Monday, March 14, 2022

நூருல் ஹக்கின், ஈமானியப் பேரொளிகள். ஆர்.எம்.நௌஷாத்

 

நூருல் ஹக்கின், ஈமானியப் பேரொளிகள்.

ஆர்.எம்.நௌஷாத்

 

நாடறிந்த எழுத்தாளர் ~ஹாதிபுல் ஹ_தா| எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்கள் எழுதியுள்ள இஸ்லாமிய ஆய்வு நூல் இது. சாய்ந்தமருது மருதம் கலைஇலக்கிய வட்டம் இதனை வெளியிட்டுள்ளது. புனித மதீனாப் பள்ளியின் மினாராக்களும் கோபுரங்களும் அழகிய கரும்பச்சைப் பின்னணியில் அழகுற அமைந்துள்ள அட்டைப்படமும் பின்னட்டையில் ஆசிரியரின் அறிமுகக் குறிப்பும் கொண்டு மொத்தமாக 104 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

 இஸ்லாமிய ஆய்வு நூல் வகையிலான இதில்; நபிகள் கோமான் (ஸல்.) அவர்களைப் பற்றி பத்துத் தலைப்புகளிலும். அல்லாஹ்வின் தரிசனம் பற்றி இரு தலைப்புகளிலும் ~அவ்லியாக்கள்| பற்றி 34 தலைப்புகளிலும் பற்பல இஸ்லாமிய மெய்ஞானஆய்வுக்குரிய விடயங்கள் மொத்தமாக நாற்பத்தியாறு தலைப்புகளில் சுருக்கமும் இறுக்கமுமாக ஆனால் தெளிவாகவும் எளிதாகவும் சொல்லப்பட்டுள்ளன.

 இதனை வெளியிட்டுள்ள மருதம் கலை இலக்கிய வட்டத் தவிசாளர் கவிஞர். எம். நவாஸ் சௌபி தனது குறிப்புரையில் ~~....முஸ்லிம் சமுகத்திற்கான பல்வகைத்தன்மையான அடையாளங்களையும் அரசியல் சமயம் என்ற இருபெரும் துறைகளினாலும் மிக அற்புதமாகத் தன் எழுத்துக்களால் பதிவு செய்கின்றார். இப்பதிவுகள்; யாவும் வரலாற்றுத் தேவையாகவும் ஆய்வுகளுக்குமான ஆதாரங்களையும் பலஅவதானப் புள்ளிகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பதை இவரது எழுத்து ஆளுமை எமக்குப் புலப்படுத்துகிறது.....|| என்று குறிப்பிட்டுள்ளார்.

 ~~நமது நாட்டின் தேசியப்பத்திரிகைகளிலும் வாரப்பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுத்துருவாக்கம் செய்து வரும் ~ஹாதிபுல் ஹ_தா| எம்.எம். நூறுல்ஹக் அவர்களின் ஆக்கங்கள் புறக்கணிக்க முடியாத வரலாற்றுப் பதிவுகளாகும்.

 1988ல். வெளியான இவரது ~தீர்வும் தீர்வுகளும்| 2002ல் வெளியான ~~சிறுபான்மையினர் சில அவதானங்கள்| 2006ல் வெளியான ~முஸ்லிம் பூர்வீகம்| ஆகிய அரசியல் சமுகம் சார்ந்த மூன்று நூல்களும் அறிவுஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக மட்டங்களிலும் ஊடகத் துறையிலும் அதிகரித்த கவனயீர்ப்புக்குட்பட்டவையாக உள்ளன.

 1983ல் ~அல்ஹ_தா| காலாண்டிதழ் 1984ல் ~சோலை| கவிதை இதழ் 1988ல் ~வலிமார்களும் வஸீலாத் தேடல்களும்| போன்ற நூற்களும் மற்றும் 1993ல் ~இருபெருநாட்களின் சிறப்புமலர்| 1996ல் ~தெரிந்த விடைகளுக்கான கேள்விகள்..| 1998ல் ~தீர்வும் தீர்வுகளும்| 2002ல் ~சிறுபான்மையினர் சில அவதானங்கள் | 2006ல் ~முஸ்லிம் பூர்வீகம்| ஆகிய ஆய்வு நூல்கள் இவரது சமய இலக்கிய அரசியல்துறைகளின் ஆரோக்கியமிக்க பங்களிப்புக்களாகும்......|| இவ்வாறு நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தில் சாய்ந்தமருது ~அபாபீல்கள் கவிதாவட்டச்| செயற்சபை முதல்வரான கவிஞர். ஏ.எம்.எம். ஜாபீர் (பீ.ஏ) பதிவு செய்துள்ளார்.

 ~hமானியப் பேரொளிகள|; எனும் இந்நூலைப் பார்வையிட்டுள்ள அல்ஹாஜ் மௌலவி பாஸில். ஏ.எல். பதுறுத்தீன் (ஷர்க்கி. பரேலவி) அவர்கள் தமது குறிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

நுனிப்புல்லரிப்பு. ஆர்.எம்.நௌஷாத்

நுனிப்புல்லரிப்பு.

ஆர்.எம்.நௌஷாத்

  

நீங்களும் எழுதலாம் 9ம் இதழில் ~வானம்பாடி| எழுதிய பத்தியில்ää ~....இப்படியேää பளீல் காரியப்பர்ää ஜின்னா ஷெரிப்புத்தீன்ää காத்தான்குடி அஸ்ரப்கான் போன்றோரும் மரபோடு நீற்கும் கவிஞர்களாவர்...| என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு புல்லரித்துப் போனேன்.

 00 தமிழ்கூறும் நல்லலகிலேயே ஆறு தமிழ்க் காப்பியங்களை எழுதி சாதனை புரிந்தமைக்காக உலகத் தமிழிலக்கிய மாநாட்டில் தமிழ்நாட்டுப் புலவர்களாலேயே கௌரவம் பெற்ற தமிழ்ப்பெருந்தகையாளரான ஜின்னாஷெரீப்தீன் ஐயா அவர்களை ஒரு சாதாரண மரபுக் கவிஞர் வரிசையில் வைத்ததும்ää

 00 புலவர்மணி பெரியதம்;பிப் பிள்ளை ஐயா அவர்களால்ää ~பாவலர்| என்று பட்டமளிக்கப்பட்ட பாவலர் பஸீல் காரியப்பர் (கவனிக்க.. பளீல் காரியப்பர் அல்ல.. பஸீல் காரியப்பர்) அவர்களை மரபுக் கவிஞர் என்ற தர வரிசையில் குறிப்பிட்டிருந்ததும்ää

 00 தமிழ்க் கவிதையுலகில் பேர் குறிப்பிட்டறியமுடியாத அஸ்ரப்கான் என்னும் மின்மினியை மேற்படி சூரியசந்திரர்கள் வரிசையில் சேர்;த்திருந்ததும் கண்டு இந்த ஆய்வுக் கட்டுரையை(?) எழுதிய வானம்பாடியின் அறிவுத்திறனை எண்ணித்தான் இப்படிப் புல்லரித்துப் போனேன். காத்தான்குடியில் ஆயிரம் புலவர்களும்ää மரபுக் கவிஞர்களுமிருக்கää அஸ்ரப்கான் என்பவரை மட்டும் இவ்வரிசையில் பட்டியவிடக் காரணம் என்னவோ.. இவர் யார்..? இவர் தமிழ்யாப்பிலக்கணம் பயின்ற ஒரு மரபுக் கவிஞரா..?

