சாய்ந்தமருது நூலகம்
சாய்ந்தமருது நூலகம் என்னும் பெயரில் ஒரு சிறிய அலுமாரி வைத்திருந்தேன்...
அதில் இப்பகுதி எழுத்தாளர்களின் நூல்கள் பல இருந்தன... அவற்றில் சில ஓசிப்
பேர்வழிகள் இரவல் பெற்றுச் சென்று தொலைந்தன.. வேறு சில 20௦3 இன் பெருமழைக்குள் நனைந்து இறந்தன.. இன்னும் சிலவற்றை வைக்க இடமின்றி
சிலருக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டேன்.. இப்போது நான் நூல்கள் சேமிப்பது
இல்லை.. வாசித்த பின் மிக நெருங்கிய வாசிக்கும் நண்பர்களுக்கு கொடுத்து
விடுகிறேன்... என் சாய்ந்தமருது நூலகம் அலுமாரியில் இருந்த இப்பகுதி
எழுத்தாளர்களின் நூல் பட்டியல் ஒன்றை குறித்து வைத்திருந்தேன்.. அவற்றுடன்
சேர்த்து கலாபூஷணம் யூ எல் ஆதம்பாவா அவர்களின் கட்டுரையில் உள்ள சில
தகவல்களையும்..சாய்ந்தமருது வரலாறு எனும் நூலிலிருந்து எடுத்த சில விபரங்களையும்
கொண்டு பின்வரும் ஒரு பட்டியலை புதிதாக தொகுத்துள்ளேன்...
இதில் உள்ள குறைபாடுகள்/விடுபட்டவை போன்ற தகவல்களை நண்பர்கள் கீழே
பின்னூட்டமிடுவதால் ஓரளவு நமது ஊரின் எழுத்தாளரின் ஒருமுழுமையான பட்டியலை தயாரிக்க
முடியுமாக இருக்கும்...
1. மீ.அஹமது புலவர்-
நாயகம் மேல் சலவாத்து/ஐஞ்சீர் புகழ்மாலை/நோன்பின் மாண்பு
அறிவும் உணர்வும்/ இறுதி இறைத்தூதர்/ அல்குர் ஆணின் தீர்க்கமான அறைகூவல்
3. ஏ.எஸ்.எம். ஷம்சுதீன் மௌலவி-
சலவாத் மாலை/ பாவ மன்னிப்பும் புனிதா நோன்பும்/ஹாஜிகளின் தோழன்
4. எஸ்.எச்.எம். ஜமீல்—
எ.எம்.எ. அஸீஸ் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும்/சேர் ராசிக் பரீத் அவர்களின் கல்விப்பணி / கல்விச் சிந்தனைகள்/ கலாநிதி சாயாவின் கல்விப் பணிகள்/ சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் வரலாறு/ நினைவில் நால்வர்/ இஸ்லாமியக் கல்வி/ கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் கல்விப்பனிகள்/ கிராமத்து இதயம்/ காலச்சுவடுகள்/ நமது முதுசம்/ ஒரு கிராமத்து சிறுவனின் பயணம் / சுவடி ஆற்றுப்படை நான்கு பாகங்கள்/அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்/ அல்லாமா உவைஸ்/அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்/கம்பஹா மாவட்ட முஸ்லிகள்/புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள்/islam in independent Srilanka/Srilanka udana/A.M.A. Azeez –A profile / senate speeches of A.M.A. Azeez
5. ஏ.யூ.எம்.ஏ.கரீம்—
நபிகள் பெருமானார் (ஸல்)
6. மருதூர் ஏ மஜீத்-
பன்னீர் வாசம் பரவுகிறது/ பன்ணீர்க்கூதலும் சந்தனப் போர்வையும்/ மறக்க முடியாத
என் இலக்கிய நினைவுகள்/மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை/ இளமையின்
இரகசியமும் நீடித்த ஆயுளும்/ நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக்
குறிப்புகளும்/ தென் கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு/வேர்/ சர்வமதங்களிலும்
நோன்பு/ இஸ்லாத்தைப் பற்றி இதர மதத்தவர்கள்/ தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின்
நாட்டாரியல்/
7. யூ எல். ஆதம்பாவா-
காணிக்கை- சாணையோடு வந்தது/நாங்கள் மனித இனம்/ பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம்/
8. ஏ.எச்.ஏ.பஷீர்—
அவள் செத்துக் கொண்டு வாழ்கிறாள்/ ஒரு பூ மீண்டும் மலர்கிறது
9. எஸ். நஸீறுதீன்-
