Monday, March 14, 2022

ந ஸ்ருல் என்றொரு எரிநட்சத்திரம். -தீரன். ஆர்.எம். நௌஸாத்.

 ஞானம். சர்வதேச எழுத்தாளர் விழாச் சிறப்பு மலர்.

ந ஸ்ருல் என்றொரு எரிநட்சத்திரம்.

-தீரன். ஆர்.எம். நௌஸாத்.

 

வீரனே முழங்கு!

என்றும் நிமிர்ந்திருக்கும் என் சிரம் என்று...

என் நிமிர்ந்த சிரம் கண்டு

இமயமும் தலை தாழ்ந்தது காண்.!

சிறையின் இரும்புக் கதவுகளை

உடைத்துத் தூள்தூளாக்கிவிடு

இரத்தக் கறை படிந்த அக்கற்சிறைதான்

அடிமைத்தனத்தின் பூஜா மேடை.

இளம் மகேசனே..

ஊது உன் பிரளயச் சங்கை

கிழக்கின் சுவரைப் பிளந்து கொன்டு;

பறக்கட்டும் உன் அழிவுக் கொடி.

 

என்று எழுத்து நெருப்புகளை அள்ளி வீசிய படைப்பாளி நஸ்ருல்இஸ்லாம் வங்காள தேசத்தின் பர்த்மான் மாவட்டத்தில் உள்ள அகுலி என்ற கிராமத்தில் தாஜிபக்கிரி அகமது-- ஜகேதாசாத்தூன் தம்பதியினருக்கு 1899 மே மாதம் 23ம் திகதிபிறந்தவர். முஸ்லிமாக இருந்தாலும் பிரமிளா என்ற இந்துப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்.

 நஸ்ருல்ää பெரியளவில் பாடசாலைக்கல்வி கற்கவில்லை. எனினும் எழுத்துக் கடல் அவருக்குள் பீறி;ப் பாய்ந்தது. தன்னுடன் கல்விகற்ற ஒரு பொலிஸ்காரனின் மகளை உயிருக்குயிராகக் காதலித்து கவிதை விண்ணப்பம் செய்தார். எனினும் அவள் அதனை நிராகரித்ததால் அவளை கன்னத்தில் அறைந்து விட்டார். என் காதலை நிராகரித்தது பற்றி எனக்கு கவலையில்லை. என் கவிதையை அவள் கவனமாகப் படிக்கவில்லை என்பதே என் ஆத்திரத்தின் காரணம் என்று அதற்குச் சமாதானம் கூறினார். ஆயினும் இச்சம்பவத்தின் பின்னர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இதற்காக பிற்காலத்தில் அப்பெண்ணை நினைத்து மிகவும் பச்சதாபப்பட்டார். தனது ~பிஎத்தார் தான்| என்ற சிறுகதைத் தொகுதியை அவளுக்குச் சமர்ப்பனம் செய்து தன் பச்சதாபத்தைத் தீர்த்துக் கொண்டார்.

 தன் உக்கிரமான எழுத்துக்களால் வங்க மக்களுக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் தன் நெஞ்சத்து நெருப்பை அள்ளி வீசியவர். நஸ்ருலின் 23ம் வயதிலேயே வங்கத்தின் மாகவி இரவீந்திரநாத் தாகூர் தனது கவிதைத் தொகுதி ஒன்றை இவருக்குச் சமர்ப்பனம் செய்திருக்கிறார் என்றால் நஸ்ருலின் திறமைக்கு வேறு சாட்சிகள் தேவை இல்லை. 

~லிச்சு சோர்| (திருடன் லிச்சு)ää ~குக்கி ஓ காட்டோலி| (குழந்தையும் அணிலும்)ää ~காந்து தாது| (சப்பைமூக்குப் பாட்டன்) ஆகிய சிறுவர்களுக்கான நாவல்களையும்ää ~புத்து லேர்| (பொம்மைத் திருமனம்)ää என்ற சிறுவர் நாடகத்தினையும் தனது 27ம் வயதில் படைத்தார். மற்றும் ~பிஎத்தார் தான்|ää ~ரிக்தேர் வேதன்|ää ~சிவுலி மாலா| ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அசுர வேகத்தில் படைத்தளித்தார். தவிரவும் ~பாந்தன் காரா|ää ~மிருத்கூலித்தா| (பசியும் சாவும்) ~குகேகலிகா| ஆகிய நாவல்களையும் 30 வயதில் கொணர்ந்தார்.

 ~~....... படுத்திருந்த நிலவு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டது.... இறந்து விட்ட நாளின் வெளுத்த முகத்தை இரவின் கறுப்புத் துணி மூடியது.... நட்சத்திரமும் நிலவும் ஆயிரக்கணக்கான நோயாளிப் பெண்களின் படுக்கையருகில் அணையவிருக்கும் அகல் விளக்குகள்.........|| என்பன போன்ற ஆயிரக்கணக்கான உவமைகளும்ää படிமக்குறியீடுகளும் அவரது எழுத்தில் விரவிக் காணப்படும்.

 எழுத்துத் துறை தவிர கைரேகைக் கலையிலும் நஸ்ருல் வெகுதிறமைமிக்கவர். பஜிலத்துன்னிஸா என்ற கோடீஸ்வரப் பெண்ணின்; கைரேகை பார்க்கச் சென்ற சமயம் அவள் மீது தீராக் காதல் கொண்டார். எனினும் அவரது காதல் நிராகரிக்கப்பட்டதால் வேதனையும் ஆத்திரமுமடைந்தார். சிறிது காலம் விரக்தி நிலையில் அலைந்து வி;;ட்டு பின்னர் குடும்பத்தாரின்; எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது தீவிர இரசிகையும் இந்துப் பெண்ணுமான பிரமிளாவைத் திருமணம் செய்தார். எனினும் திருமண வாழ்வு அவருக்கு பெரிதாக சோபிக்கவில்லை. வாழ்வின் இறுதி வரை வேதனையும் புகழும் மாறிமாறி இவரை ஆட்கொண்டன. 1942ம் ஆண்டு தனது 43ம் வயதில் திடீரென நோய்வாய்ப்பட்டார். வாய் பேச முடியாமல் சிரமப்பட்டார். மனைவிக்கும் வாத நோய் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ் வழக்கமற்றுப் போய்விட்டது.

 அடையாளம் காணமுடியாத நோய் தன்னைப் பீடித்திருந்த போதிலும் தன் நெருப்பு எழுத்துக்களை விடாமல் கொட்டித் தீர்த்தார். ~மிருத் கூலித்தா| என்ற உலகப்புகழ்பெற்ற நாவல் உருவானது இக்காலப்பகுதியிலாகும். இந்த உன்னதமிக்க படைப்பாளி வறுமையில் வாடுவதைக் கண்ட மேற்குவங்க அரசாங்கம் மாதாமாதம் உதவித் தொகை அளித்து வந்தது. இந்தி உருது மொழிகளில் கிடுகிடுவென அவரது எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அந்த எழுத்துக்களின் வீரியம் கண்டு; இந்தியாவும்ää பாகிஸ்தானும் மேலும் உதவித் தொகைகளை அள்ளி வழங்கின. எனினும் அவரது நோய் தீரவில்லை.

 1945ல் கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு ~ஜகத்தாரினி| என்ற உயர்விருதளித்துக் கௌரவித்தது. 1960ல் பாரத அரசு ~பத்மபூஷன்| பட்டமளித்து தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. 1962ல் மனைவி பிரமிளா காலமானார். இதனால் விரக்தியின் எல்லைக்கே சென்ற நஸ்ருல் நிரந்தரமாக படுக்கையில் வீழ்ந்தார். 1969ல் இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. 1972ல் வங்காள அரசாங்கம் இவரை அழைத்து நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்த்தளித்து அரச விருந்தினராகவும் ஆக்கியது. அரச இலக்கிய உயர் விருதான 21ம் நாள் பதக்கமும் அளித்து கௌரவப்படுத்தியது. 1975ல் இவரது ~சல்சல்| என்ற பாடல் வங்க இராணுவத்தின் தேசியப் பாடலாக ஆக்கப்பட்டது. 1976.08.29ல் அந்த எழுத்தின் எரிநட்சத்திரம் வீழ்ந்துவிட்டது.00

 

 

 

No comments:

Post a Comment