Monday, March 21, 2022

தாஸிம் அஹமத் -கதீர்

 

கவிதைச் சிறகு. தாஸிம் அஹமத் 

மானுடத்தின் பால் கொண்டுள்ள ஆழ்ந்த கரிசனையும்ஆன்மிகத்தின் மீதான அவாவுகையும், மட்டுமன்றி, சமூக அழுக்குகள் மீதான ஆக்ரோஷ வெளிப்படுகைகளும்தாம் இக்கவிஞனின் ஆதர்ஷம் எனலாம்...

கவிதைச் சிறகு கட்டித் தீராவெளியில் பறந்து, தகிக்கின்ற சொற்களைக் காவிக் கொண்டு வந்து, காகிதத்தின் மீது எறியும் எழுத்து அபாபீல் இவர்..

 இன்னும், தன் மென்னுணர்வுப் புள்ளிகளிட்ட கவிதைச் சிறகால், மானுடர் மீது இதமாய் வீசுகின்ற எண்ணத்துப் பூச்சியும் இவரே..

லண்டன் தமிழ் இலக்கிய  நிறுவகமும், இலங்கை தமிழ் இலக்கிய  நிறுவகமும், இணைந்து வழங்கிய 2019 இரா.உதயணன் விருது பெற்ற இக்கவிதை சிறகை முழுவதுமாக வாசித்த பின், இக்கவிஞனை விட்டு வெகுநேரம் பிரிய முடியாதிருந்தது..

வகவம் தலைவருக்கு வாழ்த்துக்கள்..

 

 

காக்கை நிற சேலை. இது,    கதைகளின் நூதனசாலை..


கதீரை ஒரு கவிஞனாகவே கருதியிருந்தேன். காக்கை நிற சேலை வாசிக்கும்வரை.

ஆன்மாவின் இலாவண்யத்துள் தன் கதைகளை இழைத்துள்ள கதீர், இந்த 8 கதைகளிலும் காலத்தை ஒரு மெல்லுணர்வாக சித்தரித்துப் பார்த்துள்ளார்.

கதீர், இயக்கியுள்ள இக் கதைகள், நுகர்வோரின் மனதில் , ஒரு, கதிரியக்க வீச்சின் அதிர்வுகளைத் தவறாமல் தருகிறது.

அதிலும் பூனைக்குடில், ஆக்கா, மெல்லுணர்வு என்ற கதைகள் அவன் எழுத்தின் உச்ச வீச்செல்லை எனலாம்.

கதீரின் கதைகள் ஒவ்வொன்றையும் பற்றி, விரிவாக பேசலாம்தான்..பார்ப்போம் ஒரு சந்தர்ப்பத்தில்...

வாழ்த்துக்கள்

கதீர்.

 

No comments:

Post a Comment