அவன் பையில் ஒழுகும் நதி---ஜமீல்
ஜமீலின் கவிதைகளில் நமக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு இருக்கும்... குழந்தைகளின்
உலகத்தை ஸ்பஷ்டமாக காட்டுவதில் ஜமீலை அடிக்க ஆளே இல்லை.,, இதற்கு உட்கருவாக அவரது மகள் ஹயா குட்டி இருக்கிறாள்....
‘’’....ஜமீலின் கவிதைகளின் பிரதான மையம் சிறுவர் வெளியாக இருந்தாலும் அதைத்
தாண்டியும் அவரது கவனம் நீட்சி பெறுகிறது..விளிம்பு நோக்கி தள்ளப்பட்ட
பெண்கள்..சாதாரண மனிதர்களின் வாழ்வின் கவனிக்கப்படாத பக்கங்கள்...என ஜமீலின் கவிதை
மனம் ஊடறுத்துச் செல்கிறது.....’’ என்று நண்பர் ஜிப்ரி ஹாஸன் கூறுவது
முற்றிலும் உண்மை...
ஜமீல் தந்த அவரது மேற்படி அவன் பையில் ஒழுகும் நதியில் மூழ்கிய போது அவரது
குழந்தை மனமும் நுட்பமான செதுக்கல்களும் நம்மை அந்த நூலை விட்டும் கரையேற
முடியாமற் செய்து விட்டன.... அந்த நதியிலிருந்து ஒரு சின்ன துளி இது.........
சிறுமியின் குட்டி போட்ட பத்து ரூபாய் நோட்டு....
மயிலிறகை புத்தகம் அடைகாத்து
குட்டி ஈன்ற அதிசயத்தை
கதை சொல்ல அவாவிய மகளிடம் வியந்து போனேன்
தனது பத்து ரூபாய் நோட்டைபுத்தக இடுக்கினுள் வைத்து விட்டு
அது குட்டி போடும் சந்தோஷத்தில் உறங்குகிறாள் மகள்
குழந்தையின் முதல் கனவுஉடைந்து சிதறாத படி
பத்து ரூபாய் புது நோட்டை
புத்தகத்தினுள் வைத்து விடுகிறேன்....
அதிகாலை எழுந்த கணத்திடை
புத்தகத்தை புரட்டிப் பார்த்தாள்
தனது பத்து ரூபா நோட்டு
குட்டி போட்ட மகிழ்ச்சியின் உச்சத்தில்
சிறகு கட்டிப் பறந்து திரிந்தாள்
அதே போன்று பத்து ரூபா நோட்டை
தனது புத்தக இடுக்கினுள் மீளவும் வைத்து விட்டு
அதிகாலை எழுந்து பார்த்தாள்
அது குட்டி போடாமலிருந்தது
உடன் அழுது புலம்பியபடி
என்னிடம் ஓடி வந்து முறையிட்டாள்
அது மாதத்துக்கு ஒரு முறைதான்
குட்டி போடுமென்று சமாளித்தேன்
இப்போது
நாட்களை எண்ணுகிறாள் மகள்.....
ஞானம் பாலச்சந்திரனின ‘’பொய்மையும் வாய்மையிடத்து...’’’
வட்டச் சக்கர சுட்டும் செய்தி
துட்டச் சத்ரு ரகளையில் எய்தி
திட்டம் தீர் வருடம் காண்
துட்டம்தீர் திரு கச்சாமி
மேலோட்டமாகப் பார்த்தால் அசட்டுக் கவிதையாக தெரிகிற இதன் உள்ளே பொதிந்துள்ள
மர்மம் மெய் சிலிர்க்க வைக்கின்றது ‘’புகழ்பெற்ற’’ நாலாம் மாடிக்கு கொண்டு செல்கிறது.. சிங்கள மேல்மட்டத்தை சிந்திக்க
வைக்கின்றது....புலனாய்வுத் துறையை அலைக்கழிக்க வைக்கின்றது ...மர்மத்தின் மேல்
மர்மமாக முடிச்சுப் போடுகிறது ..இலங்கையின் ரகசியத்தை மூடி வைத்திருக்கிறது...
. பிரேளிகை வகைக் கவிதையான இதன் உட்பொருள் இலங்கை புலனாய்வு அதிகாரி ரோஹான் – சி ஐ டி பியசேன-பேராசிரியர் சிவராமன்- உதவியாளர் கஜந்தன்- மாணவி சுருதி
ஆகியோரை ஒரு நேர்கோட்டில் இணைத்து நேபாளம் காத்மண்டு தொடக்கம் இலங்கை கண்டி வரை
துரத்துகிறது...
நாவல் தொடங்கி முடியும் வரை விமானம்-புகையிரதம்-கார் என்று விரைகிறது...ஒரு ஆங்கில
விறுவிறு திரைப்படம் போலவும்- சுஜாதாவின் அறிவியல் மர்ம புனைவு நாவல் போலவும் மெகா
சுவாரஷ்யங்களை தன்னுள் பொத்திக் கொண்டு விரைகிறது...ஞானம் பாலச்சந்திரனின் எழுத்து
நடை அவ்வளவு விரைவாக நாவலை நகர்த்திக் கொண்டு செல்கிறது. அதிலும் ஒரு புதுமையாக
இந்நூலாசிரியரின் ‘’மணிவாசக அணியமுதம்’’ நூலில் வரும் சிவராமனே இதில் பேராசிரியராக அவதாரமெடுத்து கதையை
நகர்த்துகிறது.....
இறுதியில் இந்த பிரேளிகைக் கவிதை அவிழ்க்கும் முடிச்சு மகா ரகசியமானது,,,எழுதிய புலவனை 1156ஆம் ஆண்டில் மரண தண்டனைக்குள்ளாக்கி விடுகின்றது....இலங்கையை ஒருகுடையின் கீழ்
ஆள வைக்கின்றது...பராக்கிரமபாகுவுக்கு ஆட்சி தருகிறது...
இலங்கையில் முத்துக்குமார கவிராயர்-சேனாதிராய முதலியார்-க.மயில்வாகனப்
புலவர்-இ.நமசிவாயம்பிள்ளை-சுந்த முருகேசனார் போன்ற ஒரு சில வித்துவான்களாலேயே இந்த
வகை பிறேளிக் கவிதைகளை யாக்க முடியும்.. எனவும் மேலும் சில குறிப்புகளும்
தொல்பொருள் ஆய்வுகளும் நாவலுக்குள் ஊடுபாவு குறிப்புகளாக காணக்
கிடைக்கின்றது....இப்படியும் ஒரு புதினம் எழுதலாம் என்று நிருபித்திருக்கும்
நாவலாசிரியரை எவ்விதம் பாராட்டுவது...?
பொய்மையும் வாய்மையிடத்து.....(நாவல்) ஞானம் பாலச்சந்திரன்—ஞானம் வெளியீடு-
No comments:
Post a Comment