நல்லதோர் வீணை செய்தே../பெண்ணே போற்றி/ மறைத்தலின் அழகு/ கவசம் களைதல்/ நச்சு
வளையம்/ ஏவாளின் இரண்டாம் ஆப்பிள்/
10. எம்.எம்.எம்.நூறுல் ஹக் –
அல்.ஹுதா/சோலை/ சிறுபான்மையினர் சில அவதானங்கள்/ பார்வை/உதயம்/சங்கமம்/இடி/
முஸ்லிம் குரல்/ முஸ்லிம் பூர்வீகம்/வலிமார்களும் வஸீலாத் தேடல்களும்/தெரிந்த
விடைகளுக்கான கேள்விகள்/ தீவும் தீர்வுகளும்/
11. எச்.ஏ. அஸீஸ்-
ஐந்து கண்டங்களின் மண்
12. எம்.எம்.எம். மஹ்ரூப்-
அழகியலும் ஆக்கத் தொழிற்பாடும்/சங்கீதம்
13. எம்.ஐ.எம். அஷ்ரப்—உறங்காத உண்மைகள்
14. நாகூர் ஆரிப்—முகநூலில் நான்/ இன்று மாறும் நாளை”
15. டாக்டர்.ஏ.எம். அபூபக்கர்.—
நான்/ மதுக்கலசம்/ இஸ்லாமிய வரலாறு I,ii,iii,iv/ நீ/ நம்பிக்கை மணிகள்//முறையீடு/ கவிதாஞ்சலி/ஞானி/நாயகமே பூமிக்கு வாருங்கள்./பரீட்சையில் சித்தி பெறுவது எப்படி../ அறிவுத்துறையில் முஸ்லிம்கள்/ பாலியல் பிரச்சினைகள்/ அறிவியல் வளர்த்த முஸ்லீம்கள்/ சூபிகள்/ பாலியலும் இஸ்லாமும்/ அஸ் ஸரியாக்கள்/
16. எஸ்.எச். ஆதம்பாவா-
இஸ்லாமும் கவிதையும்/ சாந்தி வழி/ மதீனாவின் மாண்புகள்/ இஸ்லாமிய வரலாறு/ இஸ்லாம்-சமாதானமும் மனிதநேயமும்/ எனது நினைவுத் திரையில் அஷ்ரப்/சரண்தீவில் பாறுதி
17. மருதூர் சலீம்கான் (மீர்ஸா)—காகிதத் தூண்கள்
18. எம்.எஸ்.எம். ஹம்ஸா- Mathematics-1 Maths-11
19. நவாஸ் சௌபி.— முள்ளில் எறியாதே/எனது நிலத்தின் பயங்கரம்/
போராயுதமும் கவிதையிடம் சரணடைதலும்
20. எம்.எம்.எம். பாஸில்—
புதுச்சுவர்
21. ஏ.பீர்முகம்மது-
கடல் ஒருநாள் ஊருக்குள் வந்தது/ விபுலானந்தரும் முஸ்லிம்களும்
22. ஏ.எச். சித்தீக் காரியப்பர்-
பார்வை
23. கேஎம்மே அஸீஸ் –
கனலாய் எரிகிறது
24. மௌலவி ஏ எல்.எம். முபாரக்—
அழகு தமிழ் அரபு துஆக்கள் / சலவாத் மாலை/ இறைபாதை/பிரயோகத்திலுள்ள அரபுச் சொற்களும் பொருளும்..
25. மருதூர் ஏ ஹசன் –
அநாமிகா/ மழையும் சிறையும்/சுனாமி
26. ஆர்.எம். நௌஷாத்—
தூது/ புள்ளி/ இன்னாலில்லாஹி/ வல்லமை தாராயோ/ நட்டுமை/ வெள்ளிவிரல்/ கொல்வதெழுதுதல்.9௦/ ஆழித்தாயே அழித்தாயே/ தீரதம்/வக்காத்துக்குளம் /குறுநெல்
27. எஸ்.எம்.எம். றாபிக் –
புள்ளி/ மின்னல் /தூது
28. எம்சிஏ பரீத்—
கோகிலம்
29. எம்.எம்.எம். நகீபு .—
இரண்டாவது பக்கம்/ புதுயுகம்/கறை.
30. ஹிதாயா மஜீத்-
நாளையும் வரும்/ இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை/தேன் மலர்கள்/ தடாகம்
31. இக்பால் அலி –
நயனம்/ முற்றத்துக்கு வாருங்கள்/ புள்ளிகளில் சில புள்ளிகள்/நான் மூன்று
சக்கரக்காரன்/ அன்பு பெருக / இலங்கை முஸ்லிகளின் வரலாற்றில் கலாநிதி கே. எம்.எச்,காலிதீன்.
தடயங்கள் / தீ நிலம்/ ரமலான் சலவாத்/கிழக்கின் பெருவெள்ளக் காவியம்/முஹம்மது
(ஸல்) புகழ்மாலை/இஸ்லாமிய கீதங்கள்/ தாலாட்டு/பத்ர் யுத்தம்/ வலிகள் சுமந்த தேசம்/
வல்லூறின் வானம்/ மனிதம் வாழும்
மனிதனைத் தேடும் மனிதன்/சோலை
34. எஸ்.நஜிமுதீன்-
பேசவே செய்ததடி- முள்ளில் படுக்கையிட்டு
35. அனார்-
ஓவியம் வரையாத தூரிகை/எனக்குக் கவிதை முகம்/பொடுபொடுத்த மழைத் தூற்றல்
உடல் பச்சை வானம்/ஜின்னின் இரு தோகை
36. மருதநிலா நியாஸ்—
சாம தொரட்டுவ/ கடலே உனக்கு கருணை இல்லையா../இசுவா அம்மானை
38. ஏ எம்.எம். ஜாபிர்-
விழிகள் சுவாசிக்கும் இரவுகள்/இரண்டாவது பக்கம்
39. மருதூர் அன்ஸார் –
No comments:
Post a Comment