Monday, March 14, 2022

பிரகாசக்கவி/ அலியார் முசம்மில்

 பிரகாசக்கவியின் --முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை

 சமீபத்தில் பார்த்த கவிதைத் தொகுதிகளில் மனதை முத்தங்களால் உயிர்ப்பித்தது இந்த கவிதைத் தொகுதி...கொஞ்சம் காதல்-கொஞ்சம் சீரியஸ்- கொஞ்சம் சமூக அவலம் என்று ஒரு கலவையான முத்தங்கள் தந்திருக்கிறது இந்நூல்...பிரகாசக் கவியின் பேனாவுக்கு குறும்பு அதிகம்..குத்தலும் அதிகம்..பல கவிதைகளில் நம்மை அகண்ட வெளிக்கு அழைத்துச் செல்கிறார்..சில நேரங்களில் ஒரு எரிகல்லாய் சீறி விழுகிறார்..பிரகாசக்கவியின் வருகை சில ‘’உலகக் கவிஞர்கள்’’ என்று தம்மை தாமே நினைத்துக் கொண்டிருப்போரை அச்சம் கொள்ளச் செய்யும் அளவுக்கு காத்திரமானது..

 ‘’....நான் உந்தப்பட்ட பல கவிதைகளை எழுதியுள்ளவர்களில் மிக முக்கியமானவர் பிரகாசக்கவி .....’’ என்று தத்துவக் கவிஞன் பரீட்சன் குறிப்பிட்டுள்ளார் எனில் பிரகாசக் கவியின் ஆற்றலுக்கு வேறு சான்று வேண்டியதில்லை...கவிதை உலகு இனி பிரகாசக்கவியின் கவிதைகளால் பிரகாசிக்கும்...மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 கிண்ணியா பேனா பப்ளிகேஷன்ஸ் தயாரிப்பு அழகும் நேர்த்தியும் தளக் கோலமும் மெச்சத்தக்கது...

 இனிப்பாய் போன கடல்..

அவள் எச்சில் செய்து போன

 ஒரு கோப்பை தேநீரில்

ஈ ஒன்று முங்கிக் குடித்ததில்

 சிந்திச் சிதறிய சின்னத் துளிகள்

 கரையைத் தாண்டிகடலில் கலந்தன

 என்னவோர் ஆச்சரியம்...

 கடலெல்லாம் இனிப்பாகி

 எறும்புகள் மொய்க்கின்றன ஒருபுறம்

 அங்கே

 சீனி வியாதி வந்த மீன்களெல்லாம்

 வைத்தியம் தேடி அலைகின்றன மறுபுறம்......

 

 இசுவா அம்மானை

 சுமார் 179 வருடங்களுக்கு முன் காத்தான்குடி அகமதுக் குட்டிப் புலவர் அவர்கள் இசுவா என்னும் பெண்ணை நாயகியாகக் கொண்டு இயற்றிய அம்மானை வடிவிலான சரிதம் இது, இதன் ஏட்டுப் பிரதி அக்காலத்தில் கிழக்கில் திண்ணைப் பள்ளி நடத்தி வந்தவரும் இஸ்லாத்தை தழுவியவருமான விசுவநாத முதலியார் வாத்தியார் எனப்படும் இசுமாலெப்பை அவர்களிடமிருந்து சாய்ந்தமருது சும்மா பள்ளி இலிகிதராக கடமை செய்த முகம்மது காசிம் அவர்களுக்கு கிடைத்தது ..

 இவரிடமிருந்து 1979 களில் சாய்ந்தமருது மர்ஹூம் அலியார் முசம்மில் (மகாத்தயா) அவர்களுக்கு கிடைத்தது... முசம்மில் (மகாத்தயா) அவர்கள் இந்த ஏட்டுச்சுவடியை மிகுந்த சிரமத்துடன் தட்டச்சு செய்தார்... இதனை கலாநிதி நுஹ்மான் அவர்கள் ஒப்பு நோக்கி சீர் செய்தார்...

 கீழக்கரை முஹிதீன் அப்துல் காதிர் முகம்மது ஹசன்தம்பி அவர்கள் இதனை அச்சிட, பேராசிரியர் அல்ஹாஜ் ம.மு. உவைஸ் அவர்களின் முயற்சியால் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் வெளியிடப்பட்டது ....

 காத்தான்குடியின் தமிழ் இலக்கிய செயற்பாட்டை 179 வருடங்களுக்கு முன் நகர்த்தியுள்ளது இந்நூல்....

 

No comments:

Post a Comment