கல்முனை ஸாஹிறாக் கல்லூரி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! அகில இலங்கையிலும் புகழ் பெற்ற கல்முனை
ஸாஹிறாக் கல்லூரி என்ற இக்கலாபீடத்தை அர்ப்பண சிந்தையுடனும் துணிவுடனும் வழிநடத்தி
வரும் கண்ணியமிக்க அதிபர் அவர்களே.. ! அதற்கு உறுதுணையாகவிருந்து செவ்வனே
செயலாற்றி வரும் பிரதி மற்றும் உப அதிபர்களே.. கட்டுக்கோப்பான நிர்வாகத்துறையில் .h.டுபட்டுக் கொண்டிருக்கும் பகுதித்தலைவர்களே...! தியாக மனப்பாண்மையுடன்
அறிவூட்டுகின்ற ஆசிரியப் பெருந்தகைகளே...! நாளைய மின்னியல் உலகை ஆளப்போகிற
மாணவமணிகளே.. உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் சாந்தியையும்
சமாதானத்தையும் அளிப்பானாக.. ஆமீன்…
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி தனது 60 வது வருடத்தை எட்டியிருக்கும்
இத்தருணத்தில் அதன் உருவாக்கம் பற்றி சில விடயங்களை நான் உங்களுக்குச் சொல்ல
வேண்டுமென அன்புடன் வேண்டப்பட்டிருக்கிறேன். காரணம் இக்கல்லூரியின் உருவாக்கத்தில்
அதன் ஸ்தாகருடன் இணைந்து முன்னின்றுழைத்த முக்கிய சில பிரமுகர்களில் நானும்
ஒருவன்என்பதை அடக்கத்துடன் தெரிவிப்பதுடன் அவ்வாறான பெரியோர்களில் அனைவரும்
நம்மையும் இவ்வுலகையும் விட்டுப் பிரிந்து சென்று விட்ட நிலையில் அவர்களது
வாக்குமூலங்கள் எதிலும் பதியப்பட்டிராத நிலையில் இன்று நான் மட்டுமே அல்லாஹ்வின்
உதவியால் உயிருடன் இருக்கிறேன் என்ற வகையில் கல்முனை ஸாஹிறாவின் உருவாக்கம் பற்றிய
பிறிதொரு வெட்டுமுகத் தோற்றத்தை உங்களுக்கு நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் நமது ஸாஹிறாக் கல்லூரியின் ஸ்தாபக தினமான நவம்பர் மாதம் 16ம் திகதியாகிய இன்றிலிருந்து 60 வருடத்திற்கு முந்திய அதாவது 1948ம் ஆண்டைய நவம்பர் 16ம் திகதியன்று இந்த வளவிற்குள் ஒரு ஒலைக் கொட்டிலில் துரnழைச நுபெடiளா ளஉhழழட என்ற பெயரில் தோற்றம் பெற்ற ஒரு அரும்பு.. இன்று ஆலவிருட்சமாய்
விழுதுவிட்டுப் பெருவளர்ச்சி கண்டுள்ள நிலையில் அதன் ஆரம்பம் பற்றிய ஒரு சுருக்க
அறிமுகத்தைச் செய்யலாமென்று எ;ண்ணுகின்றேன்.
இப்பகுதி முஸ்லிம்களின் கல்விக்கான ஊற்றுக்கண் எனப் புகழத்தக்க கல்முனை
ஸாஹிறாக் கல்லூரியின் ஸ்தாபகம் மற்றும் அதன் பூர்வீகம் பற்றி ஆராயப்படும் போது
அதன் ஸ்தாபகர் பற்றியும் குறிப்பிடப்படுவது இன்றியமையாத ஒன்றாகும்.
மர்ஹ_ம். வன்னிமை முதலியார் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களே
இக்கல்லூரியின் ஸ்தாபகர் ஆவார். அன்னார். கொட்டபோவே காரியப்பர் பரம்பரையைச்
சேர்ந்த அகமதுலெவ்வைக் காரியப்பரின் இரண்டாவது புத்திரரான டொக்டர் முகம்மது
இப்றாகிம் காரியப்பர் அவர்களுக்கும் மட்டக்களப்பு காரியப்பர் பரம்பரையைச் சேர்ந்த
தம்பிநயிந்தைக் காரியப்பரின் பேர்த்தியான லைலத்துல் கத்ரியா அவர்களுக்கும்
இரண்டாவது மகனாக 1899ம் ஆண்டு 4ம் மாதம் 29ம் திகதி பிறந்;தார்.
அவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை லீஸ் கல்லூரியிலும் உயர்கல்வியை கொழும்பு
உவெஸ்லிக் கல்லூரியிலும் கற்று இலண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் விசேட சித்திp எய்தி வைத்தியத்துறையின் தேர்வுப் பரிட்சைக்குத் தோற்றியிருந்த வேளை
மட்டக்களப்பு அரச அதிபராக இருநத ஆங்கிலேயர் திரு. ஊ.டீ. பிரைன் அவர்களால்
பாணமை-பொத்துவில் பற்றுக்கு வன்னிமை முதலியாராக நியமிக்கப்பட்டார். மேலும்
நிந்தவூர்-அக்கரைப்பற்று. சம்மாந்துறைப்பற்று.. வேவெகம்பற்று.. கரைவாகுப்பற்று
ஆகிய பகுதிகளிலும் வன்னிமை முதலியாராகக் கடமை புரிந்து சுமார் 25வருடகாலம் அரும் சேவைகள் ஆற்றினார். அவரது காலம் கல்முனையின் பொற்காலம் என
வர்ணிக்கப்படுவதிலிருந்தே அவரது விசாலமான சேவைகளை நாம் ஓரளவேனும் புரிந்து கொள்ள
முடிகிறது. .. இலங்கையின் தங்க மூளை படைத்த நால்வரில் கேற்முதலியார் காரியப்பரும்
ஒருவர் என புகழ்பெற்ற சட்டநிபுனர் பார் குமாரகுலசிங்கம் அவர்களால்
வியந்துரைக்கப்பட்ட கேற்முதலியார் காரியப்பர் அவர்களின் கல்விச் சிந்தனையின்
வெளிப்பாடுதான் அன்றைய துரnழைச நுபெடiளா ளஉhழழட என்ற இன்றைய கல்முனை ஸாஹிறா.!.
எழுத்தறிவற்று இருந்த இப்பகுதி பெரும்பாலான மக்கள் வாழ்ந்த அச்சூழலில் தனது
சேவைக் காலத்தில் அரச உதவியுடன் சுமார் 20 பாடசாலைகளை...பரவலாக ஆரம்பித்து
வைத்து அன்னார் ஊன்றிய கல்விப் புரட்சியின் வித்து பரந்து விரிந்து இன்று அவற்றில்
தேசிய பாடசாலை 2. மகாவித்தியாலயங்கள் 6.
பாடசாலைகள் 11. ஆசிரிய கலாசாலை 1. என்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளமை கண்கூடு. கையெழுத்துக் கூட
வைக்கத்தெரியாமமிருந்த இப்பகுதி முஸ்லிம்பெண்கள் மத்தியில் கல்வி
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் பெண்களுக்கான தனியான
பாடசாலைகளையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.. அதன் தொடர்ச்சியாக இப்பகுதி
முஸ்லிம்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துமுகமாகத் தனியே ஆங்கில மொழி மூலம் பயிலக்
கூடிய ஒரு பாடசாலையையும் உருவாக்கம் செய்யும் தீவிர முயற்சியில் இறங்கினார்.
இலவசக் கல்வியின் தந்தையான முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி ஊறுறு கன்னங்கர
அவர்கள் அரசாங்க சபையின் 50 தொகுதிகளுக்கும் 50 மத்திய ஆங்கில மொழிப் பாடசாலைகளையும் (உநவெசயட ளஉhழழட)) இப்பாடசாலைகளின் போசனைப் பாடசாலைகளாக மேலும் கனிஸ்ட ஆங்கிலப்
பாடசாலைகளையும் (துரnழைச நுபெடiளா ளஉhழழட) கிராமப்புறங்களிலும் அமைப்பதற்கான திட்டத்தைக் கொணர்ந்தார். மேற்தட்டு
மக்கள் மட்டுமன்றிக் கீழ்த்தட்டு மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டுமென்ற அவரது
எண்ணக்கருவின் பயனாக இது சாத்தியமாயிற்று. இதனைப்பயன்படுத்தி இச்சமயம்
கரைவாகப்பற்று வன்னிpமை முதலியாரகக் கடமை புரிந்த கேற்முதலியார் காரியப்பர் அவர்கள் கல்முனையிலும்
ஒரு துரnழைச நுபெடiளா ளஉhழழட அமைப்பதற்கான பெரு முயற்சியில் இறங்கினார். அச்சந்தர்ப்பத்தில் அரசாங்க
சபை பொதுத்தேர்தலுக்காக கலைக்கப்பட்டு விட்டது. இதனால் இம்முயற்சியில் முதல்
தடங்கல் எற்பட்ட போதிலும் ..
