Sunday, March 29, 2026

கிண்ணியா ஃபாயிஷா அலியின், ‘பேரன்பே’ கவிதை தொகுதி பற்றிய ஓர் அறிமுகம்

பேரன்பின் ஒளி ஊடறுத்து செல்லும் கவிதைகள்....

00

ஃபாயிஷா அலியின் கவிதைகள் பேசும் மொழி மிகவும் எளிமையானது.. உயிரினங்களின் உள்ளங்களில் ஆழ ஊடுருவும் அன்பின் மொழி அது. ஒப்பனைகளும், பாசாங்குகளும் இல்லாது, அன்பெனும் அற்புதம் பூசிக் கொண்டும், பேசிக் கொண்டும் தம்மை உயிரின உபாசகத்தில் நிலை நிறுத்துபவை.

உயிர்களின்  வாழ்வியலின் ஆழ்ந்த உணர்வுகளுள் மிக மென்மையானதும், அதே நேரத்தில் மிக வலிமையானதுமான ஒன்று பேரன்பாகும். அது ஒரு சொல் மட்டுமல்ல; அது ஒரு நிலை, ஒரு உணர்ச்சி, ஒரு வாழ்வியல் தத்துவம்..இவற்றையே மையச் சரட்டாகக் கொண்டு,  இழைகளாகப் பின்னப்பட்டுள்ள 108  கவிதைகளிலும்  ஃபாயிஷா அலி  தன் ஆன்மிக மேன்மையை  பரவலாக தெளித்துச் சென்றிருக்கிறார்.

பேரன்பின் பல்வேறு முகங்களைக் காட்சிப்படுத்துதலில் மட்டுமன்றி, . கவிஞரின் அகவிழியால், உணரப்பட்ட  அனுபவங்களும், உணர்ச்சிகளும், வாழ்க்கை நுணுக்கங்களும் இங்கு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

‘’....நூற்றாண்டின்/பேரழுகையுடன்/இக்கையாலாகாதவள்/இருகரமேந்துகிறேன்/ரஹ்மானே/ உன்னால் வாக்குறுதியளிக்கப்பட்ட/ அந்த ஷாம் தேசத்திற்கான/ நற்செய்தியை/ என் வாழ் நாளிற்குள்ளேயே / ஒரு விடியலாகக் கசிய விடு/ ஒளிர விடு/ வல்ல ரஹ்மானே....’’

என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்யும் ஒரு அன்புமனம் அந்த தேசத்தின் அத்தனை மனிதரையும் அரவணைத்து நிற்கிறது.. ‘’.....பேரன்பின் முழு வடிவம் பிரார்த்தனை...’’ என்று ஃபாயிஷா அலி சொல்வது உண்மை.

 தவிரவும், பேரன்பே... என விழிக்கும் போதேஅந்தக் குரலின் வாஞ்சையில்  இவரது கவிதையின் பட்டுச் சிறகுகள் மனதில் பட்டுத் துளிர்க்கும் அன்பின் வர்ணங்கள் எத்துனை அழகானவை.

‘’..... நீருக்குள்/ முதற்கலம் முகிழ்க்கு முன்னே /புலனுணரா/ ஆலமுல் அர்வாவில்/ ஆகவும் பிடித்த ஆன்மாவான/ உன்/ மாய விரல்களைப்/பற்றியலைந்திருக்கக் கூடும்/ எஞ்சிய பூக்களாலான/ இவ்வுரையாடல்களை/ ரகசியமாய்ப் பத்திரப்படுத்துகிறேன்/ அதே பொன்விரல்கள் கோர்த்துநகராத அக்காலங்களுக்குள்/  மறுபடியும்/ வாழ்ந்து /நிலைத்திட/ அன்பே/பேரன்பே..../

முக்காலங்கள் மட்டுமல்ல எக்காலங்களும் தொடர்கிற அன்பின் வெளிப்பாட்டுக் கோலங்களுக்கு மேற்படி வரிகளை விட வேறென்ன சான்று வேண்டும்..? 

அன்பு பல வடிவங்களில் வெளிப்படலாம்தாய்மை, தோழமை,, காதல், படைப்பினங்கள் மீதான பாசம்..மனித நேயம் எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. இவ்வனைத்தையும் தாண்டி, எல்லைகளை மீறி, உயிர்களை இணைக்கும் ஒரு பெரும் சக்தியே பேரன்பு என்பதை உணர்த்துவதில், கவிஞர் எடுத்துக்  கொள்ளும் அபரிமிதமான  முயற்சி  இக்கவிதைகளில் செறிந்து நிற்கிறது.