 00 மேற்படி மூன்று வித்தியாசமான வார்ப்புக்களையும்ää ஒரே பாத்திரத்திலிட்டு இவர்கள் மூவரும் மரபோடு நின்றவர்கள் என்றால்... இதன் அர்த்தம்தான் என்ன..? எவ்வளவு பெரிய அறியாமை இது...! ஆக்கங்களை செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு என இதழில் குறிப்பிட்டிருக்கும்ää ஆசிரியர்ää ஆர். தனபாலசிங்கம் இதனைச் செவ்வைப்படுத்தவில்லையே ஏன்..?

 00 ~வானம்பாடி| ஏதாகிலும்ää கட்டுரைகள் எழுதும் முன்னர் தனது பார்வையை மேலும்ää கூர்மையாக்கிக் கொள்ளுதல் வேண்டும்;.

 00 தமிழறிஞர் திரு அருளையா அவர்களால்;ää ~எழுக புலவனே..!| என விளிக்கப்பட்டவரும்ää கலாநிதி எம்.ஏ. நு..;மான் அவர்களால்ää ~அரும்பு மீசைத் தத்துவஞானி..! என சிலாகிக்கப்பட்டவரும்ää கல்முனை அபாபீல்களினால்ää ~தென்கிழக்கின் உமர்கையாம்!| என வர்ணிக்கப்பட்டவருமான பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின்ää இனநல்லுறவுக் கவிதை ஒன்றினை ~நீங்களும் எழுதலாம்| வாசகர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.

 துளசி.

 துறைநீலாவணையிலிருந்து ஒரு

துளசிச் செடி கொண்டு வந்தேன்.

வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து

ஓரமாய்க் கெல்லி ஈர மண்ணோடு

உசுப்பாமல் கொண்டு வந்து

எங்கள் இல்லம் இருக்கும்

கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி

அதன் உள் வைத்தேன்.

அம்மண்கள் கலந்தன

மனிதரைப் பழித்தன.

துளசியின் இலைகள் என்னைப் பார்த்து

மெல்லச் சிரிக்கின்றன.

 -பாவலர் பஸீல் காரியப்பர்.

(நன்றி: ஆத்மாவின் அலைகள்.(1994.)


ஜிப்ரி ஹாசனின் மேய்ச்சல்வெளி - ஆர்.எம். நௌஷாத்

 

ஜிப்ரி ஹாசனின் மேய்ச்சல்வெளி -

 ஆர்.எம். நௌஷாத்

 01

 “...........முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானதுää முகவுரை எழுதுவதுதான் என்பேன். ää தெளிவுää தீர்க்கம்ää சுவாரசியம்ää இவற்றோடு சற்றே நகைச்சுவையும் சேர்ந்து விட்டால் முன்னுரையையே பலமுறை படிக்கலாம்.............”. என்று நாவலாசிரியை வித்யா சுப்ரமணியம் கூறிஇருப்பது எவ்வளவு பெரிய உண்மை என்பது நண்பர் ஜிப்ரி ஹாசனின் இத் தொகுதிக்கு நான் முன்னுரை எழுதுவது என்பது முடிவான பின் உணர்ந்து கொண்டேன்... என் கொள்ளளவுக்கு மீறிய செயல்தான் இது....

 ஜிப்ரி ஹாசனின் ஒரு சில புனைவுகளை முக்கியமாக கவிதைகளை நான் ஆங்காங்கே சில சஞ்சிகைகளில் பாலைநகர் ஜிப்ரிஎன்ற ஆளடையாளத்துடன் வாசித்திருந்த போதும் அவர் பற்றிய ஒரு நிரந்தர பிம்பம்என் மனத்தில் ஏற்பட்டிருக்கவில்லை.. அவரது விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்கவிதை தொகுப்பையும் நான் வாசித்திருக்கவில்லை ... . ஆயின் இரண்டொரு சிறுகதைகளை எதுவரை ääääääமற்றும் பெருவெளி சஞ்சிகைகளில் வாசித்தபோதுதான் ஜிப்ரிஹாசன் என்ற அவரது இலக்கியப் பிம்பத்தை ஓரளவு உணர்ந்து கொள்ள முடிந்தது.ääääää

ஜிப்ரிஹாசன் ஒரு சமூகவியல் பட்டதாரி ஆசிரியர் - போர்த்தாக்கமுற்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை- ஏற்கனவே அரசியல் பௌத்தம்என்ற நூலை வெளியிட்டிருப்பவர்- சில சஞ்சிகைகளும் வெளியிட்டுள்ளார். அவரது சமுகவியல் கற்கை நெறி அவரது எழுத்துகளில் வியாபகமாகச் சு10ழ்ந்து கொடுள்ளது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இத் தொகுதியில் ஒட்டு மொத்தமாக அவரது சில நிர்மானிப்புகளை வேணும்விளையும்என்று வாசித்த போதுதான் அவரது பிம்பம் பற்றிய என் புரிதல்கள் சில கலைந்து மேலும் சில சேர்ந்து பெறுமதிமிக்க ஒரு புது வடிவம் கிடைப்பதாயிற்று........

 02

போர்க்குணம் கொண்ட ஆடுகள் என்ற இம் மேய்ச்சல் வெளியில் நண்பர் ஜிப்ரி ஹாசன் ääபத்து போர்க்குணம் கொண்ட ஆடுகளை ஓட்டி வந்திருக்கிறார்..... இவை கொம்புகள் முட்டித் தள்ளுவதையும் இரண்டு கால்களால் உயர்ந்து பாய்வதையும் பற்றிப் பேசவும் எழுதவும் இரசிக்கவும் ஏராளமான சங்கதிகள் உள்ளன .... ஆயின் முன்னுரையில் இது பற்றி விரிவாகப் பேச முடிவதில்லை.

 முடிந்த வரை ஒப்பனைகள் நீக்கியää மிகையுணர்ச்சி தவிர்த்தää படிமங்கள் அற்ற எழுத்துää ஜிப்ரிஹாசனுடையது... இதனால்ää பாத்திரங்களின் குனாதிசயக் கலவையை விஸ்தாரமாக விபரிக்க முடியாத ஒரு இடர்பாடு இந்த இடத்தில் ஒரு கதை சொல்லிக்கு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.. பாத்திரமே உரையாடல்களில் ஈடுபடும்போது குணாதிசயம் வெளிப்படச் செய்தல் இலகுவான ஒரு மறை உத்தியாகும். மொழியைச் சிதைத்து.ää கதைகளைச் சிதைத்து.ää மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவது என்னும் புதிர்த்தன்மை கொண்டதாகப் புனைவுகளைப் படைக்க முயற்சிக்கும் ஒரு ரண சிகிச்சையைஜிப்ரிஹாசன் செய்து பார்த்திருக்கிறார்.... இது மீபுனைவுகளின் வெளியை இன்னும் அகலமாகத் திறந்து விடும் என எதிர்பார்க்கலாம்

 கதைசொல்லியையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதக்கூடிய உத்தி இத்தொகுதியிலுள்ள புனைவுகளிலும் தூக்கலாகஉள்ளன. ஜிப்ரிஹாசன் என்ற கதைசொல்லி புனைவுகளில் ஒரு மறைவார்ப்பாளாராகவடிவமைக்கப்பட்டுள்ளார். இது பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறைக்கு சார்பானது.. இந்த முறையை பிடிவாதமாக பேணிக் கொள்ளல் என்பதே அவரது எழுத்தின் ஒரு அசைக்க முடியாத அடையாளமாக உள்ளது.. யாருடைய தயவும் இல்லாமல் தன் எழுத்தை மட்டுமே நம்பி நெடுகிலும் தானே கதையைச் சொல்லியும்ää தானே வாசகனாக இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரிய சிரமமான விடயம்.. மாயப்பொடி தூவும் நடையினருக்கே இது சாத்தியம்.. ஆயினும் அதை இவர் பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறையில் கச்சிதமாகச் செய்துள்ளார் என்பேன்.

