ஹுனுப்பிட்டி கமர்ஜான் பீபியின் ‘’நான் மூச்சயர்ந்தபோது’’
1980களில் ஆரம்பித்த ஹுனுப்பிட்டி கமர்ஜான் பீபியின் கவிதை விதைப்புகள் 2017இல் ‘’நான் மூச்சயர்ந்தபோது’’
என்னும் அறுவடையாகி உள்ளது... தனி மனித நடத்தைகள்
...மார்க்க நெறிமுறைக0ள்...பெண்ணியல்புகள் ஆகிய பண்புகளை அவற்றின் வித்தியாசமான கூறுகளை தன
கவிதைகளில் சிறைப்படுத்தியிருக்கும் கமர்ஜானின் கவிதைகள் சிக்கலற்ற சொற்களை
சிக்கனமாகக் கொண்டுள்ளன...கவிதைக்குரிய எளிமைப் பண்பு அவரது கவிதையின்பால் நம்மை
இலகுவாக ஈர்த்து நிற்கிறது,,.ஒரு உளவளத் துணையாளராக இருப்பதாலோ என்னவோ தன் எண்ணப் பிரவாகங்களை மிக
இலகுவாகவும் அழகாகவும் சொல்லிவிடுகிறார்...///என் மனம் விரும்பியதையும், உணர்வு கொப்பளித்ததையும் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்ததையும் எனது கவிதையில்
சொல்ல வருகிறேன்... அதற்கு எந்த வரையறைகளும் தடைச்சுவர் எழுப்பிவிடக் கூடாது
என்பதில் முழுக் கவனக் குவிப்பையும் செலுத்தி இருக்கிறேன்....//// இதுதான்
கமர்ஜானின் கவிதை அறிக்கை...அது போலவே அவரது கவிதைகள் மரபு/மீறல் போன்ற எந்த சட்டகங்களுக்கும்
அகப்படாது தனி ஒரு வழியில் உடைப்பெடுத்துப் பாய்ந்துள்ளன...
நான் மூச்சயர்ந்தபோது ---என்ற கவிதையின் சில வரிகள்......
உங்கள் இனத்தையே நீங்கள்
ஈவிரக்கமின்றி குத்தலாம்-வெட்டலாம்
துப்பாக்கியால் கூட சுடலாம்
உயிருடன் எரிக்கலாம்
பாலகர்களைக் கூட
பாலியல் வல்லுறவுக்குப்
பயன்படுத்தலாம்
கொலையும் கொள்ளையும் கூட
காட்டுமிராண்டித்தனத்தால்
செய்து முடிக்கலாம்
இவைகள் அரக்கத் தனமில்லையா...?
கடலின் கேள்விஅலையோடு சேர்ந்து கேட்டது......
நவாஸ் சௌபியின் அழகான அட்டைப்படம் மற்றும் தளக்கோலத்துடன் வெளிவந்துள்ளது இத்
தொகுதி... ஹுனுப்பிட்டி கமர்ஜானுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்...
மருதமுனை விஜிலியின் மழைப் பொழுதுகள்...
எனது டிசம்பரின் மழை நாட்கள் மருதமுனை விஜிலியின் ‘’உன்னோடு வந்த மழை’’ கவிதை நூலோடு கழிந்தது...1990 கள் விஜிலியின் ஆரம்பக் கவிதை நாட்கள்..இந்த
2017 அவரது அறுவடைக்காலம்..
விஜிலியின் கவிதைகள் விபரிக்க முடியாத ஒரு உள்ளுணர்வை நமக்குள் இட்டு
நிரப்புகின்றன.. போர்முகம்- மானுட வாழ்வின் அபத்தங்கள்...தனி மனித
சுபாவங்கள்...என்று ஒரு கலவையான கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு வகை மனக் கோட்டுச்
சித்திரங்கள்...அவரது பேனா வரைந்த விசித்திரங்கள்... 1990 களின் காட்டாறாய் பாய்ந்த கவிஞர்கள் வகுத்த பாதையிலிருந்து வேறான ஒரு புதுப்
பாதையை போட்டு ஒரு குளிர்மையான அருவியாய் ஓடுகின்ற விஜிலிக்குள் ஒரு எரிமலைக்
குழம்பும் தீஆறாக கூடவே ஓடி வருகின்றது...
‘’உன் சின்னி விரல்தான்//எமக்குள் பெரும் ஏணி...// என்று தாய்மையை பாடும்
போதும்...’’நீர் உயர்ந்தால் பதவி//நீர் உயர்ந்தால் சமுத்திரம்// என்று உள் மனிதனுக்கு
சொல்லும் போதும்...’’ஒரு கவளம் சோற்றுப் பருக்கைகளுக்காய் //தோற்றுப் போகிறது உலகம் ...என்று
சம்மட்டியால் அடிக்கும் போதும் விஜிலி என்ற கவிஞனின் சுய தரிசனம் வியக்க வைக்கிறது
...
நுட்பம் குழுமம் இவ்வருடம் நடத்திய கவிதை நூல்களுக்கான போட்டியில் முதலிடம்
பெற்றுள்ளது இந்நூல் என்பது லேட்டஸ்ட் தகவல்...
ஒரு நல்ல கதை சொல்லியுமாக இருக்கும் விஜிலியின் சிறுகதை நூலையும் விரைவில்
எதிர்பார்க்கிறோம்...(விஜிலி- 121-மரைக்கார் வீதி- மருதமுனை- 0779797210)
No comments:
Post a Comment