‘’.....முழு உலகிற்குமாய்/ ஒளிர முற்படும்/நிபந்தனையற்ற/ பேரன்பின்/ ஆதி வெளிப்பாடு..../ என்று தாய்மடியை நூலாசிரியர் அகராதிப்படுத்துகையிலும் அந்தப் பேரன்பு  விகசித்துப் பாய்ந்து நம்மை ஆட்கொள்கிறது.. தொகுதியில்  கோர்க்கப்பட்டுள்ள பெரும்பாலான கவிதைகள் இத்தகைய பேரன்பின் பல்வேறு  பரிமாணங்களைக் காட்சிப்படுத்துகின்றன..

‘.....’கைவிடப்பட்டு நிராதவராய் இருளுக்குள்  தொலைந்தோரின்  வாழ்க்கையைத் தம்  எதிர்பார்ப்பற்ற பேரன்பால் ஒளிர்வூட்டிய  தூய ஆன்மாக்கள் அனைவருக்கும்...’’  இக்கவிதைகளை சமர்ப்பணம் செய்திருக்கும்  நூலாசிரியர், இதில், ஒளிர்வூட்டிய என்று இறந்த காலத்தில் மட்டும்  சொல்லாமல்  ‘’ஒளிர்வூட்டும்’’ என்று பொதுக் காலத்தில் சொல்லியிருக்கலாம்.

‘’........சுய கவிதைத்துறை வகைமையில்  இது என்னுடைய  நான்காவதும், கடைசியுமான தொகுப்புகவிதை எழுதியது இனிப் போதும்.....’’    என்று      ஃபாயிஷா அலி  தன் உரையில் ஒரு ஈரானிய ஏவுகணையை நம்மை நோக்கி ஏவி விடுகையில் அசந்துதான் போனோம்.. ஆனால், அன்பின் ஒளிப் பொட்டுக்கள் அபரிமிதமாய் சிதறி  அவரை ஆட்கொள்ளும் போது, கவிதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட ஃபாயிஷா அலியால் முடியும் என நான் நினைக்கவில்லை..

சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள்எஸ்.ஃபாயிஸா அலி கவிதைகள்,  கடல் முற்றம்ஒளிப் பொட்டுக்களாய் உருமாறி, சிங்காரச் சிட்டுக் குருவிதொலைதூர மின்மினிவகுப்பறைக்கு வெளியே,  வாசிப்பு ஊற்றுஆகிய நூல்களை ஆக்கித் தந்துள்ள  இந்நூலாசிரியரின் பத்தாவது நூல இது.

மூதூர் JMI பப்ளிகேசன் நிறுவனத்தின் அழகிய தயாரிப்பில், இஹ்ஷானின் நேர்த்தியான தளக் கோலத்தில்ரூ:6 /- விலையில், கிடைக்கிறது ‘’பேரன்பே.’’ Top of Form

Bottom of Form

00

ஃபாயிஷா அலியின் கவிதைகள் பேசும் மொழி மிகவும் எளிமையானது.. உயிரினங்களின் உள்ளங்களில் ஆழ ஊடுருவும் அன்பின் மொழி அது. ஒப்பனைகளும், பாசாங்குகளும் இல்லாது, அன்பெனும் அற்புதம் பூசிக் கொண்டும், பேசிக் கொண்டும் தம்மை உயிரின உபாசகத்தில் நிலை நிறுத்துபவை.

உயிர்களின்  வாழ்வியலின் ஆழ்ந்த உணர்வுகளுள் மிக மென்மையானதும், அதே நேரத்தில் மிக வலிமையானதுமான ஒன்று பேரன்பாகும். அது ஒரு சொல் மட்டுமல்ல; அது ஒரு நிலை, ஒரு உணர்ச்சி, ஒரு வாழ்வியல் தத்துவம்..இவற்றையே மையச் சரட்டாகக் கொண்டு,  இழைகளாகப் பின்னப்பட்டுள்ள 108  கவிதைகளிலும்  ஃபாயிஷா அலி  தன் ஆன்மிக மேன்மையை  பரவலாக தெளித்துச் சென்றிருக்கிறார்.

பேரன்பின் பல்வேறு முகங்களைக் காட்சிப்படுத்துதலில் மட்டுமன்றி, . கவிஞரின் அகவிழியால், உணரப்பட்ட  அனுபவங்களும், உணர்ச்சிகளும், வாழ்க்கை நுணுக்கங்களும் இங்கு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

‘’....நூற்றாண்டின்/பேரழுகையுடன்/இக்கையாலாகாதவள்/இருகரமேந்துகிறேன்/ரஹ்மானே/ உன்னால் வாக்குறுதியளிக்கப்பட்ட/ அந்த ஷாம் தேசத்திற்கான/ நற்செய்தியை/ என் வாழ் நாளிற்குள்ளேயே / ஒரு விடியலாகக் கசிய விடு/ ஒளிர விடு/ வல்ல ரஹ்மானே....’’

என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்யும் ஒரு அன்புமனம் அந்த தேசத்தின் அத்தனை மனிதரையும் அரவணைத்து நிற்கிறது.. ‘’.....பேரன்பின் முழு வடிவம் பிரார்த்தனை...’’ என்று ஃபாயிஷா அலி சொல்வது உண்மை.