 ஜிப்ரிஹாசனின் இந்த உத்தியானது ‘’உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள்’’ என்ற வாதத்துக்கு வலுச் சேர்த்தாலும்.ää இது வாசகன்ஃரசிகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும்ää கதைசொல்லியும் உள்ளிருந்தே தன் உணர்வை வாசகனுக்கு ‘’தந்திர ஊசி’’ கொண்டு ஏற்றிவிடுவதை காணமுடிகிறது... முந்திய நிலையை மறுதலிப்பதாகவும் உள்ளது

 “.....................தமிழ்ச் சிறுகதைகளில் 98 வீதமானவை அரிஸ்டோடிலிய நியம முறையிலான கதை கூறும் முறையில் (யேசசயவiஎந ளவலடந) அமைந்தவையே. அத்தகைய கதைகள் தொடக்கம்”ää “உச்சம்”ää “முடிவுஎன அரிஸ்டோடிலிய மூன்று நியம விதிகளையும் கொண்டிருக்கும். கதைகூறும் முறையில் உலகளவில் ஏற்பட்டுள்ள சமகால மாற்றங்கள் மிகக்குறைந்த அளவிலேயே தமிழ்ச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் உள்வாங்கப்பட்டுள்ளன.....என்று கூறுகிற ஜிப்ரிஹாசன் தன் பல நிர்மானிப்புகளில் இந்த அதி நவீன எடுத்துரைப்பு முறையினைப் பிடிவாதமாகக் கையாண்டுள்ளார்..

எம். சுரேஷ் ஜி சொல்வது போல “ääääääääääääääääääääääääääääääääääநவீனச் சிறுகதைக்கு ஆரம்பம்ää நடுää முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு இது கிடையாது. நவீனச் சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக் கரு என்ற ஒன்று உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் இல்லை... இது ஒரு பிரதியை அதன் ஒற்றைத்தன்மையிலிருந்து விடுவிக்கிறது. கலையை அதன் சட்டகத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாக அலைந்து திரிய அனுமதிக்கிறது. எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விரித்துப் போடுகிறது. . இக்கூற்று ஜிப்ரிஹாசனின் சில சிறுகதைகளுக்கு நெருக்கமாக வருகிறது...

 ஜிப்ரி ஹாசனின் எழுத்துகளில் மகா ஆடம்பரங்கள் இல்லை. அதிக இழிந்த மொழி களும் இல்லை தனது கதைää விளக்கம் மற்றும் பல குறிப்பு விபரங்களை முக்கிய பாத்திரங்களின் இயல்புகளை (டிழைபசயிhiஉயட னநவயடைள ழக உhயசயஉவநசள ) அவற்றின் நடத்தைகள் மூலமே வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். அதில் பல இடங்களில் வெற்றியும் கண்டுள்ளார். நேரடியாக சொல்லப்படும் சில நிர்மானிப்புகளில் தானும் ஒரு பாத்திரமாக ஆகிவிடுவது அவருக்கு சுலபமாக இருந்துள்ளது..

வெறுமனே கற்பனாவாத வெளிப்படுத்துதல்களில் அவருக்கு சம்மதமில்லை என்பதும் ஒரு புழுவுக்கு சிங்காரமான இறக்கைகள் வைத்துப் பார்ப்பதில் அவர் சமரசம் கொள்ளவில்லை என்பதும் புரிகிறது. மற்றது அவர் தன் கதைகளைத் தேடி விண்வெளிக்குச் செல்லவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மேய்ச்சல் வெளியிலேயே வேண்டியளவு மேய்ந்துவிட்டு ஆறுதலாக உட்கார்ந்து அசை போட்டிருக்கிறார்.

 ஜிப்ரிஹாசனின் கதைப் பிரதிகளை படைப்பு அல்லது புனைவு என்னும் சட்டகத்துள் அடக்கலாமா என்பதிலும் எனக்கு தயக்கம் உண்டுää சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேவையானவிடத்து பாவித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம் ..... இதனாலேயே இவற்றை நிர்மாணிப்புகள் என குறிப்பிட்டேன்.

இனி நண்பர் ஜிப்ரிஹாசன் இத்தொகுதியில் மேய்ச்சலுக்குக் கூட்டி வந்திருக்கும் சில போர்க்குணம் கொண்ட ஆடுகளின் கொம்புகளை கொஞ்சம் சீவிப் பார்க்கலாம்.

 03

மெல்லத்துயரினிப்படரும் என்ற புனைவில் ஜிப்ரிஹாசனை நிச்சயமாக நாம் தரிசிக்க முடிகிறது பாலைவனத்துக்குச் செல்லவுள்ள மனிதர்களின் உள்ளார்ந்த இழிநிலை நோக்கு இங்கு பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. கானல் நீரும் காணாத கபோதிகள் நிறைவேற்றும் தீர்மானம் சும்மா இருந்த நம்மையும் அடிப்படைவாதிகளாக்குகின்றன---

மே புதுன்கே தேசய- என்ற கதை ஒரு அற்புதமான புனைவு ஆகும். வெறுமனே புனைவு என்று இதனை சொல்ல முடியுமா... சம்பவங்கள் என்று சொல்லலாம் ... சம்பவங்களாக கதையை நகர்த்திச் சென்ற உத்தி இங்கு வெற்றியளித்துள்ளது ...இடையிடையே தூவியுள்ள மொழி விகடங்கள் புன்முறுவலோடும்- மொழிஅவஸ்தைகள் கோபத்தோடும் உட்பாய்ச்சல் செய்துள்ளன ... உண்மையில் மம்மலி என்ற பாத்திரத்தை நம் தேசத்தின் தமிழ்மொழியில் பணிபுரியும் அரச ஊழியரின் ஒட்டுமொத்தமான ஒரு குறியீடாகவே காண்கிறேன். விகாராதிபதியால் பதிலளிக்க முடியா கேள்விகளுக்கு ஜிப்ரிஹாசனே பதிலளித்து விடுகிறார்ஆத்திரமூட்டும் இந்தப் பதிலை நம்மில் இலகுவாகத் தொற்ற வைக்க ஜிப்ரிஹாசன் எடுத்துக் கொண்ட சொற்கள் மூன்றேமூன்றுதான்...இது பௌத்தரின் தேசம் என்று.- ஆயின் இதற்கு மிகச் சரியான பதில் மே சிங்ஹ-லே தேஷய என்பதுதான்

 நினைவின் மரணம் என்ற கதையில் திடீரென பெண்ணாக மாறிய ஜிப்ரிஹாசனை விநோதமாகப் பார்க்கிறோம். ஒரு ஆண் படைப்பாளி பெண் என்ற நிலையில் இருந்து கதை சொல்வது ஒரு முரண்அணுகல்ஆகும். இதில் பல கதைசொல்லிகள் தோல்வியே அடைந்துள்ளனர். வாஸந்தி ஆணாக இருந்து கதை சொன்னதை இரசித்த வாசக உலகம் பாலகுமாரன் பெண்ணாக மாறி கதை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை... இதே நிலை ஜிப்ரிஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. சில பெண்ணிய நுண்ணுணர்வுகள் ஆண் தன்மை கொண்டு தன்னை அறியாமலே வெளிப்படுதலே இதற்கு காரணம்...இக்கதைக்கு எடுத்துக் கொண்ட கரு கூட மிகச் சாதாரணமானதே....

