Monday, March 14, 2022

ஹாதிபுல் ஹ{தா: ஜனாப் எம்.எம்.எம். நூறுல்ஹக்

 

செங்கதிர்... இம்மாத அதிதி

~ஹாதிபுல் ஹ{தா: ஜனாப் எம்.எம்.எம். நூறுல்ஹக்

தீரன். ஆர்.எம். நௌஸாத்

 

 செங்கதிர் இதழின் இம்மாத அதிதியாக திகழ்பவர் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட பன்னூலாசிரியரும் எழுத்தாளரும் சமுகவியல் ஆய்வாளருமான ~ஹாதிபுல் ஹ{தா: ஜனாப் எம்.எம்.எம். நூறுல்ஹக் ஆவார்.

00 1964ல் பிறந்த நூறுல்ஹக் ஒரு எழுத்தாளர்- நூலாசிரியர்- சமுக இலக்கிய ஆய்வாளர்-ஊடகவியலாளர்- பத்திரிகை ஆசிரியர்- எனப் பரந்துபட்ட ஆளுமைத் தளங்களில் மிளிர்பவர். ஏறக்குறைய 30 வருடகால எழுத்தூழிய அனுபவமிக்கவர்.

 00 2011ல் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்ற ~~அரசியல் சிந்தனைத்துவமும் சமுக இருப்பும்|| என்ற ஆய்வு நூல் உட்பட - ~ஈமானியப் பேரொளிகள்| (2009)- ~முஸ்லிம் பூர்வீகம்| (2006)- ~சிறுபான்மையினர் சில அவதானங்கள்| (2002)- ~தீவும் தீர்வுகளும்| (1998)- ~தெரிந்த கேள்விகளுக்கான பதில்கள்| (1996) - ~வலிமார்களும் வஸீலாத் தேடலும்| (1988)- ஆகியன இவரது வெளிவந்த ஏனைய நூல்கள்...

 00 நூறுல்ஹக்கின் எழுத்துலகப் பிரவேசம் வெறும் கற்பனாவாத நாலுவரிக் கவிதையல்ல..உண்மையை வன்மையாய் இடித்துரைத்த ஒரு சமயம் சார் கட்டுரையாகும். 1981 ல் வெளியான இக்க்ட்டுரையோடு தொடங்கிய எழுத்துப் பயணம் அரசியல்ää இலக்கியம்ää ஊடகம்ää ஆய்வுää என வியாபித்து வந்தது...இனக்கலவரங்களும் யுத்;தமேகங்களும் உக்கிரமாக நாட்டை ஆட்டிப் படைத்த காலங்களில் பல எழுத்தாளர்கள் தொட்டுப் பார்க்கவும் அஞ்சிய சில கருத்தியல்களை அஞ்சாமை என்ற எழுதுகோல் கொண்டு பல தேசிய நாளிதழ்களில் எழுதியும் பிரசுரித்தும் வந்தவர் நூறுல்ஹக். அதற்காக சில அரசியல் அழுத்தங்கள்... தீவிரவாத அச்சுறுத்தல்கள் சில இருட்டடிப்புக்கள் எனப் பல கருமேகங்கள் சூழ்ந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டிப் பிரகாசித்த மெய்யொளி இவர். துணிச்சலான பேனாப் போராளி.

 00 நூறுல்ஹக்கின் ஆதாரப10ர்வமானதும் தர்க்க ரீதியிலானதுமான பத்தி எழுத்துக்கள் மற்றெல்லா விமர்சகரையும் விட உருவ உள்ளடக்கத்தில் வித்தியாசமாவையும் புறக்கணிக்க முடியாதவையுமாகும். அம்பாறை மாவட்ட வரலாறுää மருதமலர் (பிரதேச சாகித்திய மலர்) என்னும் நூல்களில் இவரது எழுத்துக்கள் பற்றி விதந்துரைக்க ப்பட்டுள்ளது..

