Monday, March 14, 2022

எப்.எம். தவிர்.!----ஆர்.எம். நௌஷாத்

 

எப்.எம். தவிர்.!

ஆர்.எம். நௌஷாத்

 

 

நீண்ட காலத்தின் பின்னர். எனது நன்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவர் இலங்கை அங்கொட மனநலமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்;;;;விற்று அதிர்ந்து போனேன். நன்றாக இருந்த மனிதருக்கு நேர்ந்த கதிபற்றி அறிய நேரே வைத்தியசாலைக்கே சென்று சந்தித்தேன். மனிதர் கட்டிலில் இருந்தவாறே திருதிருவென முழித்துக் கொண்டும் கட்டிலைப் பிராண்டிக் கொண்டும் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டுமிருந்தார். மனைவி பக்கத்தில் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஒரளவு நிம்மதியடைந்தாள். ~~என்ன நடந்தது..?|| என்று கேட்டேன். ~~பெரிசா ஒண்டுமில்ல தம்பி.. இந்த மன்ஸன் போன கிழமயெல்லாம் பரபரப்பான செய்திகள் கேட்கவேண்டுமென்று ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்தவர்.. குறிப்பாக ~அப்பம் எப்.எம்.| என்ற வானொலிஅலைவரிசையைத் தொடர்ந்து ஒரு கிழமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்..திடீரென்று இப்படி ஆயிற்று...|| என்றாள்.

 ஆகாதா பின்னே..? அமைதியான அதிகாலைப் பொழுதில் 4 மணிக்கு நற்சிந்தனை எதும் கேட்கலாமென்று வானொலியைத் திருகினால் திடீரென கர்ணகடூரக் குரலில் வாத்தியக்கருவிகள் உச்சஸ்தாயியில் அலற உச்சந்தலையில் அடித்தாற்போன்று சுயவிளம்பரப் புலம்பல்.. ~~....ஙாக்ககாகா..ய்..கூ..ய்... நான்தான்டா தல.. எனக்கில்லை நிகர்.. இது அப்பம் எப்எம்...! ங்கா...ய்.. கூ...ய்.. நான்தாண்டா தல..|| இப்படி 17 தடவைகள் காட்டுக் கூச்சல்.. பின்னர் உடனடியாக புதுப்;பாடல்... தமிழகத்தின் புதிய கற்றுக்குட்டிகள் (தமிழகத்திலிருந்து எது வந்தாலும் அது வேத மந்திரம்) இசையமைத்த (?) இசைஞானமற்ற ரீமிக்ஸ் (மறுகலவை) பாடல்கள்... இப்;படியே 3 மணித்தியாலங்கள் மாறி மாறி செவிப்பறைகள் கிழியக்கிழிய ~அதிகாலை அமுதம்| பொழிவார்கள்....

 அப்புறம் 7 மணிக்குச் செய்திகள்.. என்று அதிபயங்கரமான ஒரு குரல் ஒலிக்கும். தொடர்ந்து வாத்தியக்கருவிகள் வீரிட்டலற ~உடன் செய்திகள் முந்தித் தருவது நாங்கள்தான்...| என்ற பெருமையுடன் பயங்கரமான ஒலியில் காட்டுக்கத்தல் முடிந்ததும் படுவிளம்பரப் பாணியிலான வாசிப்பு...~~சன்னாத்திபத்தி வெள்ளிநாட்டுவ்வ்விஜ்யம்.. இல்லங்கய்யில் சம்மாதான்னப் பேச்சுவர்த்தை..|| இப்படியான உச்சரிப்புகளுடன் 3 நிமிடச் செய்திகள் இடைவிளம்பரங்களோடு சேர்த்து 30 நிமிடங்கள்.... அப்பாடா செய்திகள் முடிந்ததா.. மறுபடி சுயவிளம்பரம்.. மறுபடி செவிகிழிப் பாட்டுக்கள்..

 8மணி ஆனதும் வானொலி நேயர்கள் தொடங்கி விடுவார்கள்.. ~~ஹல்ல்ல்லலோ வணக்கம்..! ஏன் சுணக்கம்.. நன்னாயிரிக்கறீங்களா..? அங்க மழை பெய்கிறதா..? இல்லை ஸேர்..! வெயில் அடிககிறது.. அப்படித்தானே....? இல்லை ஸேர்..! அப்படியானால் மப்பும் மந்தாரமுமா..? ஓமோம் ஸேர்..! உங்கட பொழுதுபோக்குகள்..? அப்பம்எப்எம் கேட்டல்.. நாய்வளர்த்தல்...! சுட்டித் தம்பியம் நாய்க்குட்டியும் நன்னாயிரிக்கிறீங்களா..?--- இப்படி நாட்டுக்கு அதிமுக்கியத்துவமான பற்பல கேள்விகளை அரி-விற்பாளர்கள் கேட்டுத் தள்ள.. நேயர்களும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு தன்; பங்குக்கு ஏதோ அறிவிப்பாளர்கள் என்ற தேவ உலகத்தினருடன் பேசும் பிரமையுடன் பேசித் தள்ள....

இனி வானொலி மூடும்வரை இதே வேலைதான். ~~ஹல்லோ..புஸ்பாராணி..? ம்.... அண்ணா..! கணவர் வெளிநாட்டிலா...? ம் அண்ணா..!.. உங்கள் (புதுவருடப்) பணியாரம் எப்படி..? எனக்குத்தருவீங்களா..? ;க்கிக்க்கிக்கீய்... புஸ்பராணி நான் உங்களுக்கு இப்ப குத்து தருகிறேன்.. ஆமாம்..இதோ.. பாடல்...! அடுத்த நேயரை இணைக்கிறோம்.. ஹெல்லலோவ்.. மாயாவா.?. ஓம் சேர்..! அங்க காலநிலை எப்படி..? மழையா... இல்லை சேர்..! வெயிலா...? இல்லை சேர்..! சரிசரி.. சாப்பிட்டீங்களா..? ஒம் சேர்..! யார்யாருக்கு பாடல் வேண்டும்..? சேர்.. உங்களுக்கும் மற்றும் எங்கட அப்பா..அம்மா..தம்பி.. தங்கை.. மச்சினி.. அம்மம்மா.. பாட்டன்.. பாட்டி.. மற்றும் கலையுலக நண்பர்கள்.. எண்ட ~பெஸ்ற் பிரண்ட்| திவ்யா மற்றும் அவட கஸ்பெண்ட்.. அன்டடி.. பிரதர்.. சிஸ்டர்..அங்கிள்..மற்றும் எங்கட ~ஸ்கூல்மேற்று|கள் மாலா தாலா பாலா.. ஊலா மற்றும் என்னை விரும்புவோருக்கும் ..மற்றும் நான் விரும்புவோருக்கும்... மற்றும் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும்.. இதோ அனைவருக்குமாக வருகிறது.. குத்து படத்த்pல் சிம்பு பாடிய ரீமிக்ஸ் பாடல.;.. அதற்கு முன் இன்னொரு நேயர் இணைகிறார்.. யாரென்று பார்ப்போம்.. ஹெலோ.. ? அலோவ் சேர். நான் பசறிச்சேன பரிது.. ஙா.. எங்கட அபிமான நேயர்.. அங்க மழையா.. ஒம் ஸேர்.. வெயில் இல்லை அப்படித்தானே..? ஓம் சேர்.....................

இப்படியே நாள் முழுவதும் இதே பாணியிலான பேச்சுக்கள்.. காட்டுக் கத்தல்கள்.. இதனை ஒரு மனிதன் ஒரு வார காலமாகத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடிக்காமலிருக்குமா என்ன..?

௦௦௦௦

No comments:

Post a Comment