Monday, March 14, 2022

நூருல் ஹக்கின், ஈமானியப் பேரொளிகள். ஆர்.எம்.நௌஷாத்

 

நூருல் ஹக்கின், ஈமானியப் பேரொளிகள்.

ஆர்.எம்.நௌஷாத்

 

நாடறிந்த எழுத்தாளர் ~ஹாதிபுல் ஹ_தா| எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்கள் எழுதியுள்ள இஸ்லாமிய ஆய்வு நூல் இது. சாய்ந்தமருது மருதம் கலைஇலக்கிய வட்டம் இதனை வெளியிட்டுள்ளது. புனித மதீனாப் பள்ளியின் மினாராக்களும் கோபுரங்களும் அழகிய கரும்பச்சைப் பின்னணியில் அழகுற அமைந்துள்ள அட்டைப்படமும் பின்னட்டையில் ஆசிரியரின் அறிமுகக் குறிப்பும் கொண்டு மொத்தமாக 104 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

 இஸ்லாமிய ஆய்வு நூல் வகையிலான இதில்; நபிகள் கோமான் (ஸல்.) அவர்களைப் பற்றி பத்துத் தலைப்புகளிலும். அல்லாஹ்வின் தரிசனம் பற்றி இரு தலைப்புகளிலும் ~அவ்லியாக்கள்| பற்றி 34 தலைப்புகளிலும் பற்பல இஸ்லாமிய மெய்ஞானஆய்வுக்குரிய விடயங்கள் மொத்தமாக நாற்பத்தியாறு தலைப்புகளில் சுருக்கமும் இறுக்கமுமாக ஆனால் தெளிவாகவும் எளிதாகவும் சொல்லப்பட்டுள்ளன.

 இதனை வெளியிட்டுள்ள மருதம் கலை இலக்கிய வட்டத் தவிசாளர் கவிஞர். எம். நவாஸ் சௌபி தனது குறிப்புரையில் ~~....முஸ்லிம் சமுகத்திற்கான பல்வகைத்தன்மையான அடையாளங்களையும் அரசியல் சமயம் என்ற இருபெரும் துறைகளினாலும் மிக அற்புதமாகத் தன் எழுத்துக்களால் பதிவு செய்கின்றார். இப்பதிவுகள்; யாவும் வரலாற்றுத் தேவையாகவும் ஆய்வுகளுக்குமான ஆதாரங்களையும் பலஅவதானப் புள்ளிகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பதை இவரது எழுத்து ஆளுமை எமக்குப் புலப்படுத்துகிறது.....|| என்று குறிப்பிட்டுள்ளார்.

 ~~நமது நாட்டின் தேசியப்பத்திரிகைகளிலும் வாரப்பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுத்துருவாக்கம் செய்து வரும் ~ஹாதிபுல் ஹ_தா| எம்.எம். நூறுல்ஹக் அவர்களின் ஆக்கங்கள் புறக்கணிக்க முடியாத வரலாற்றுப் பதிவுகளாகும்.

 1988ல். வெளியான இவரது ~தீர்வும் தீர்வுகளும்| 2002ல் வெளியான ~~சிறுபான்மையினர் சில அவதானங்கள்| 2006ல் வெளியான ~முஸ்லிம் பூர்வீகம்| ஆகிய அரசியல் சமுகம் சார்ந்த மூன்று நூல்களும் அறிவுஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக மட்டங்களிலும் ஊடகத் துறையிலும் அதிகரித்த கவனயீர்ப்புக்குட்பட்டவையாக உள்ளன.

 1983ல் ~அல்ஹ_தா| காலாண்டிதழ் 1984ல் ~சோலை| கவிதை இதழ் 1988ல் ~வலிமார்களும் வஸீலாத் தேடல்களும்| போன்ற நூற்களும் மற்றும் 1993ல் ~இருபெருநாட்களின் சிறப்புமலர்| 1996ல் ~தெரிந்த விடைகளுக்கான கேள்விகள்..| 1998ல் ~தீர்வும் தீர்வுகளும்| 2002ல் ~சிறுபான்மையினர் சில அவதானங்கள் | 2006ல் ~முஸ்லிம் பூர்வீகம்| ஆகிய ஆய்வு நூல்கள் இவரது சமய இலக்கிய அரசியல்துறைகளின் ஆரோக்கியமிக்க பங்களிப்புக்களாகும்......|| இவ்வாறு நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தில் சாய்ந்தமருது ~அபாபீல்கள் கவிதாவட்டச்| செயற்சபை முதல்வரான கவிஞர். ஏ.எம்.எம். ஜாபீர் (பீ.ஏ) பதிவு செய்துள்ளார்.

 ~hமானியப் பேரொளிகள|; எனும் இந்நூலைப் பார்வையிட்டுள்ள அல்ஹாஜ் மௌலவி பாஸில். ஏ.எல். பதுறுத்தீன் (ஷர்க்கி. பரேலவி) அவர்கள் தமது குறிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment