ஜீவநதி
பெண்ணுணர்வுகளை நசித்துப்போட்டு தன்னை நிலை நிறுத்தும் முகமூடிகளின் முகத்திரை கிழிப்பதிலும் எனக்கெந்த மறுதலிப்புகளுமில்லை. மஷூறா சுஹுர்தீன்
ஆர்.எம்.நௌஷாத்
----------------
‘.......கருத்துச்சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறதுதான். எதையும் பத்தாம்பசலித்தனமாக அல்லது அர்த்தமற்ற மரபுவழிச்சிந்தனைகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு கொடி காட்டக்கூடாது.காலம் எவ்வளவோ மாறிவிட்டது.மதரீதியான கோட்பாடுகள் எதார்த்தங்கள் தவிர மற்றெல்லாமே மாறக்கூடியன.கண்மூடித்தனமாக நம்புகிற தலைமுறை இன்றில்லை.சாத்தியப்பாடுகளை மட்டுமே சிந்திக்கிற தலைமுறை இது. தத்தமது சுயநலங்களுக்காகவகுத்துக்கொண்ட அல்லது வரிந்து கொண்ட கொள்கைகள் இன்று சோரம் போய்விட்டன.அவற்றை இன்னும் ஆதாரமற்று தூக்கிப்பிடித்துக் கொண்டு கோசம் போடுவதில் பிரயோசனம் ஏதுமில்லை.
பெண்ணில்லாத வாழ்க்கைஒரு ஆணினால் வாழவே முடியாது. ஆணில்லாத வாழ்வை ஒரு
பெண்ணும் வாழ இயலாது.எப்படிக் கூவினாலும்கொக்கரித்தாலும் ஒன்று இன்னொன்றுக்குள்
அடக்கம் என்பதை மாற்றவியலாது. மறுக்கவியலாது. தேடித்தேடி குறைகளையும்
குற்றங்களையும் கண்டு பிடிப்பதில் நன்மையேதுமில்லை. இவ்வாறு எதார்த்தம்
புரியாதவர்களின் வாழ்வே இன்று நரகலோகமாகி ‘காதிக்கோடு’வரை கைகட்டி நிற்கிறது. விவாகரத்துக்கள் இன்று மிக மலிந்துவிட்டகாரணமும்
இவர்களது ஈகோதான். அர்த்தமில்லாத கோசங்களைப் போடுவதை விடுத்து ஆணோ பெண்ணோ
புரிந்துணர்வுடன் எதிர்ப்பாலாரை எதிர்கொள்வது சிறந்த பலனைத்தரும்......’’’
1982 களில், ‘நிறைமதி’ என்ற ஒரு கையெழுத்துச் சஞ்சிகையுடன் தன் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த மஷூரா, அக்கினி கவிதை இதழ், (1985), புன்னகை நினைவுமலர்..(1986), யௌவனம். (1990) , அலவாக்கரை. (1990—2000), புதையல். (1996), என் இனிய வாழை மரமே.. (2001), சுடர். (2001), நாற்று. (2006), ஒளியைத் தேடும் நிழல்கள். (2007), விதியை வென்றவன். (2008), நந்தவனம். (2010), மொட்டு. (2010), பேசும் பொற்சித்திரங்கள். (2011),பாடும் வானம்பாடிகள்.(2011) , உப்பட்டி. (2012) ,பூந்தாளி. (2012) , ஓட்டோகிராப். (2013) ,பெயல் (2014), பொகில். (2015) , முதலான பல்வேறு நூல்கள், சிறப்பு மலர்கள், சஞ்சிகைகளுக்கு ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் பங்களித்துள்ளார்...
தவிரவும், நிறைமதி கலை இலக்கியக் கழகத்தின் ஸ்தாபக தலைவராகவும், சம்மாந்துறை தமிழ் சங்கத்தின் செம நல செயலாளராகவும், படர்க்கைகள் இணைய அமைப்பில் உப தலைவராகவும் இருந்து தன் தமிழ்ப் பணியை திறம்பட
ஆற்றி வருகிறார்...
2002 இல் தென் கிழக்கு ஆய்வு மையம் “சிறந்த இளம் இலக்கியவாதி என்ற நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது..,,,2004 இல் தினச் சுடர் பத்திரிகை சிறந்த கவிஞருக்கான சான்றிதழ் அளித்தது... 2007 இல் ‘ஜனவபோத கேந்திரய’ அமைப்பு சிறந்த நாடகத் தயாரிப்புக்காக விருதளித்து.. 2008 இல் சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவு மகளிர் தின கெளரவம் அளித்தது..2009 இல் நிந்தவூர் ஆர்.கே.மீடியா இலக்கியப் பங்களிப்புக்காக தங்கப் பதக்கம் அளித்தது..
2009 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமசிறி கலாஜோதி பட்டமளித்தது.. 2009 இல் சம்மாந்துறை பிரதேச செயலக சாகித்திய விழாவில் இலக்கியப் பணிக்காக நினைவுச் சின்னமும் சான்றிதழும் அளித்தது.. 2011 இல் மலையாக கலை கலாசார சங்கம் ‘இரத்தினஜோதி’ எனும் பட்டமளித்தது.. 2014 இல் ஹிஸ்புல்லா பௌண்டேஷன் இலக்கியப் பணிக்காக பொற்கிழியும் விருதுமளித்துக் கௌரவித்தது... 2015 இல் ஒற்றுமைப்பாலம் அமைப்பும் மஷூராவின் தமிழ்ப் பணியைப் பாராட்டி சான்றிதழ் அளித்தது .. 2016 இல் சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டமும்,கல்முனை பாவலர் பண்ணையும் இணைந்து ‘மதுரக் கவிதாயினி ‘ என்னும் பட்டமளித்தன இன்னும் பல நிறுவனங்களும் இலக்கிய அமைப்புகளும் இவரைக் கௌரவித்துள்ளன...
முடிவாக
‘’.........கலாச்சார மீறல்களில்குளிர் காய்ந்துபெயருக்கும் புகழுக்கும்என்னால் எழுத முடியாது.. .பெண்மையின் வரைவிலக்கணத்தை மீறிஎழுதுதலில் எனக்கு எப்போதும் எனக்குஉடன்பாடு இல்லை.. .உண்மைகளை பட்டென உடைப்பதில்தயக்கமுமில்லை.பெண்ணுணர்வுகளைநசித்துப்போட்டு தன்னை நிலை நிறுத்தும் முகமூடிகளின்முகத்திரை கிழிப்பதிலும் எனக்கெந்த மறுதலிப்புகளுமில்லை.உள்ளதை உள்ளபடிஉரைப்பதிலும்பின் வாங்கேன்.எனினும்என் கலாச்சாரத்தைமீறலாலும் பெண்ணியல்பை புதைப்பதாலும் புகழ் வருமெனின் எனக்கது தேவையுமில்லை. என் படைப்புகளை வழிநடாத்த எனக்கெந்தச் சாரதியுமில்லை. நான் தனித்துவமானவள்.ஆனாலும் எதார்த்தவாதி......’’
என்று தன்னைப் பற்றிய விம்பத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் மஷூரா
சுஹுர்தீனின் யதார்த்தமான படைப்பிலக்கியப் பணி மேலும் தொடர நமது
வாழ்த்துக்கள்.....௦
No comments:
Post a Comment