00 ~~........மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகளும்ää அரசியல் கட்சிகளும் மலிந்து விட்ட இக்காலத்தில் நூறுல்ஹக் போன்றோரின் எழுத்துக்கள் மக்களை விழிப்படையச் செய்கின்றன......|| என்று பேராசிரியர் வி.கே. கணேசலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 00 மேலும்- ~~....இவரது எழுத்துக்களில் ஆழமும் ஆய்வும் பரந்துபட காணப்ப டுகின்றன.. இதில் முக்கிய அம்சம் யாதெனில் அவரது எழுத்துக்கள் சம நிலையைப் பேணுகின்றன. தேசிய ரீதியில் எழுதுகின்ற ஒருவருக்கு இருக்க வேண்டிய பொறுப்பும் தான் எடுத்துக் கொண்ட விடயத்திற்கேற்ப ஆழ்ந்த அறிவும் தக்க எழுத்தாற்றலும் அவருக்கு கைவரப் பெற்றிருக்கின்றன.. எவரது மனங்களையும் நோகடிக்காமல் தனது சமுகத்தின் பிரச்சினைகளை தக்கவிதமாக நியாயப்படுத்திச் சொல்லும் ஆற்றல் அவரிடம் வலுவாகக் காணப்படுகின்றது....|| என்று பன்னூலாசிரியர் அனிஸ்டஸ் ஜெயராஜா அவர்கள் இவரைக் கணித்துள்ளார்.;.

 00 ~~...............இவரது தமிழ்நடை இனிமையாக அழகாக வாசிப்பைத் தூண்டுகிறது.. எல்லாப் பத்திரிகைகளுமே அவருக்கு இடம் கொடுத்துள்ளன.. அந்த வகையில் இவரை அங்கீகரிக்கப்பட்டட ஒரு எழுத்தாளராக ஏற்றுக் கொண்டுள்ளன.... மேலும் நூறுல்ஹக்ää இந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் விமர்சகராகவம் இருக்கின்றார்....|| என நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஐ; என்.எம். அமீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 00 ஸ்ரீ.ல மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்ää ~~....நண்பர் நூறுல்ஹக் அவர்களுடைய எழுத்துக்களைப் பார்க்கின்றபோது அவர் எடுத்தாண்டிருக்கின்ற அரசியல் பிரச்சினைகளின் அணுகு முறைகளைப் பார்க்கின்றபோது அவரைப் போன்ற விமர்சகர்கள் ஒரு பத்துப் பேர் இருந்தால் போதும் எங்களுடைய சமுகத்தின் விடுதலைக்கு அது போதும் என்கின்ற உணர்வு எம்மத்தியிலே எழுகின்றது.. என்று தெரிவித்துள்ளார். (வீரகேசரி 9.5.1998- தினக்குரல் 10.5.1998)

 00 ஸ்ரீலங்கா உலமா கட்சியின் தலைவர் அல்ஹாஐ;.. ....முபாறக் அவர்கள்--- ~~..........நல்ல தமிழ் அறிவுää விரிவான சிந்தனைää தான் சரியென்று கண்ட கருத்தை தெளிவாக எழுதுவது என்பன நூறுல்ஹக்கிடம் நான் கண்டவையாகும்.. இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது புத்தகங்கள் மீது அவருக்கு இருக்கும் மோகம் என்றால் அது மினகயாகாது...|| என நூறுல்ஹக்கைப் பதிவு செய்துள்ளார்.

 00 எழுத்துப் பயணத்தில் சுமார் 30 வருட கால நீண்ட அனுபவம் பெற்றுப் பயனித்துக் கொண்டிருக்கும் நூறுல்ஹக்கின் சில பதிவுகளைப் பார்ப்போம்.

 00 சோலை (1984) கவியிதழ் ஆசிரியர் - அல்ஹ_தா (1984-1987 வரை) சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்.

00 பார்வை (1989)- உதயம் (1991)- சங்கமம் (1994)- இடி (2001)- முஸ்லிம் குரல் (2003) – எழுவான் (2006) ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்.

00 பெற்ற விருதுகள்- கௌரவங்கள்-- வெற்றி ஞாபகார்த்த விருது (2002)- இளம் படைப்பாளிகளுக்கான விருது (2002)- ~ஹாதிபுல்ஹ_தா| (சத்திய எழுத்தாளர்.) பட்டமளிப்பும் விருதும் (2006)- வார உரைகல் பத்திரிகை வழங்கிய பொன்மலர்ப் பதக்க கௌரவம். ( 2007)- விமர்சனத்துறைக்காகப் பெற்ற கிழக்கு மாகாண சாகித்திய விருது (2011) என்பன சில...இன்னும் பல உண்டு.

