குறும்பா
ஜீவநதி (128- வைகாசி 2019) இதழில் செங்கதிரோன் அவர்கள் எழுதிய ‘’குறும்பா’’ என்னும் ஒரு பத்தி அபூர்வமான பல தகவல்களுடன் வெளியாகியிருக்கிறது. 1965 ஜனவரியில் மகாகவி உருத்திரமூர்த்தி முதலாவதாக தமிழில் குறும்பாவை எம்.ஏ
ரகுமானின் இளம்பிறை சஞ்சிகையில் அறிமுகம் செய்தார் என்ற குறிப்பு அதில்
காணக்கிடைக்கிறது.
அச்சமயத்தில் அக்குறும்பா வடிவத்தைப் பின்பற்றி அப்போதைய மூத்த கவிஞர் எவரும்
குறும்பா எழுதாத அல்லது எழுத விரும்பாத போது அன்றிருந்த இளைய தலைமுறையினரில்
ஏ.பீர்முகம்மது (சேர்) அவர்களே முதன் முதலாக குறும்பா எழுதினார் என்றும்
அக்குறும்பா இளம்பிறை சஞ்சிகையின் 1965 செப்டம்பர் இதழில் வெளியானது
என்றும் ‘’செங்கதிரோன்’’ தன கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்...அதன் பின்னர் 1970 களிலேயே எம்.எச்.எம். ஷம்ஸ் –கலைவாதி கலீல்—ஜவாத் மரைக்கார் ஆகியோர் குறும்பா
எழுதினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும் அதன் பின்னர் கொக்கூர்கிளான் கா.வை.இரத்தினசிங்கம்- அல் அஷூமத் –பாவேந்தல் பாலமுனை பாறுக்—தீரன்- சிவபாலன்—ஒலுவில் ஜலால்தீன்—ஜே.வஹாப்தீன்—குருஞ்சித் தென்னவன்—சிவசேகரம் போன்றோரையும் தொட்டுச் செல்கிறார்..
நமது தேடல் என்னவென்றால் மகாகவிக்குப் பின்னர் 1965 களில் திறனாய்வாளர் ஏ.
பீர்முகம்மது சேர் அவர்கள்தான் முதலில் குறும்பா எழுதினார்...என்ற தகவல் சரியானதா
என்பதை மேற்படி........................... ஆகியோர் தெரிவிக்க வேண்டுமென
கோருகிறேன்...
குறும்பா (2)
ஜீவநதியில் செங்கதிரோன் எழுதிய கட்டுரையிலிருந்தும் குறும்பா பற்றிய என்
முன்னைய பதிவின் பின்னூட்டங்களிலிருந்தும் சில தெளிவுகள் கிடைக்கின்றன,,,
(1) சில்லையூரார் ஒரு போதும் குறும்பா வடிவத்தை பின்பற்றி குறும்பா
எழுதவேயில்லை...இருந்தால் ஆதாரத்துடன் பதிவிடுங்கள் ஏற்றுக் கொள்கிறோம்..
(2) மற்றது //..........அக்காலகட்டத்து மூத்த கவிஞர்கள் எவரும் குறும்பாவின்
வடிவத்தை பின்பற்றி கவிதை எழுத முன் வராத போது இளம் தலைமுறையினர் சிலர் குறும்பா
வடிவத்தைக் கையாளத் தொடங்கினர்.. அவர்களில் பிற்காலத்தில் இரண்டாம்
விஸ்வாமித்திரன் என அறியப்பட்ட கவிஞர் ஏ.பீர்முகம்மது குறிப்பிடத்தக்க ஒருவர்
....// என்று கூறும் செங்கதிரோன் அந்த குறும்பாவையும் குறிப்பிட்டுள்ளார்.
சிந்தனையை கிளறுகிறான் பாடி
சிரிப்பும் உடனே வருமாம் கூடி
வந்து குரும்பாவினை நம்
வாய் கிழிய மெய் சிலிர்க்க
தாந்திடுவான் ஊழல்களைச் சாடி
(இளம்பிறை செப்.1965)
இதற்கு மறுப்பு இருந்தால் ஆதாரத்துடன் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறோம்..