பின்னர் 1947ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற
உறுப்பினராகத் தெரிவு செய்;யப்பட்ட கேற்முதலியார் காரியப்பர் அவர்கள் முதல் வேலையாக இடையில் நின்று போன
துரnழைச நுபெடiளா ளஉhழழட ஐ அமைக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கினார். இச்சமயம் கல்வி
அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த மேஜர் நு.யு நுகேவெல அவர்களிடம் கல்முனைக்கும்
சம்மாந்துறைக்குமாக இரண்டு துரnழைச நுபெடiளா ளஉhழழட களை அமைத்துத் தரும்படியும் இதற்காக கல்முனைத் தொகுதிக்கு நேரில் விஜயம்
செய்து அங்குள்ள கல்விநிலைமைகளைப்; பார்வையிடுமாறும் வேண்டினார்.
இதன்படி 1948ல் கல்வி அமைச்சர் மேஜர் நு.யு நுகேவெல அவர்கள் கல்வியமைச்சின் உயரதிகாரிகள்..
கிழக்கு மாகாண கல்வி அதிகாரி.. திருவாளர். எஸ்.வி. சோமசேகரம் ஆகியோருடன்
முதற்தடவையாக கல்முனைத் தொகுதிக்கு விஜயம் செய்தார். சாய்ந்தமருது அல்ஹிலால்
வித்தியாலயத்திலும் சம்மாந்துறையிலும் கல்விஅமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் பெரு
வரவேற்பளிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது அமைச்சர் அவர்கள் காணி மற்றும்
தற்காலிகமான ஒரு கட்டிட இடவசதியை ஏற்படுத்தித் தந்தால்.. தான் மேற்படி துரnழைச நுபெடiளா ளஉhழழட ஐ அமைத்துத் தருவதாக உறுதியளித்தார். உடனேயே கேற்முதலியார் காரியப்பர்
அவர்கள் சாய்ந்தமருது கல்முனைக்குடி அகியவற்றுக்கு மத்தியில் இருந்த தனக்குச்
செந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பை முற்றிலும் இலவசமாக எழுதிக் கையளித்தார். எனினும் பலமாத
காலமாகியும் துரnழைச நுபெடiளா ளஉhழழட ஐ அமைக்கும்; பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இதனால். 1948ம் ஆண்டு 7ம் மாதம் 26ம் திகதியன்று நிகழ்ந்த ; வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது
கேற்முதலியார் அவர்கள் தனது அமைச்சு பற்றிய விவாதத்தை ஆரம்பித்து; வைத்து உரையாற்றும் முன்னர் தனது தொகுதியில் துரnழைச நுபெடiளா ளஉhழழட களை அமைக்கும் முகமாகக் கல்வியமைச்சர் அளித்த வாக்குறுதி
நிறைவேற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். இதன்பயனாக உடனடியாக
குறிப்பிட்ட காணியில் பொதுமக்களால் 60:20 அளவில் கிடுகுகளால் அடைக்கப்பட்ட
ஒலைக் கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது. இக் கொட்டகையிலேயே 1949.11.16ம் திகதி கொழும்பு வித்தியாபதி திரு. கே.எஸ். அருள்நந்தி கிழக்குமாகாணக் கல்வி
அதிகாரி திரு எஸ்.ஜே. குணசேகரம் வித்தியாதரிசி திரு.எஸ். விஸ்வலிங்கம்
கேற்முதலியார் காரியப்பர் ஆகியோரின் பிரசன்னத்தில்; துரnழைச நுபெடiளா ளஉhழழட ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் தமிழ்மொழிமூலம் 5ம் தரம் சித்தியடைந்திருந்த 4 மாணவர்களுடன் ஆங்கில மொழிப் பாடசாலையாக இயங்க
ஆரம்பித்தது. கல்முனைக் கல்விp வரலாற்றில் ஒரு பொற்காலம் உதமாகிற்று.
அன்றைய தினம் ஜனாப். எம்.ஐ. அப்துல் காதர் அவர்கள் பதில் அதிபராகக் கடமையேற்றார்.