 00 இதுவரை காலமும் நூறுல்ஹக்கினால் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் தொடராக வெளியான சில பத்தி எழுத்துக்கள் சமுக அரசியல் மட்டங்களில் உரத்த அவதானம் பெற்றவையாகும். அவற்றுள்; எடுத்துக்காட்டாக சில....

 1. தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும்..(1989---1990 வரை 04 தொடர்கள்----பார்வை இதழ்)

2. pஹாதின் யதார்த்தமும் சில தவறான கருத்துக்களும் --(1992--- தினகரன்)

3. பேரினவாதத்திற்குள் அமுங்கிப் போன முஸ்லிம் உரிமைகள் ( 1997-- தினக்குரல்)

4. வரலாறு தொல்பொருள் ஆய்வுகளை இஸ்லாம் மறுக்கின்றதா...? (2003-- முஸ்லிம் குரல்)

5. இலங்கைதான் மனிதனின் பிறந்தகம் என்பதை ஏற்கலாமா...? (1999-- நவமணி)

00 புனைபெயர்கள்-- மிஹ்லார்- மருதூர் மெய்யொளி- எம்.என்.எச்..- செஞ்சுடர்- இலக்கணி- .னன்- நபா- முihதலத- அபூ மிஸ்பாஉல் ஹக்.- அபூ பாத்திமா பர்வின் என்பன...

00 கல்வித் தகைமை --- ஊடகத்துறை டிப்ளோமா..

00 படைப்புத் தளங்கள்-- தினகரன்- மித்திரன்- வீரகேசரி- தினக்குரல்- சுடர்ஒளி- இடி- தூது- தினபதி- சிந்தாமணி- எழுச்சிக்குரல்- நவமணி- பாமிஸ்- தினமணி- அல்ஐஸீரா- சரிநிகர்- ப்ரியநிலா- பர்வை- உதயம்- முஸ்லிம்குரல்- விடிவு- அல்ஹஸனாத்- வெற்றி- ஆதவன்- நிகரி மற்றும் பல.....

 00 இயங்கு தளங்கள்--- தலைவர்-சாய்ந்தமருது முன்னேற்ற இளைஞர் பேரவைää பொதுச் செயலாளர்- மருதம் கலை இலக்கிய வட்டம்ääமற்றும் இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டம்.ää _னுப்பிட்டிய இலக்கிய வட்டம்.....உறுப்பினர் முஸ்லிம் மீடியா போரம்...

 00 குடும்பம்--- பெற்றோர்.- அல்ஹாஐ;. மௌலவி. ஐ.எல்.எம். முத்து பஹ்ஐp ää ஐ.எல். பாத்தும்மா--- மனைவி- எஸ்யூ. கமர்ஐhன் பீவி (து.P) – பிள்ளைகள்--- முஹம்மத் மிஸ்பாஉல் ஹக் (கணக்காளர்) மற்றும் பாத்திமா பர்வீன் (மௌலவியா)

 00 தொடர்புகள்-- 129டீ ழுளஅயn சழயன ளுயiவொயஅயசரவார- 5.

தற்போது நூறுல்ஹக் அவர்கள் தன்னிடமுள்ள ஆயிரக்கணக்கான தரவுகள்ää நூல்கள்ää பத்திரிகை நறுக்குகள்ää என்பவற்றுடன் மேலும் தேடற்கரிதாகப் பெறப்படும் பன்நூறாயிரம் தகவல்களiயும் கொண்டு ~~மருதம் ஆவணக் காப்பகம்|| ஒன்றினை இணையத்தில் நிறுவும் முன்முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். அவரது நன்முயற்சியை செங்கதிர் வாழ்த்துகின்றது. (தகவல்கள்-- தீரன். ஆர்.எம். நௌஸாத்.- சாய்ந்தமருது- 0714457593)

 

 

No comments:

Post a Comment