சலீம்மச்சி- என்ற கதை இன்னொரு சிறப்பான உருவாக்கம் இதில் ஜிப்ரிஹாசன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார். சலீம்மச்சி போன்ற பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் ஓரிருவரையாவது நம் வாழ்வில் சந்தித்தே இருப்போம். தமிழ் சினிமாக்களில் இத்தகையோரை ஒரு இழிந்த நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொள்வர். ஆயின் அவர்களின் மனவேதனை எவ்வளவு ஆழமானது.. சமுகத்தில் அவர்கள் மீது புரியப்படும் உள வன்முறை எத்துனை கொடுமையானது...சலீம்மச்சியின் பரிதாபகரமான முடிவு கண்டு நாம் அனுதாபப்பட்டாலும் கொடூர உலகிலிருந்து சீக்கிரம் அவன் விடைபெற்றது பற்றி ஒரு நிம்மதி அடைகிறோம் ஜிப்ரிஹாசன் மிக இலாவகமான வகையில் இக்கதையினை நகர்த்திச் சென்ற வகையிலும் அவர் பூசியுள்ள மிகையற்ற ஒப்பனையிலும் கதை உச்சம் பெற்றுவிடுகிறது ......

 மீதமிருக்கும் கனவுகளின் ஈரம்.. என்பது ஜிப்ரிஹாசனின் இன்னொரு மயிலிறகு.. எல்லா பல்கலைக்கழக வாழ்விலும் இப்படி ஒரு மயிறகு கிடைப்பதுண்டு..அது குட்டி போடாமலே கருகுவதுமுண்டுää..இப்படி பல கதைகள் படித்தும் கேட்டுமிருந்த போதிலும் ஜிப்ரிஹாசனின் இந்த குண்டூசி அனுபவம் ஒரு இன மாறுபாட்டு காதல்பிரிவாக சுருக்கென்று குத்தும் வலியுடன் உணர முடிகிறது. இதற்கு அவர் தேர்ந்தடுத்த சொற்சுருக்க நடை பெரிதும் கைகொடுக்கின்றது ... ‘’..........இப்படியே போனால் ஒருநாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதிவிடுவாள்...’’ என்று ஜிப்ரிஹாசன் கொஞ்சம் மிகை நினைப்பில் நம்மை பயப்படுத்தினாலும்ää ‘’............அவளுடனானஅந்தஉறவில்மிகவும்அபாயகரமானகட்டத்தைநான்அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னைமீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. ..........’’ என்று நம்மை அனுதாபம் கொள்ள வைத்துவிடுகிறார். ஒரு குண்டூசியால் கீறி ஒரு மயிலிறகால் வருடிவிடும் உத்தி இங்கு நம்மை ஈர்க்கவைக்கிறது

 கம்யுனிஸ்ட் (ஊழுஆஆருNஐளுவு) என்ற கதை ஜிப்ரிஹாசனின் சிங்கள-தமிழ் மையல்விசைக் கதையாகும்- வளாக வாழ்வில் புகுந்த யாழினியின் வார்ப்பு... அவள் மீதான ஒரு ஈர்ப்பை நமக்கு ஏற்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கதை நகர்ந்து செல்கையில் திடீரென அவளுக்கும் சுமனதாச சேருக்கும் இடையில் பொத்துக் கொண்டு எழுந்த காதல் யாழினியின் மீதான வார்ப்பில் ஒரு இடறலை தருகிறது தவிரவும் யாழினி சுமனதாச சேரின் வயதை விசாரித்த போது

‘’..........‘ஒருமுப்பத்தஞ்சி’...‘எனக்குஇருபத்திமூணுஎன்றுவிட்டுசிரித்தாள்.....அந்தச்சிரிப்பில்ஒருகுழைவுஇருந்தது.ஒருகனவுஇருந்தது.ஒருவெட்கம்தெரிந்தது..................’’

என்று ஜிப்ரிஹாசன் எழுதும் இந்த இடத்திலேயே கதை முடியப் போகும் தரிப்பிடம் தெரிந்து விட்டது.. போர்க்குணம் கொண்ட பெண் ஒரு பூக்குணம் கொண்டவளாய் மாறியதை அறிந்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில் இதுதான் நிஜத்தில் அங்கு நடந்துள்ளது .................

 இரண்டு கரைகள் ஜிப்ரிஹாசனின் ஒரு இளமைக் கால நட்சத்திரக் கதையாகும்.ääääää போர்க்காலப் பள்ளிக்கூட நாட்களை அதற்கே உரிய திகிலுடன் கூடிய ஒரு வசீகரத்துடன் சொல்லியிருக்கிறார்ää தன்னையே இதில் காண்பிப்பதால் அனுபவ நடை கைகொடுக்கின்றது ...போர்க்கால இயக்கப் பொறுப்பாளர்களின் நடத்தைகளில் சில விமர்சனங்கள் இருந்த போதிலும் பல நல்ல செயற்பாடுகளும் சினிமாத் தனமான சில சம்பவங்களும் இருக்கத்தான் செய்தன ...சிங்களப் பாடசாலை தமிழ் பாடசாலை ஆகியதும் தமிழ் முஸ்லிம் கலவன் பாடசாலை முஸ்லிம் பாடசாலை ஆகியதும் அக்கிராமத்தின் போராதிக்கத்தின் விளைவுகளாகும் ... ‘’..............ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சந்தரப்பங்களிலிருந்து நாங்கள் தூரமாகிவிட்டிருந்தோம். இப்படியே பலநாட்கள் கழிந்ததில் எங்கள் முகங்கள் ஒருவருக்கொருவர் மறந்துபோயிற்று. பள்ளிக்கூடத்தினுள்ளேயே எங்கள் உறவுகள் மடிந்துவிட்டன. அதற்குள்ளேயே எங்கள் கனவுகளும் மடிந்தன. எங்கள் வாழ்வும் அதன் இயல்பை இழந்து போனது...................’’ என்று ஜிப்ரிஹாசனோடு சேர்ந்து நாமும் ஆதங்கப்படுகிறோம்

04

“....நான் புத்தகங்களின் காட்டில் மூளையை அடகு வைத்தவன்---என்று ஜிப்ரிஹாசன் தன்னிலை விளக்கம் தரும் போதும் “.......... ஈழப்படைப்பாளிகள் பரந்த வாசிப்பாளர்களாகவும் மனித வாழ்வை நுணுக்கமாக அணுகுபவர்களாகவும் மானுடத்தை முழுதளாவிய அணுகுமுறைக்குட்படுத்துபவர்களாகவும் மாறாதவரை இந்த நிலைமையை மாற்ற முடியாது...........என்று அவர் விசனிக்கும் போதும் ஒரு எழுத்துப் போராளியாக...போர்க்குணம் கொண்ட ஆடாக அவர் உருமாறி வருவது நமக்குப் புரிகிறது...

“.........புனைபிரதிகளில் புரட்சிகரமான மாற்றங்கள் உள்வாங்கப்படுவதை நான் விரும்புகிறேன். கதைசொல்லிகள் பழைய பல்லவிப் பயணத்தையே நீட்டிக்கொண்டிருக்க வேண்டுமா அல்லது புதிய பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதா என்பது கதைசொல்லிகளின் சுதந்திரத்தின் பாற்பட்டது.ääää’’ää என்று தன்பக்க வாதத்தை முழக்கும் ஜிப்ரிஹாசன் சிறுகதைகள் என்ற பெயரால் சொற்சிலம்பாட்டம் ஆடாமல் அளந்தெடுத்த எழுத்துத் துப்பாக்கியால் பட்பட்டென்று சுட்டு விடுகிற அவரது எழுத்துச் சண்டித்தனத்தை இரசிக்கலாம்...

ஈழத்து சிறுகதை தளம் மீது நண்பர் ஜிப்ரிஹாசன் செய்கிற இந்த எழுத்துப் போர்ப்பிரகடனம் புதிய மேய்ச்சல் வெளிகளை நமக்குத் தரும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.. நண்பர் ஜிப்ரிஹாசனுக்கு நமது வாழ்த்துக்கள்......

2016.06.10

 

 

 

எப்.எம். தவிர்.!----ஆர்.எம். நௌஷாத்

 

எப்.எம். தவிர்.!

ஆர்.எம். நௌஷாத்

 

 

நீண்ட காலத்தின் பின்னர். எனது நன்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவர் இலங்கை அங்கொட மனநலமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்;;;;விற்று அதிர்ந்து போனேன். நன்றாக இருந்த மனிதருக்கு நேர்ந்த கதிபற்றி அறிய நேரே வைத்தியசாலைக்கே சென்று சந்தித்தேன். மனிதர் கட்டிலில் இருந்தவாறே திருதிருவென முழித்துக் கொண்டும் கட்டிலைப் பிராண்டிக் கொண்டும் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டுமிருந்தார். மனைவி பக்கத்தில் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஒரளவு நிம்மதியடைந்தாள். ~~என்ன நடந்தது..?|| என்று கேட்டேன். ~~பெரிசா ஒண்டுமில்ல தம்பி.. இந்த மன்ஸன் போன கிழமயெல்லாம் பரபரப்பான செய்திகள் கேட்கவேண்டுமென்று ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்தவர்.. குறிப்பாக ~அப்பம் எப்.எம்.| என்ற வானொலிஅலைவரிசையைத் தொடர்ந்து ஒரு கிழமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்..திடீரென்று இப்படி ஆயிற்று...|| என்றாள்.

 ஆகாதா பின்னே..? அமைதியான அதிகாலைப் பொழுதில் 4 மணிக்கு நற்சிந்தனை எதும் கேட்கலாமென்று வானொலியைத் திருகினால் திடீரென கர்ணகடூரக் குரலில் வாத்தியக்கருவிகள் உச்சஸ்தாயியில் அலற உச்சந்தலையில் அடித்தாற்போன்று சுயவிளம்பரப் புலம்பல்.. ~~....ஙாக்ககாகா..ய்..கூ..ய்... நான்தான்டா தல.. எனக்கில்லை நிகர்.. இது அப்பம் எப்எம்...! ங்கா...ய்.. கூ...ய்.. நான்தாண்டா தல..|| இப்படி 17 தடவைகள் காட்டுக் கூச்சல்.. பின்னர் உடனடியாக புதுப்;பாடல்... தமிழகத்தின் புதிய கற்றுக்குட்டிகள் (தமிழகத்திலிருந்து எது வந்தாலும் அது வேத மந்திரம்) இசையமைத்த (?) இசைஞானமற்ற ரீமிக்ஸ் (மறுகலவை) பாடல்கள்... இப்;படியே 3 மணித்தியாலங்கள் மாறி மாறி செவிப்பறைகள் கிழியக்கிழிய ~அதிகாலை அமுதம்| பொழிவார்கள்....

 அப்புறம் 7 மணிக்குச் செய்திகள்.. என்று அதிபயங்கரமான ஒரு குரல் ஒலிக்கும். தொடர்ந்து வாத்தியக்கருவிகள் வீரிட்டலற ~உடன் செய்திகள் முந்தித் தருவது நாங்கள்தான்...| என்ற பெருமையுடன் பயங்கரமான ஒலியில் காட்டுக்கத்தல் முடிந்ததும் படுவிளம்பரப் பாணியிலான வாசிப்பு...~~சன்னாத்திபத்தி வெள்ளிநாட்டுவ்வ்விஜ்யம்.. இல்லங்கய்யில் சம்மாதான்னப் பேச்சுவர்த்தை..|| இப்படியான உச்சரிப்புகளுடன் 3 நிமிடச் செய்திகள் இடைவிளம்பரங்களோடு சேர்த்து 30 நிமிடங்கள்.... அப்பாடா செய்திகள் முடிந்ததா.. மறுபடி சுயவிளம்பரம்.. மறுபடி செவிகிழிப் பாட்டுக்கள்..

 8மணி ஆனதும் வானொலி நேயர்கள் தொடங்கி விடுவார்கள்.. ~~ஹல்ல்ல்லலோ வணக்கம்..! ஏன் சுணக்கம்.. நன்னாயிரிக்கறீங்களா..? அங்க மழை பெய்கிறதா..? இல்லை ஸேர்..! வெயில் அடிககிறது.. அப்படித்தானே....? இல்லை ஸேர்..! அப்படியானால் மப்பும் மந்தாரமுமா..? ஓமோம் ஸேர்..! உங்கட பொழுதுபோக்குகள்..? அப்பம்எப்எம் கேட்டல்.. நாய்வளர்த்தல்...! சுட்டித் தம்பியம் நாய்க்குட்டியும் நன்னாயிரிக்கிறீங்களா..?--- இப்படி நாட்டுக்கு அதிமுக்கியத்துவமான பற்பல கேள்விகளை அரி-விற்பாளர்கள் கேட்டுத் தள்ள.. நேயர்களும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு தன்; பங்குக்கு ஏதோ அறிவிப்பாளர்கள் என்ற தேவ உலகத்தினருடன் பேசும் பிரமையுடன் பேசித் தள்ள....