இப்பாடசாலைஅமைவுறுவதில் முன்னின்று உழைத்த நமது நன்றிக்குரிய பெருமக்கள் பலரை
இப்போது இங்குள்ள மாணவர்களாகிய உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள்
இன்று மறைந்து விட்hர்கள். எனினும் அவர்களது அன்றைய சேவையால்தான் நீங்கள் இப்போது இங்கு வசதியுடன்
கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அந்த
பெரியோர்களின் புனித சேவைக்கு எல்லாம்வல்ல இறைவன் நறகூலி பாலிப்பானக.. ஆமீன்..!
மேலும் அவர்களின் நாமங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி
நம்மால் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதும் ஆகும்.
குறிப்பாக இக்கல்லூரி ஸ்தாபகர் கேற்முதலியார் காரியப்பருடன் அப்போதைய
கிராமச்சங்கத் தலைவராகவிருந்த மர்ஹ_ம். எம்.வை.. ஹமீது உடையார்..
அவர்களும் மற்றும் மர்ஹ_ம்களான எம்.ஏ. கபூர் மரைக்காயர் பீ.எம். மீராசாகிபு பயில்வான்....இராசாப்
போடியார் என்றழைக்கப்பட்ட எம்.ஐ.அகமதுலெவ்வை மற்றும் ஒ.எம். அலியார்.. ஐ.அலியார்..
எம்.எம் ஆதம்பாவா சேர்மன்;.
யூ.எம். இப்றாகிம்.லெவ்வை.. இப்றாலெவ்வை மரைக்கார்...
ஐ.எம்.ஏ. ஐயூப் அதிபர்.. நைனாமுஹம்மது எனும் ராசா ஓடாவியார்.. மேலும் பீ.எம்.
மக்பூல் ஆலிம்... முகம்மது காசிம் கணக்கப்பிள்ளை..... ஏ.எம். சரிப் விதானை...
முகம்மதுக்கனி வைத்தியர்.. கோ. அகமதுலெவ்வை மரைக்காயர்... எம்.எச்.எம். ஹனிபா
வட்டவிதானை ஆகியோர் இப்பாடசாலை அமைவதில் அதிக கரிசனையும் சிரத்தையும் கொண்டு
இயங்கிய பெருமக்கள் ஆவர். இவர்கள் அனைவருமே காலமாகி விட்டனர்.. எனினும்..
இவர்களுடன் இணைந்து செயற்பட்ட எம்ஸீஏ. ஹமீட் ஓய்வுபெற்ற அதிபர் ஆகிய நான் மட்டுமே
தற்போது சீவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன். மேற்படி
பெரியோரின் விபரங்களை மாணாக்கராகிய நீங்கள் உங்கள் பெற்றோர் அல்லது மூத்தேர்ரிடம்
விசாரித்து அறிந்து வைத்துக் கொள்ளுதல் விரும்பத்தக்குத.
நான்கு மாணவர்களுடன் இயங்க ஆரம்பித்த இந்த துரnழைச நுபெடiளா ளஉhழழட நிரந்தர அதிபர் ஒருவர் இன்றி பதிமூன்றரை மாதங்கள் இயங்கியது. ஜனாப்.
எம்.ஐ. அப்துல் காதர் அதிபர் அல்லது ஜனாப். எம்.எம். இப்றாகிம் அதிபர் அல்லது
திரு. பொன்னப்பா அதிபர் ஆகியோரால் காலத்துக்குக் காலம் அதிபருக்குரிய கடமைகள்
ஆற்றப்பட்டு வந்தன. இதனை கேற்முதலியார் காரியப்பரின் கவனத்திற்குக் கொணர்ந்த போது.
அவரது துரிதமான விசேட முயற்சியினால் திஹாரியவிலிருந்து ஜனாப். எம்.ஏ. மீராலெவ்வை
அதிபர் அவர்கள் அங்கிருந்து மாற்றம் பெற்று வந்து 1951.01.01ம் திகதி அதிபராகப்
பொறுப்பேற்றார். இதனால் பாடசாலை ஸ்திரம் பெற்றது. மாணவர் தொகையும் ஆசிரியர்
தொகையும்;; படிப்படியாக அதிகரிதுக் கொண்டிருந்த நிலையில் இப்பாடசாலை 1953ம் ஆன்டுக்குப் பின்னர் அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கமைவாக ஆங்கில
மொழிப்பாடசாலையிலிருந்து தமிழ் மொழிமூலப் பாடசாலையாக மாறியது. இதனால் பாடசாலையின்
மாவ ஆசிரியர் தொகை மேலும் அதிகரித்தது. பௌதீக வளங்களும் கூடின..
