இது புத்தன் காலம் –ஏ .எம். சாஜித் அஹமத்
கி.மு. 483 அல்லது 400ல் நெஞ்சில் துப்பாக்கியால் குறி வைத்துச் சுடப்பட்டு போதி மரத்தின் கீழ்
இறந்து போன நமது சாஜித் அஹமட்டின் ‘’இது புத்தன் காலம்’’ நவீனம் தரும் மஹா வாக்கியங்களில் நானும் சுடப்பட்டு விட்டேன்...
அப்துல் மஜீத் சாஜித் அஹமத் ஆகிய இவர் புத்தனுக்கு புகழ் சேரட்டும் என்ற
விவாதத்தின் உரையை நம்முன் நிகழ்த்துகிறார்... மாயக் கல்லி மலை மீது மாயமாக வந்து
உட்கார்ந்து விட்ட புத்தனின் ‘’கட்டமைக்கப்பட்ட’’சரித்திரங்கள்’’ சிங்கமேரிகளையும் தாமிரங்கர்களையும் போர்ப்பாய வைக்கிறது... இடையில் அகப்பட்ட
முசப்பரிகள் தம் இருப்பை தேடி இரத்தம் சிந்துகின்றனர். மங்கோத தேவன்
தாமிரங்கர்கலைக் கொன்று முடித்து வைக்கும் போர் தேசத்தில் பூக்களை சொரியவில்லை....
ரோனால் மொசங்கே செய்யும் சூழ்ச்சியில் வீழ்ந்தான் மங்கோத தேவன்...
யசோதரையின் மீது நெய்யப்படும் பெண்ணியம் வரலாற்றாசிரியர் மாஹின் முஸ்தபாவின்
எழுத்துக்களில் பரிசுத்த உபத்திரமாக பின்னப்படுகிறது..ஒளியினைக் கைப்பற்றத்
துடிக்கும் யசோதரையின் வேட்கை மெட்ரிகலில் சீட்டுக்கட்டின் புதிரான ஒரு
பின்னத்தில் வந்து முடிகிறது... தப்பி ஓட முடியாத புத்தன் நிசப்தமான கனவுகளில்
உத்ஜிவாசம் புரிகிறான்... எப்படியும் நாளை மழை வரும் என்கிறான்...ஆனால் மழை போதி
மரங்களை வளர்க்காது என்று புலம்பும் சீடர்களை எண்ணி மனம் வெதும்பிய புத்தன் ‘’சமுகத்தின் தேவைகளை போதி மரங்கள் நிறை வேற்றும் என புலம்புகின்றான்... ஒன்றும்
புரியாமல் நிப்தேன் ஞானம் அடைகிறான்...
ஒரு கூதிர் இரவில் எல்லாப் பக்கங்களிலும் சருகுகளால் குடிசை அமைத்த புத்தனோடு
நாவல் முழுவதும் ஆர், எம். நௌஸாத் என்ற நானும் குடியிருந்து ‘’புதினம் வரைதல்’’ என்ற மகா ஞானம் அடைந்தேன்.... பின் புத்தனோடு நானும் மாயக்கல்லி மலைக்கு வந்த
போதுதான் இந்த நவீனத்தின் மீது உரையாற்றிய அப்துல் மஜீத் சாஜித் அஹ்மத்
சுடப்பட்டுக் கிடந்ததை கண்டேன்..
‘’இது புத்தன் காலம்—நாவல்—ஏ எம். சாஜித் அஹமட்--- பெருவெளி வெளியீடு..விலை—300/---- 0771824300-- 78-2 உடையார் வீதி- அக்கரைப்பற்று ;;;
எ எஸ். உபைத்துல்லா வின் ‘’நிழலைத் தேடி’’
எ எஸ். உபைத்துல்லா வின் ‘’நிழலைத் தேடி’’ தந்த வாசிப்பனுபவம் அலாதியானது... உபைத்துல்லா சிக்கல்களற்ற எளிமையான
பின்னங்களுடன் கதைகள் சொல்வதில் வல்லவர். உபைத்துல்லாவின் கதைகளின்
இயல்புணர்ச்சிகள் படிப்போர் மனங்களில் இலகுவாக தொற்றிக் கொள்கின்றன..தான் பிறந்த
ஊரின் சுற்றுப் புறங்களில் நம்மையும் இணைத்துக்கொண்டு அங்கு வாழ் மனிதர்களிடையே
புழங்கி வருவதில் வெற்றி பெற்றுள்ளார் ..கருமலை-மொட்டைமலை-வெள்ளைமணல்-உப்பாறு-தோணா
என்று இந்தக் கதைசொல்லி சுற்றாத இடமில்லை...ஒவ்வொரு இடத்திலும் அவர் சந்திக்கும்
மனிதர்கள் அனைவரும் பாத்திரங்களாகி நம் மனதில் சித்திரங்களாகி விடுகின்றனர்..
‘’...எழுத்தாளர் உபைத்துல்லா சிறுகதைகளில் சமுக யதார்த்த இயங்கியலோடு தொடர்புபட்ட
சமூகச் செய்தி அந்தச் செய்தியை சூழவுள்ள கூறுகளில் இயற்பன்புகளும் மிக நுணுக்கமாகவே
விபரிக்கப்பட்டுள்ளன.. இதற்கு மேலால் இவரது கதைகளில் வருகின்ற சம்பவ விபரிப்புகள்
இடையிடையே ஒரு நாவலை படிக்கின்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.. அத்துடன் இவரிடம்
அமைந்துள்ள அனுபவ மொழிவான்மை பாராட்டுக்குரியதாகின்றது ....’’ என்று கே.ஆர். டேவிட் கூறுவதை மறுபேச்சின்றி ஒத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே ‘’ஜலசமாதி’’ என்ற ஒரு சிறுகதை தொகுப்பை தந்திருக்கும் உபைத்துல்லா ஓர் அற்புதமான கதை
சொல்லி..ஆகையால் வ.அ.இராசரத்தினம் ஐயாவுக்குப் பின் மூதுரை களமாகக் கொண்ட ஒரு
நாவலை இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிடும் நூல்களுக்கென்றொரு
அலட்சியமான ‘’அசட்டுத்தன்மை’’ இருக்கும்..ஆனால் இம்முறை அழகான வடிவமைப்பில் அக்கறையுடன் வெளியிட்டிருப்பதை
பாராட்டலாம்....
நிழலைத் தேடி---சிறுகதை தொகுதி-------ஏ எஸ். உபைத்துல்லா---672 நொக்ஸ் வீதி---மூதூர்—0778051888
No comments:
Post a Comment