இனி வானொலி மூடும்வரை இதே வேலைதான். ~~ஹல்லோ..புஸ்பாராணி..? ம்.... அண்ணா..! கணவர் வெளிநாட்டிலா...? ம் அண்ணா..!.. உங்கள் (புதுவருடப்) பணியாரம் எப்படி..? எனக்குத்தருவீங்களா..? ;க்கிக்க்கிக்கீய்... புஸ்பராணி நான் உங்களுக்கு இப்ப குத்து தருகிறேன்.. ஆமாம்..இதோ.. பாடல்...! அடுத்த நேயரை இணைக்கிறோம்.. ஹெல்லலோவ்.. மாயாவா.?. ஓம் சேர்..! அங்க காலநிலை எப்படி..? மழையா... இல்லை சேர்..! வெயிலா...? இல்லை சேர்..! சரிசரி.. சாப்பிட்டீங்களா..? ஒம் சேர்..! யார்யாருக்கு பாடல் வேண்டும்..? சேர்.. உங்களுக்கும் மற்றும் எங்கட அப்பா..அம்மா..தம்பி.. தங்கை.. மச்சினி.. அம்மம்மா.. பாட்டன்.. பாட்டி.. மற்றும் கலையுலக நண்பர்கள்.. எண்ட ~பெஸ்ற் பிரண்ட்| திவ்யா மற்றும் அவட கஸ்பெண்ட்.. அன்டடி.. பிரதர்.. சிஸ்டர்..அங்கிள்..மற்றும் எங்கட ~ஸ்கூல்மேற்று|கள் மாலா தாலா பாலா.. ஊலா மற்றும் என்னை விரும்புவோருக்கும் ..மற்றும் நான் விரும்புவோருக்கும்... மற்றும் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும்.. இதோ அனைவருக்குமாக வருகிறது.. குத்து படத்த்pல் சிம்பு பாடிய ரீமிக்ஸ் பாடல.;.. அதற்கு முன் இன்னொரு நேயர் இணைகிறார்.. யாரென்று பார்ப்போம்.. ஹெலோ.. ? அலோவ் சேர். நான் பசறிச்சேன பரிது.. ஙா.. எங்கட அபிமான நேயர்.. அங்க மழையா.. ஒம் ஸேர்.. வெயில் இல்லை அப்படித்தானே..? ஓம் சேர்.....................

இப்படியே நாள் முழுவதும் இதே பாணியிலான பேச்சுக்கள்.. காட்டுக் கத்தல்கள்.. இதனை ஒரு மனிதன் ஒரு வார காலமாகத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடிக்காமலிருக்குமா என்ன..?

௦௦௦௦

செல்லிடம் பேசேல். ஆர்.எம்.நௌஷாத்

 

செல்லிடம் பேசேல்.

ஆர்.எம்.நௌஷாத்

 

கையடக்கத் தொலைபேசி புழக்கத்தில் வந்த பிறகு மனிதனின் நிம்மதி விடைபெற்றுப் போய் விட்டது. மலிந்து பொய் விட்ட விரசங்கள் காரணமாகப் பெற்றோர் பதைபதைக்கிறார்கள். வணக்கத்தலங்க்ள் மயானங்கள் அரச தனியார் நிறுவனங்கள் வீதிகள்...வாகனங்கள்.. எங்கெங்க காண்கினும் செல்போன்களின் விதவிதமான அலறல்கள் செவிப்பறைகை மேததுகின்றன. காயப்படுத்துகின்றன. பார்க்கப்போனால் நாம் ~~ஹலோ|| என்று உச்சரிக்காத ஒரு நாள் கூட இல்லை.

 குக்கிராமத்தில் வசிக்கம் வாலிபனும் மன்செஸ்டர் மாநிலத்தில் வதியும் யுவதியும் பக்கத்து வீட்டார் போல அரட்டையடிக்கின்றனர். எல்லா வீடுகளிலும் இல்லத்தரசிகள் புடவை நகை வியாபாரம் பேசுகிறார்கள்.. மாணவர்கள் சர்வ சாதாரணமாக ஆபாசம் பார்க்கிறார்கள்.. அரச அதிகாரிகள் வீட்டிலிருந்தபடியே அலுவலக நிருவாகம் செய்கிறார்கள்.. நர்சரி படிக்கும் ~பொடி| கூடப்படிக்;கும் இன்னொரு குஞ்சுடன்; மழலை கதைக்கிறது... பாட்டனும். பாட்டியும் பல்லுப் போனாலும் ~செல்லு|ப் போகவில்லை என்று பொக்கைமொழியில் பழங்கதைபேசி மகிழ்கிறார்கள்...

 எல்லாம் இருக்கட்டும்.. பாமரர் மத்தியில் செல்போன் திடுமெனப் பிரவேசித்ததில் ஏற்பட்ட ~அல்லோ..|~ஹல்லோ|லம்.. தாங்க முடியவில்லை.. ஒரு பாமரத் தந்தை தூரத்து விடுதியில் தங்கியிருந்த தன் மகளுக்கு ~செல்|பேச பல தடவைகள் முயன்றார்.. நீண்ட நேரமாக இணைப்பு இல்லை. அழைக்கும் போதெலல்லாம் ஒலிப்பதிவுக் குரலில் ~~கருணாகரண்ட பஸ_வ அமத்தண்ன...| என்று சிங்கள மொழிஒலி கேட்ட போதெல்;லாம் பயத்தில் கிறீச்சிட்டுக் கத்திய அவர் நீண்ட நேரத்தின் பின்னர் இணைப்புக் கிடைத்ததும் ~~அலோ.. மகளே..ய்.. மகளே.. கருணாகரண்ட பஸ்ஸ அமத்திப் போட்டாங்களாம்.. பஸ்ஸில வாராதடி புள்ளே..ய்.. இறங்கடி.. இறங்கடி..|| என்று அலறிய அலறலில் ஒரு கிராமமே இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறது.

 இப்படித்தான் செல்பேசியில் பொய்;பேசிய என் அவலக நண்பர் பெரியவரிடம் அகப்பட்ட கதை சுவாரஸ்யமானது. பெரியவரிடம் கொழும்புக்குச் செல்வதாகப் பொய் சொல்லி விட்டு வீட்டில் ஹாயாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவருக்கு பெரியவர் செல்N;பசியில் ~~ஹலோ எங்கேயிருக்கிறீர்;கள்..?|| எனறு கேட்டதும் ~நான்; இப்ப ~பெற்றா|வில் இருக்கிறேன் ஸேர்.!| என்று சொல்லிவிட்டார். பெரியவரும் மகிழ்ந்து போய் ~~மிகவும் நல்லதாகப் போயிற்று. நானும் ~பெற்றா|வில் இன்ன இடத்தில் நிற்கிறேன்.. இப்போதே இவ்;விடத்திற்கு வா.. காத்திருக்கிறேன்.!|| என்றார். இது கேட்டதும் வியர்த்து விறுவிறுத்துப்; போனார் நண்பர். பின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கெட்டு தான் ஊரிலிருப்பதாக தடுமாறிச் சொல்லி முடித்தார். பெரியவரும் அசராமல் தானும் ஊரிலேயே இருப்பதாகவும் உண்மையை அறியவே போல் எடுத்ததாகவும் சொன்னார். நண்பர் அதிhசச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பட்டபாடு...

 தவிரவும் ஐந்து வருடங்கள் முன் சவுதிஅரேபியா போய் வந்த ஒரு இளைஞன் வீட்டில் தனது ~செல்|லை பெருமையுடன் காட்டிய போது பாட்டி சர்வசாதாரணமகப் பாவித்த ~~மிஸ்கோல்.. மெஸேஜ்.. இன்பொக்ஸ்... சர்ஜர்.. கவரேஜ்.. ரிங்டோன்..|| போன்ற சொற்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தே போனான்..

 ~ரிங்டோன்| என்றதும்தான் ஞாபகம் வருகிறது. இந்த அழைப்பு மணியின் விதவிதமான ஒலிகளினால் எற்படுகிற ~சூழல் மாசடைவை|த் தடுக்க ஒரு சட்டமும் இல்லையா என்றால் இல்லை.. இது எந்தளவிற்குப் போயிற்றென்றால் பாருங்கள் சும்மா ஒரு அப்பாவியாக எனது சம்பளப் பணத்தைப் பெற வங்கியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். என்; முன்னால் நின்று கொணடிருந்த ஒரு வாலிபனுக்குத் திடீரென்று எதிர்பாராதவிதமாக நீண்ட ஒலியுடன் ~~... ப்ப்ப்ர்ர்hhரென்று|| பின்பக்கமாகக் காற்றுப் பிரிந்து வி;ட்டது. திடீரென்று குசுப் பறிந்ததில் வெட்கப்பட்டுப் போவான் பாவம் என்றெண்ணிய நான் லேஞ்சியால் மூக்கைப் பொத்துவதை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்ட அதே கணத்தில் மேலும் இரண்டு தரம் ~~..புர்ர்ர்;க்... ;புர்ர்ர்;க்...||கென்று இரண்டு தரம் பறிந்துவிட்டது. ஆனால் அவ்வாலிபனோ சற்றும் கவலைப்படாமல் தன் காற்சட்டையின் பின்புறத்திலிருந்து தனது செல்போனை எடுத்து ~புர்ர்hக்க்க்... புர்ர்hக்க்க்|கென்ற தனது ~பேவரிட் ரிங்டோ|னை அமர்த்திவிட்டு ~ஹலோ..|என்றான். அவனது செல்பேசியின் அழைப்புமணியோசைதான் அந்தக் குசுப்பறிந்த சத்தம்... என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..! என்ன செய்வது எல்லோருடனும்தான் வாழவேண்டியிருக்கிறது.00

000

 

மஷூறா சுஹுர்தீன் அறிமுகம் ----- ஆர்.எம்.நௌஷாத்

ஜீவநதி

  

பெண்ணுணர்வுகளை நசித்துப்போட்டு தன்னை நிலை நிறுத்தும் முகமூடிகளின் முகத்திரை கிழிப்பதிலும் எனக்கெந்த மறுதலிப்புகளுமில்லை.      மஷூறா சுஹுர்தீன்

ஆர்.எம்.நௌஷாத்

----------------

 

  அறிமுகம்.

‘.......கருத்துச்சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறதுதான். எதையும் பத்தாம்பசலித்தனமாக அல்லது அர்த்தமற்ற மரபுவழிச்சிந்தனைகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு கொடி காட்டக்கூடாது.காலம் எவ்வளவோ மாறிவிட்டது.மதரீதியான கோட்பாடுகள் எதார்த்தங்கள் தவிர மற்றெல்லாமே மாறக்கூடியன.கண்மூடித்தனமாக நம்புகிற தலைமுறை இன்றில்லை.சாத்தியப்பாடுகளை மட்டுமே சிந்திக்கிற தலைமுறை இது. தத்தமது சுயநலங்களுக்காகவகுத்துக்கொண்ட அல்லது வரிந்து கொண்ட கொள்கைகள் இன்று சோரம் போய்விட்டன.அவற்றை இன்னும் ஆதாரமற்று தூக்கிப்பிடித்துக் கொண்டு கோசம் போடுவதில் பிரயோசனம் ஏதுமில்லை.

 

பெண்ணில்லாத வாழ்க்கைஒரு ஆணினால் வாழவே முடியாது. ஆணில்லாத வாழ்வை ஒரு பெண்ணும் வாழ இயலாது.எப்படிக் கூவினாலும்கொக்கரித்தாலும் ஒன்று இன்னொன்றுக்குள் அடக்கம் என்பதை மாற்றவியலாது. மறுக்கவியலாது. தேடித்தேடி குறைகளையும் குற்றங்களையும் கண்டு பிடிப்பதில் நன்மையேதுமில்லை. இவ்வாறு எதார்த்தம் புரியாதவர்களின் வாழ்வே இன்று நரகலோகமாகி காதிக்கோடுவரை கைகட்டி நிற்கிறது. விவாகரத்துக்கள் இன்று மிக மலிந்துவிட்டகாரணமும் இவர்களது ஈகோதான். அர்த்தமில்லாத கோசங்களைப் போடுவதை விடுத்து ஆணோ பெண்ணோ புரிந்துணர்வுடன் எதிர்ப்பாலாரை எதிர்கொள்வது சிறந்த பலனைத்தரும்......’’’

 என்று ஆணித்தரமான முறையில் தன கருத்தைக் கூறும் சம்மாந்துறை மஷூரா’ 1982 களில் தென்கிழக்குப் பிரதேசத்தில் இருந்து எழுந்த ஒரு புதிய இலக்கியக் காட்டாறு... தந்தை அப்துல் மஜீத், தாய் சுபைதா... அக்காலத்தில் சம்மாந்துறை மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்தியவர். திருமணத்தின் பின் மஷூரா சுஹுறுத்தீன்என்ற பெயரில் எழுதி வருகிறார்... மாவடிப்பள்ளி அஷ்ரப் மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்...

 பல இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்கள் தம் திருமணத்தின் பின் எழுத்துத் துறைக்கு முழுக்குப் போடுவதே வழக்கம்.. எனினும் மஷூரா எழுத்தை விடவில்லை.. தன கணவர் சுஹுர்தீனின் நெஞ்சார்ந்த ஒத்துழைப்புடன் தன எழுத்துப் பணியை தொடர்கிறார்...

 இலங்கையிலும் கடல்கடந்தும் வெளியாகும் பெரும்பாலான தினசரிகள், சிற்றிதழ்கள்,மின்னூடகங்கள் என்பன இவரது எழுத்துக்கள் பிரசுரமாகி கவனிப்புப் பெற்றுவருகின்றன... எழுவான் கதிர்கள்.. சொல்லாத சேதிகள்.. உயிர்வெளி.. பெயல் மணக்கும் பொழுது,,, கண்ணாடி முகங்கள்.. மருதூர்க் கொத்தன் மீள்தல்.. ஓடும் நதியைப் பாடும் மலர்கள்,,, நதியைப்பாடும் நந்தவனம்... ஆகிய பல கவிதைத் தொகுதிகளிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன... தவிரவும் sithy mashoora suhurdeen என்ற தனது முக நூலில் தன் யதார்த்தமான மன ஓட்டங்களை பதிவு செய்தும் வருகிறார்.

 கவிதை, சிறுகதை, நாடகம், சித்திரக் கதை, ஓவியம் என்பன மஷூறாவின் ஈடுபாட்டுத் துறைகள் ஆகும்...

 மஷூராவின் இலக்கியச் செயற்பாடுகள் மிக நீண்டவை.. தொடர்ச்சியாக முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழிலக்கியத் துறையில் தன் பங்களிப்பை வழங்கி வருவது ஒரு இஸ்லாமியப் பெண்ணைப் பொறுத்தவரையில் ஒரு அபூர்வமான சாதனைதான்....