1949ல் ஆங்கில மொழிப் பாடசாலையாக ஆரம்பித்து பின்னர் சீனியர் ஸ்கூல் ஆக மாற்றம்
பெற்று அதன் பின்னர் மகாவித்தியாலயமாகத் தரமுயர்ந்து…இன்று ஒரு தேசியப்பாடசாலையாக… வளர்ச்சியுற்றிருக்கிறது.. இப்போது 2272 மானவர்களுடனும்.. 128ஆசிரியர்களுடனும்.. 28 கல்விசாரா ஊழியர்களுடனும் பிரகாசித்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை
தரக் கூடிய விடயமாகும்.. தற்போது 2009ல் தனது அறுபதாவது அகவையை எய்தியிருக்;கும் கல்முனை ஸாஹிறா இன்று அறிpவார்ந்த சமுதாயத்திற்கு எத்தனையோ
தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி அளித்திருக்கிறது. கலாநிதிகள்.. பல்கலைக்கழகப்
பீடாதிபதிகள்.. நிபுணத்துவ வைத்தியர்கள்.. மின்பொறியியலாளர்கள்.. உயர்சிவில்
நிர்வாக உத்தியோகத்தர்கள்.. பட்டதா ரிகள்...அரச திணைக்கள அதிகாரிகள்.. விளையாட்டு
வீரர்கள்.. கணிணித்துறை விற்பன்னர்கள்... இந்த கல்முனை ஸாஹிறாவிலிருந்து கற்று
உலகமெலாம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.. நாளைய நவீன உலகத்தின்
தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் நீங்களும் ஏன் உங்கள்
பிள்ளைகளும்.. அவர்களின் பிள்ளைகளும் பரம்பரை பரம்பரையாகப் பலன் பெற வைக்கும் உயர்
கல்விச் செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த அறுபது வயது ஸாஹிறா என்ற
கல்வித் தாயை இந்த உலகில் நீங்கள் எங்கிருந்த போதிலும் மறக்க மாட்டீர்கள் என்பது
திண்ணம்.
கேற்முதலியார் காரியப்பருக்குப் பின்னர் இப்பகுதிப் பாராளுமன்ற
உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும்
இப்பாடசாலைக்கு தத்தம் பங்களிப்புகளை உச்சக் கட்ட அளவில் வழங்கிப் பேருதவி
புரிந்துள்ளனர் என்பதையும் நாம் ஞாபகத்திற் கொள்ளல் கட்டாயமாகும்.
தவிரவும் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு காலத்திற்குக் காலம் தம்மை அர்ப்பணித்து
அரும்பணியாற்றிய அதிபர் பெருமக்கள்.. ஆசிரியப்பெருந்தகைகள் ஆகியோரின்
அர்ப்பணிப்பான பணிகளும் செய்த தியாகங்களும் எப்போதும் மரியாதையுடன் நினைவு
கூரத்தக்கன.
கல்விக்குஉயிர் தந்தோர் என்றும் மரணிப்பதில்லை.-- என்ற நபிமொழிக்கமைவாக ~~மன்ஜத்த வஜத்த| தெண்டித்தவன் பெற்றுக் கொள்வான் என்ற தாரக மந்திரத்துடன் கல்முனை ஸாஹிறா தனது
வைரவிழாவை நோக்கி விரைகின்ற இந்த அபூர்வ நிகழ்வில் எனக்கு உரையாற்றக்
கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு உண்மையில் இந்தப் பொன்னான வாய்ப்பை
எனக்கு வழங்கிய கல்லூரி அதிபர் மற்றும் முகாமைத்துவக் குழுவினருக்கும் எனது
மனமார்நத நனறிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ்வளவு நேரமாக இதனைப் பொறுமையாக
இருந்து செவிமடுத்தமைக்காக மாணவர்களாகிய உங்களக்கும் எனது மனப்ப10ர்வ்மான நன்றிகளையும தெரிவித்துக் கொள்கிறேன்.. உஙகள் அனைவருக்கும் சுபிட்சமான
எதிர்காலம் பிற்க்கட்டும் என்று எல்லர்ம் வ்ல்ல இறைவனைப பிரார்த்தித்து விடை
பெறுகின்றேன்... வாழ்க ஸாஹிறா.. ! நன்றி..!! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
வபராகாத்துஹ_..
0அல்ஹாஜ். ஏம்.ஸீ.ஏ. ஹமீட். (ஓய்வு பெற்ற அதிபர்.)
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
No comments:
Post a Comment