சொல்லப்படாமை ஒரு பிரதான விஷயமாக இல்லை..
சாத்திரி ஒரு வேகமான கதை வாகனச் சாரதி.. பயணியை ஏற்றிக்கொண்டு கடுகதித்
தரிப்புகளில்தான் நிறுத்துகிறார்..இடையிடையே வேகத் தடுப்போ கிளைப் பாதையோ
இல்லை..கருணாகரனும் இதை ஆமோதிக்கிறார்.. சாத்திரி ஒரு விடுதலைப்புலி என்பதால்
அவர்களுக்குரிய இலக்கை அடையும் மட்டும் வேறெந்த கவனமும் கொள்வதில்லை என்கிறார்...
இத் தொகுப்பில் உள்ள சாத்திரியின் கதைகள் எல்லாமே போர்க்கால மையத்தில்
கருவுற்றவைகள்தாம்.. ஆயின் நாட்சென்ற பிரசவங்கள்.. நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு
விஷயம் என்னவென்றால் ஒரு போராளியாக துப்பாக்கி பிடித்து திரிந்த இவரின் கை பேனா
பிடித்து சரளமாக ‘’எழுதிச் செல்லும் விதி’’யின் கையாக மாறியதுதான்..அதுதான் இரும்புக்குள் ஈரம் இயல்பில்
இருந்திருக்கின்றது எனலாம் ...
தொகுப்பில் உள்ள 12 கதைகளிலும் 12 கண்ணிவெடிகளை புதைத்து வைத்து நம்மை அதன் மீது பதை பதைப்புடன் பயணிக்க
வைக்கிறார் சாத்திரி.,அவை ஒவ்வொன்றையும் பற்றிய உடன்பாடு-முரண்பாடுகள் பற்றி விலாவாரியாகப் பேச
இங்கே இடமில்லை.
‘’ராணியக்கா’’ வின் அவலச்சாவு ..’’மல்லிகா’ வுக்கு ஏற்படும் அவமானங்கள்...’’சிமிக்கி’’ தரும் அன்புணர்ச்சி...’’மலரக்கா’’தந்த பொல்லாப் பொருந்தாப் பாலுணர்ச்சி...’’அலைமகளின்’’ அவல முடிவு...’’கடைசி அடி’’ தரும் இடி..’’கைரி’க்கு’ நடந்த கொடுமை...’’அகதிக் கொடியில்’’ பறக்கும் அனுதாப ஏமாற்றம்...’’பீனாகொலடா’’ தந்த பாலியல் போதை...’’முகவரி தொலைத்த முகங்களில்’’ தொலையும் ராகவனின் விண்ணேற்றம் ...’புரட்...சீ..’’ யில் காறி உமிழும் பரிதாபங்கள்...’’அஞ்சலி’’யின் அவலச் சாவு..........
என்றெல்லாம் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஆயிரம் கதைகள்..பல்லாயிரம்
உணர்வுகள்..பரிதாபங்கள் உட்காவுகை கொண்டு தக்க சமயத்தில்
வெடித்தெழுகின்றன...அடடா..சாத்திரியின் கைகளுக்கு நிச்சயம் ஒரு ‘’’காப்பு’’ கட்டு இடத் தேவை உண்டு...
இரு விஷயம்கள் நமக்குப் புரியவில்லை..ஒன்று-----.
ராணியக்காவும்..அலைமகளும்...கடைசி அடி அப்பாத்துரையும்..கைரியும்..ராகவனும் ,குட்டியும்..தோழர் சுரேந்தரும் ..அஞ்சலியும் இப்படி சாத்திரி தன்
பாத்திரங்களில் ஏராளமானோரை அல்பாயுசில் ‘’போட்டுத் தள்ளியிருக்கும்’’ மர்மம்தான் என்னே....மற்றது பெரும்பாலான கதைகள் ஏதோ ஒரு மையப் புள்ளியில் flash back பின்னோட்ட உத்தியில் வைத்துப் பின்னப்பட்டிருக்கின்ற விஷயமும் புரியவில்லை..
மற்றப்படிக்கு மூன்று நாட்களாக நம்மை தன் புனைவுப் பங்கருக்குள் வெற்றிகரமாக கட்டிப்
போட்டுவிட்ட சாத்திரியின் எழுத்து வெற்றியை நிச்சயமாக கொண்டாட முடியும்...
‘’ஆயுத எழுத்து’’அவரது பிரசித்தி பெற்ற நாவல். இன்னும் அது நம் வாசிப்புக்கு வரவில்லை..