 தவிரவும், பேரன்பே... என விழிக்கும் போதே,  அந்தக் குரலின் வாஞ்சையில்  இவரது கவிதையின் பட்டுச் சிறகுகள் மனதில் பட்டுத் துளிர்க்கும் அன்பின் வர்ணங்கள் எத்துனை அழகானவை.

‘’..... நீருக்குள்/ முதற்கலம் முகிழ்க்கு முன்னே /புலனுணரா/ ஆலமுல் அர்வாவில்/ ஆகவும் பிடித்த ஆன்மாவான/ உன்/ மாய விரல்களைப்/பற்றியலைந்திருக்கக் கூடும்/ எஞ்சிய பூக்களாலான/ இவ்வுரையாடல்களை/ ரகசியமாய்ப் பத்திரப்படுத்துகிறேன்/ அதே பொன்விரல்கள் கோர்த்து/  நகராத அக்காலங்களுக்குள்/  மறுபடியும்/ வாழ்ந்து /நிலைத்திட/ அன்பே/பேரன்பே..../

முக்காலங்கள் மட்டுமல்ல எக்காலங்களும் தொடர்கிற அன்பின் வெளிப்பாட்டுக் கோலங்களுக்கு மேற்படி வரிகளை விட வேறென்ன சான்று வேண்டும்..? 

அன்பு பல வடிவங்களில் வெளிப்படலாம்தாய்மை, தோழமை,, காதல், படைப்பினங்கள் மீதான பாசம்..மனித நேயம் எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. இவ்வனைத்தையும் தாண்டி, எல்லைகளை மீறி, உயிர்களை இணைக்கும் ஒரு பெரும் சக்தியே பேரன்பு என்பதை உணர்த்துவதில், கவிஞர் எடுத்துக்  கொள்ளும் அபரிமிதமான  முயற்சி  இக்கவிதைகளில் செறிந்து நிற்கிறது.

‘’.....முழு உலகிற்குமாய்/ ஒளிர முற்படும்/நிபந்தனையற்ற/ பேரன்பின்/ ஆதி வெளிப்பாடு..../ என்று தாய்மடியை நூலாசிரியர் அகராதிப்படுத்துகையிலும் அந்தப் பேரன்பு  விகசித்துப் பாய்ந்து நம்மை ஆட்கொள்கிறது.. தொகுதியில்  கோர்க்கப்பட்டுள்ள பெரும்பாலான கவிதைகள் இத்தகைய பேரன்பின் பல்வேறு  பரிமாணங்களைக் காட்சிப்படுத்துகின்றன..

‘.....’கைவிடப்பட்டு நிராதவராய் இருளுக்குள்  தொலைந்தோரின்  வாழ்க்கையைத் தம்  எதிர்பார்ப்பற்ற பேரன்பால் ஒளிர்வூட்டிய  தூய ஆன்மாக்கள் அனைவருக்கும்...’’  இக்கவிதைகளை சமர்ப்பணம் செய்திருக்கும்  நூலாசிரியர், இதில், ஒளிர்வூட்டிய என்று இறந்த காலத்தில் மட்டும்  சொல்லாமல்  ‘’ஒளிர்வூட்டும்’’ என்று பொதுக் காலத்தில் சொல்லியிருக்கலாம்.

‘’........சுய கவிதைத்துறை வகைமையில்  இது என்னுடைய  நான்காவதும், கடைசியுமான தொகுப்பு.  கவிதை எழுதியது இனிப் போதும்.....’’    என்று      ஃபாயிஷா அலி  தன் உரையில் ஒரு ஈரானிய ஏவுகணையை நம்மை நோக்கி ஏவி விடுகையில் அசந்துதான் போனோம்.. ஆனால், அன்பின் ஒளிப் பொட்டுக்கள் அபரிமிதமாய் சிதறி  அவரை ஆட்கொள்ளும் போது, கவிதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட ஃபாயிஷா அலியால் முடியும் என நான் நினைக்கவில்லை..

சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள்,  எஸ்.ஃபாயிஸா அலி கவிதைகள்,  கடல் முற்றம்,  ஒளிப் பொட்டுக்களாய் உருமாறி, சிங்காரச் சிட்டுக் குருவி,  தொலைதூர மின்மினி,  வகுப்பறைக்கு வெளியே,  வாசிப்பு ஊற்று,  ஆகிய நூல்களை ஆக்கித் தந்துள்ள  இந்நூலாசிரியரின் பத்தாவது நூல இது.

மூதூர் JMI பப்ளிகேசன் நிறுவனத்தின் அழகிய தயாரிப்பில், இஹ்ஷானின் நேர்த்தியான தளக் கோலத்தில்,  ரூ:6 /- விலையில், கிடைக்கிறது ‘’பேரன்பே.’’ Top of Form

Bottom of Form

No comments:

Post a Comment