(3) உருத்திரமூர்த்தியின் நூலுக்குப் பின் வந்த குறும்பா தொகுப்பு ஒலுவில்
ஜலால்தீனின் ‘’சுடுகின்ற மலார்கள்’’
(2௦௦2) என்பது பிழையான தகவல் .. அதற்கு முன்பே ‘’நகை’’ என்ற சிவாபாலனின் நூல் 2௦௦௦ ஆம் ஆண்டு வந்துள்ளது
(4) மேலும் நமது நோக்கம் தெளிவு பெற வேண்டியே தவிர இன்னின்னாரெல்லாம் குறும்பா
எழுதினர் என்ற பட்டியல் இடுவதன்று ....
வல்லூறின் வானம்
முதாய வானத்தில் வட்டமிடும் இன வல்லூறுகள் சிறுபான்மைக் குஞ்சுகளை கொத்திச்
செல்லும் அபாயகரமான சூழலில் மனவேக்காடு கொண்டு ஒதுங்கி விடும் இலக்கியவாதிகள்
பலர்...ஆயினும் மன ஓர்மை கொண்டு வல்லூறுகளை விரசிக் கொண்டு வாசலில் கவிதைக்
கற்களுடன் நிற்கும் வெகு சில கவிஞர்களுள் மருதூர் ஜமால்தீனும் ஒருவர்.. அவரது ‘’வல்லூறின் வானம்’’ கவிதை திரட்டு இன்று என் கையில் கிடைத்த போது அகமகிழ்ந்தேன்...
பல்வேறு ஊடகங்களில் அவர் எழுதி வந்த மரபு சார் கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
இன மத பேதங்கள் வெள்ளமாய் பாயும் போது தன் பேனாவை ஒரு சிறு துடுப்பாகப் பாவித்து
மனிதம் என்ற தோணியில் பயணம் செய்ய எத்தனிக்கின்ற இந்த அப்பாவிக் கவிஞனின்
ஏக்கங்களின் வெளிப்பாட்டுணர்வுகள் இந்நூலில் பிரவாகிக்கின்றன...
///வன்செயலைத் தூண்டிவிட்டு/வாய்மையோராய் உலாவரும்/புண் நெஞ்சோர் கறைச்
செயலை/பூமியிலே விதைத்திடவா/கன்னி வைத்தெம் தலைமைகளை/கால் வாரிட முனைகின்றார்/ உன்
சாபமவர்கட்கு/உடனிறக்கு எம் ரப்பே...../// என்று மருதூர் ஜமால்டீன் வெம்பிக்
கேட்கும் போது நம்மால் ஒரு ‘’ஆமீன்’’ சொல்லத்தான் முடிகிறது...
பதினைந்து கவிதைகளின் தொகுப்பு ‘’ஏறாவூர் வாசிப்பு வட்டம்’’ வெளியீடாக வந்துள்ளது,,
நூலின் அழகிய அட்டையை அரூஸ் வடிவமைத்துள்ளார்... ஏற்கனவே,,,தடயங்கள்—ரமலான் சலவாத்—கிழக்கின் பெருவெள்ளக் காவியம்—முகம்மத் (ஸல்) புகழ்மாலை—இஸ்லாமிய கீதங்கள்—தாலாட்டு-பத்ர் யுத்தம்—வலிகள் சுமந்த தேசம்—தீ நிலம்—போன்ற வெளியீடுகளை தந்த மருதூர் ஜமால்தீனின் 1௦ ஆவது அறுவடையாக வந்துள்ளது இந்த ‘’வல்லூறின் வானம்’’
‘’வல்லூறின் வானம்’’—இது, இனவானத்தில் இளகிய இறக்கைகள் கொண்டு வரைந்த இதிகாசம்...வாழ்த்துக்கள்
ஜமால்தீன்...
(Maruthoor Jamaldeen—0775590611)
No comments:
Post a Comment