 இவரது எழுத்துப் பணிகளுக்கு பெற்றோர்கள் எவ்வித தடைகளும் விதிக்கவில்லை என்பதும் வாய்த்த கணவரும் அவ்வாறே இருப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாகும்..

 தன் பாடசாலைக் காலத்தில் எழுத்துத் துறையில் சில இருட்டடிப்புக்கள்,தடைக்கற்கள் என்பவற்றை எதிர்கொண்ட மஷூரா , ‘’வளரும் ஒரு செடியை கிள்ளிப் போட்டால் அது தன் கிளையிலாவது அரும்புவிட்டு முன்னரை விட வேகமாக வளரும் நிலை’’யை தன்னுணர்வாகக் கொண்டு மேலெழுந்தவர்... அந்தப் போராட்டக்குணம் இன்றும் இவரது படைப்புகளில் முனைப்புப் பெற்றுள்ளதை காண முடிகிறது... எனினும் தன் சமயக் கோட்பாடுகளை அதற்கே உரித்தான கலாசாரப் பண்பாடுகளை மீறி எழுதி புகழ் பெறும் போலித்தன்மையை வெறுக்கிறார்... தன படைப்புகள் இஸ்லாம் காட்டும் நெறியின் அடிப்படையில் அமையுமாறு கரிசனை கொண்டுள்ளார்.

 சம்மாந்துறையின் முது பெரும் கவிஞரான மாறன்,யூ.செயின்..இவரது குடும்ப முதுசம் ஆவார்.

 செயற்பாடுகள்.

1982 களில், ‘நிறைமதிஎன்ற ஒரு கையெழுத்துச் சஞ்சிகையுடன் தன் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த மஷூரா, அக்கினி கவிதை இதழ், (1985), புன்னகை நினைவுமலர்..(1986), யௌவனம். (1990) , அலவாக்கரை. (1990—2000), புதையல். (1996), என் இனிய வாழை மரமே.. (2001), சுடர். (2001), நாற்று. (2006), ஒளியைத் தேடும் நிழல்கள். (2007), விதியை வென்றவன். (2008), நந்தவனம். (2010), மொட்டு. (2010), பேசும் பொற்சித்திரங்கள். (2011),பாடும் வானம்பாடிகள்.(2011) , உப்பட்டி. (2012) ,பூந்தாளி. (2012) , ஓட்டோகிராப். (2013) ,பெயல் (2014), பொகில். (2015) , முதலான பல்வேறு நூல்கள், சிறப்பு மலர்கள், சஞ்சிகைகளுக்கு ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் பங்களித்துள்ளார்...

 வாழ்வோரை வாழ்த்துவோம், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு, இலங்கை தமிழிலக்கிய வளர்ச்சி, மல்லிகை, வார முரசொலி, யாத்ரா, THE ISLAND, போன்ற பல நூல்களில் இவர் பற்றிய பல்வேறுபட்ட குறிப்புரைகள் இடம்பெற்றுள்ளன...

 மஷூரா சுஹுர்தீன், 1991 இல் தேசிய இளைஞர் சேவை மன்றம் நடத்திய பாடலாக்கப் போட்டியிலும், 1993 இல் சுதந்திர இலக்கிய விழாவில் பாடல் இயற்றல் போட்டியிலும், 1997 இல், கல்வி அமைச்சு நடத்திய கவிதைப் போட்டியிலும், 2001 இல் இலங்கையர்க்கோன் நினைவு சிறுகதைப் போட்டியிலும் 2007 இல் ஜனவபோத கேந்திரயஅமைப்பின் நாடகத் தயாரிப்பு நிகழ்ச்சியிலும், பற்பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றேடுத்துள்ளார்...

தவிரவும், நிறைமதி கலை இலக்கியக் கழகத்தின் ஸ்தாபக தலைவராகவும், சம்மாந்துறை தமிழ் சங்கத்தின் செம நல செயலாளராகவும், படர்க்கைகள் இணைய அமைப்பில் உப தலைவராகவும் இருந்து தன் தமிழ்ப் பணியை திறம்பட ஆற்றி வருகிறார்...

 விருதுகள், சிறப்புகள்..

2002 இல் தென் கிழக்கு ஆய்வு மையம் சிறந்த இளம் இலக்கியவாதி என்ற நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது..,,,2004 இல் தினச் சுடர் பத்திரிகை சிறந்த கவிஞருக்கான சான்றிதழ் அளித்தது... 2007 இல் ஜனவபோத கேந்திரயஅமைப்பு சிறந்த நாடகத் தயாரிப்புக்காக விருதளித்து.. 2008 இல் சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவு மகளிர் தின கெளரவம் அளித்தது..2009 இல் நிந்தவூர் ஆர்.கே.மீடியா இலக்கியப் பங்களிப்புக்காக தங்கப் பதக்கம் அளித்தது..

2009 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமசிறி கலாஜோதி பட்டமளித்தது.. 2009 இல் சம்மாந்துறை பிரதேச செயலக சாகித்திய விழாவில் இலக்கியப் பணிக்காக நினைவுச் சின்னமும் சான்றிதழும் அளித்தது.. 2011 இல் மலையாக கலை கலாசார சங்கம் இரத்தினஜோதிஎனும் பட்டமளித்தது.. 2014 இல் ஹிஸ்புல்லா பௌண்டேஷன் இலக்கியப் பணிக்காக பொற்கிழியும் விருதுமளித்துக் கௌரவித்தது... 2015 இல் ஒற்றுமைப்பாலம் அமைப்பும் மஷூராவின் தமிழ்ப் பணியைப் பாராட்டி சான்றிதழ் அளித்தது .. 2016 இல் சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டமும்,கல்முனை பாவலர் பண்ணையும் இணைந்து மதுரக் கவிதாயினி என்னும் பட்டமளித்தன இன்னும் பல நிறுவனங்களும் இலக்கிய அமைப்புகளும் இவரைக் கௌரவித்துள்ளன...

முடிவாக

‘’.........கலாச்சார மீறல்களில்குளிர் காய்ந்துபெயருக்கும் புகழுக்கும்என்னால் எழுத முடியாது.. .பெண்மையின் வரைவிலக்கணத்தை மீறிஎழுதுதலில் எனக்கு எப்போதும் எனக்குஉடன்பாடு இல்லை.. .உண்மைகளை பட்டென உடைப்பதில்தயக்கமுமில்லை.பெண்ணுணர்வுகளைநசித்துப்போட்டு தன்னை நிலை நிறுத்தும் முகமூடிகளின்முகத்திரை கிழிப்பதிலும் எனக்கெந்த மறுதலிப்புகளுமில்லை.உள்ளதை உள்ளபடிஉரைப்பதிலும்பின் வாங்கேன்.எனினும்என் கலாச்சாரத்தைமீறலாலும் பெண்ணியல்பை புதைப்பதாலும் புகழ் வருமெனின் எனக்கது தேவையுமில்லை. என் படைப்புகளை வழிநடாத்த எனக்கெந்தச் சாரதியுமில்லை. நான் தனித்துவமானவள்.ஆனாலும் எதார்த்தவாதி......’’

என்று தன்னைப் பற்றிய விம்பத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் மஷூரா சுஹுர்தீனின் யதார்த்தமான படைப்பிலக்கியப் பணி மேலும் தொடர நமது வாழ்த்துக்கள்.....