2020.01.08என் நினைவில் நிந்தவூர் --- இக்பால் ஹஸன்
கிழக்கின் நைல் நதி என வர்ணிக்கப்படும் நிந்தவூரின் வரலாறு ...
புவியியல்..நிர்வாகம்..பொருளாதாரம்..கல்வி வளர்ச்சி..அரசியல்...சமுகவியல்..கலாசாரம்..
போன்றவற்றை தன் நினைவுகளிலிருந்து மீட்டி அச்சுப் பிரதிக்கு கொணர்ந்துள்ள அரிய
பொக்கிஷம் இது.
இக்பால் ஹசன் அவர்கள் ஓர் ஓய்வுபெற்ற நில அளவையாளர்..நிந்தவூரின் மீராலெவ்வைப்
போடி முகம்மது ஹசன் என்னும் பிரபல்யமிக்க ஒரு குடும்பத்தின் வாரிசு.
அக்காலத்திலேயே ஆங்கிலமொழிக் கல்வி பெற்றவர். எதிலும் நுண்ணாவுமிக்க இயல்பினர்..
‘’’... இந்த முயற்சி மிகவும் பெறுமதியானது..இது ஒரு காலப்பெட்டகம்..ஒரு அறிவியல் சார்
நூதனசாலை...ஒரு தேடல் மிகுந்த மனிதனால் தொகுக்கப்பட்ட நூலகம்..’’ என்கிறார் தெ.கி.ப.க.சிரேஷ்ட விரிவுரையாளர் (தகவல் தொழில்நுட்பம்) ஜனாப்
பிர்தௌஸ் ஹசன் அஹ்மத் ஷிப்லி அவர்கள்...
இந்த காகித நைல் நதிக்குள் மூழ்குவேன் இனி..
என் நினைவில் நிந்தவூர் … Rs.850/-…..(Iqbaal Hassan….0714595522)
மரப்பாச்சி கனவுகளில் வாழும் ஒரு ‘மியாவ்’
‘மரப்பாச்சியின் கனவுகள்’,
என்ற கவிதை நூலை தந்துள்ள யாழினிஸ்ரீ என்னை அதிகம் பாதித்த
ஒரு முகநூல் நன்பியாவார்...
ஒரு சக்கரநாற்காலியில் அமர்ந்து பிரபஞ்சத்தை ஆராய்ந்த ஸ்ரிபன் ஹௌக்கின் போலவே
தமிழக மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் யாழினிஸ்ரீயும் தன் உடலியல் இயலாமை காரணமாக
சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு கவிதைப் பிரபஞ்சத்தில் இலயிக்கிறார்..
அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘மரப்பாச்சியின் கனவுகள்’, என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது... 13.10.19இல் நிகழ்ந்த வெளியீட்டு விழாவில் பிரபல எழுத்தாளர்களான குட்டி ரேவதி.. நிஷா.., கவிஞர் யாழி,,,இரா.பூபாலன்.. ஜீவா.. கவிஞர் தனசக்தி பொன்னுலகம் குணா ஆகியோரும் கலந்து தம் கருத்துரைகளை சொல்லியிருந்தனர் என அறிய முடிகிறது...
குட்டி ரேவதி தன் சுவரில் பின்வருமாறு எழுதியுள்ளார் //........... கவிஞர் யாழினிஸ்ரீக்கு கழுத்துக்குக் கீழே உடல் கல்லாகி உறைந்து போனது போல் இயக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. வயது முப்பத்தியொன்று. முடக்குவாதத்தைக் கையாளும் மருத்துவ அசிரத்தையும் போதாமையும் நிகழ்ந்து நம்மில் பலபேருக்கு இந்த நிலை ஏற்பட்டதைப் போலத்தான் யாழினிஸ்ரீக்கும். மனிதர்களில் கழிவிரக்கம் நிறைந்தவர்களை அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். யாழினிஸ்ரீயிடம் அப்படியெல்லாம் ஏதுமில்லை. எல்லோர் மீதும் அன்பைப் பொழிந்து கொண்டே இருக்கிறார், மகிழ்வைக் கொட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் அருகில் நீங்களும் அப்படியான ஒருவராய் மாறிவிடுவீர்கள். ஆளுமை நிறைந்த பெண்ணாக இருக்கிறார்........\\
எத்துனை வேதனை-சோதனைகளை யாழினிஸ்ரீ எதிர்கொண்ட போதிலும் அவரது முகநூல் பதிவுகளில் கொப்பளிக்கும் குறும்புகளும் அதிரடிப் பின்னூட்டங்களும் நம்மை அவர்பால் மிகுந்த ஈடுபாடு கொள்ளச்செய்யும் தன்மையின....
..என்ற முகநூல் சுவரில் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்...இந்தப் பூனைக்
குட்டியை...
No comments:
Post a Comment