உண்மையான வாழ்த்துக்கள் சாத்திரி...
மடி வெடித்த துயரங்களின் கதை
மீனவர்களின் தங்கச் சுரங்கமாகவிருந்த ஒலுவில் கிராமத்தின் சாபக் கேடாக வந்த
துறைமுகம் என்னும் கடல் பூதம் கிராமத்தையும் அக்கிராம மக்களின் வாழ்வாதாரங்களையும்
படிப்படியாக விழுங்கி விட்ட கொடுமையை அச்சொட்டாக ஆவணப்படுத்தியிருக்கின்ற
அற்புதமான புதினம் இது...
துறைமுகம் வரப்போகிறது ..நம் துயரங்கள் இனி சாகப் போகிறது என்று தங்கக் கனவில்
இலயித்திருந்த இந்த அப்பாவி மனிதர்களின் கச்சையையும் உருவி அம்மணமாக்கி விட்ட
காலக்கொடுமையை உயிரோட்டமான மாந்தர்களின் பாத்திரங்கள் கொண்டு மிக இயல்பாக
கதைத்துச் செல்கிறது வஹாப்தீனின் இந்த புதினம்....
துறைமுகத்துக்காக கடலைத் தோண்டி ஆழமாக்க கடல் மறுபக்கமாக கரையை அரித்துக்
கொண்டு ஊருக்குள் முன்னேறியது .. அதை தடுக்க பாரிய கற்களை கொட்டியதால் கரைவலை தள்ள
தோணிகள் போக முடியவில்லை..எந்திர படகுகள் வர முடியவில்லை .... காலா காலமாய் கடலை
நம்பி வாழ்ந்த மீனவர் தொழிலிழந்தனர்... இலட்சக்கணக்கான பெறுமதியான கடலோர காணி
நிலங்கள் ஐந்து சதத்துக்கும் தேவையற்றுப் போயின... நிலமிழந்து தொழிலிழந்து
நிர்க்கதியான மக்களின் குரலை கேட்க ஆளில்லை..அதிகாரிகள் இல்லை..அரசியல் வாதிகள்
வரவில்லை...
தோண்டத்தோண்ட துயர அலைகள் சீறிப்பாயும் சம்பவங்களை தன் அனுபவமிக்க
எழுத்துக்களால் ஒரு ‘’காகிதக்கலங்கரை’’விளக்காக கட்டி எழுப்பியிருக்கிறார் நாவலாசிரியர்..
புதினம் நெடுகிலும் ஆசிரியர் இலாவகமாக கையாண்டுள்ள கிராமிய உவமேய உதாரனங்களும்
மண்வளச் சொற்களும் நாவலுக்கு ஒரு அசைக்க முடியாத அற்புதமான அச்சாக இருக்கிறது..
அவற்றை இடமறிந்து தேவையறிந்து அற்புதமாக தெளித்துள்ளார் வஹாப்தீன்..(/// கிழக்கு
வானம் துள்வண்டன் மீனின் மேனி போல சிவந்திருந்த காலைப்பொழுது....///) .
இந்த ‘’தோறாப்பாடு’’ நாவல் சொல்லும் துயரப்பாடுகள் பற்றி எழுத முகநூலில் இடமில்லை.. வாழ்த்துக்கள்
வஹாப்தீன்..SEASS Organization வெளியீடான இந்நாவலின் தளவமைப்பில் ஆசிரியர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
....12 ஆம் பக்கத்துக்குப் பிறகு 15ஆம் பக்கம் வருகிறது..176ஆம் பக்கத்தின் பின்னரே 175 ஆம் பக்கம் வருகிறது.. ‘’நடுவில் கொஞ்சப் பக்கத்தை காணோம்..’’
THORAAPPAAADU—Rs,500/=---
Pgs—189-----Mr. -J.WAHAAPTHEEN…64- Old P.O. road—OLUVIL--3—0778809794..
SEASS Organization வெளியீடான இந்நாவலின் தளவமைப்பில் ஆசிரியர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
....12 ஆம் பக்கத்துக்குப் பிறகு 15ஆம் பக்கம் வருகிறது..176ஆம் பக்கத்தின் பின்னரே 175 ஆம் பக்கம் வருகிறது.. ‘’நடுவில் கொஞ்சப் பக்கத்தை காணோம்..’’
THORAAPPAAADU—Rs,500/=---
Pgs—189-----Mr. -J.WAHAAPTHEEN…64- Old P.O. road—OLUVIL--3—0778809794..
No comments:
Post a Comment